Wednesday, April 28, 2021

போட்டோ Graph...ஒரு பார்வை...1

என் மானசீக குரு பாலுமகேந்திரா அவர்களின் ஆசியுடன்  புகைப்படகலையில் நான் கற்றுக்கொண்ட எனது அனுபவத்தை
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

ஓவியங்களில் இருந்து பிறந்தது தான் புகைப்படக் கலை photograph  photo என்றால் லைட்(ஒளி) Graph என்றால் எழுதுதல் ஒளியைக் கொண்டு எழுதுவதுதான் photography. 

ஒரு காட்சியை சாமானியர்கள் பார்ப்பதற்கும் புகைப்பட கலைஞர்கள் பார்ப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கும். 

ஒவ்வொரு புகைப்பட கலைஞர்களுக்கும் ரசிப்பு தன்மை அதிகம் வேண்டும் இது இக்கலையில் மிக முக்கியம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய கவிதைகளை இலக்கியங்களையும் படியுங்கள் இவைகளை மேலோட்டமாக படிக்காமல் பொருள் உணர்வு ஆழ்ந்து படியுங்கள் இவை உங்களுடைய புகைப்படங்களில் தனித்தன்மையை பிரதிபலிக்கும். 

மற்றவர்களின் வித்யாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேடித் தேடி பாருங்கள் ஆனால் அதேபோல் எடுக்க ஒருபோதும் முயற்சிக்காதீர்கள், 

ஒரு காட்சியை பல கோணங்களில் 
வித்தியாசமாக பாருங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள்.
தேடல்களை அதிக படுத்துங்கள் நிறைய இடங்களுக்கு பயணங்கள் செய்யுங்கள் அப்படி செல்லும்போது உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும், நீங்கள் நினைத்த காட்சி கிடைக்கும் வரை விடாதீர்கள் காத்து இருங்கள் நிச்சயம் நாம் நினைத்த காட்சி அமையும் நானும் அப்படி தான். 

ஒளி தொடரும்...
நன்றி
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் அவர்களின் அனுபவ பகிர்வை மற்றவர்பள் பயன் பெற இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்

மிக்க அன்போடு
ஆ.சிவா..