Wednesday, March 31, 2021

சமூகஅறிவியலில் தொழில்நுட்பம்...

வணக்கம் நண்பர்களே..! வெள்ளிக்கிழமை26-03-2021 அன்று  பேரிடர் காலம் சற்று  குறைந்த பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ( ஒரு வருடம் கழித்து  ) நங்கவள்ளி ஒன்றியத்தைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு( Effectieness of free  open source software in Social science ) எபெக்டிவெனஸ் ஆஃ ஸ்ரீ ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என் சோசியல் சயின்ஸ் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 5 கருத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் நானும் ஒருவன் நான் எடுத்துக்கொண்ட தலைப்பு Learning app  இல் Timeline ( காலக்கோடு)  லேர்னிங் ஆப் என்ற பகுதியில் டைம்லைன் பற்றிய எனது வகுப்பு நேற்று சிறப்பாக அமைந்தது .ஆசிரிய பெருமக்களுக்கு லேர்னிங் ஆப் என்றால் என்ன அதில் உள்ள பிரிவுகள் என்னென்ன அதில் உள்ள 22 வகையான வினா அமைக்கும் முறையை விளக்கி கூறப்பட்டது. இந்த ஆன் லையின் செயலி மூலமாக பாடப்பொருள் உருவாக்கவும் மாணவர்களை மதிப்பீடும் செய்ய முடியும் என்பதை சிறப்பாக செய்துகாட்டப்பட்டது. அனைவரும் மகிழ்வோடு கற்றுக்கொண்டார்கள் . கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் பல வினாக்கள் எழுப்பி தங்களது ஐயங்களைப் போக்கிக் கொண்டார்கள். மேலும் காலக் கோடு வரைவது எப்படி காலக்கோட்டில் படங்கள் சேர்ப்பது, ஒலிக்கலவை செய்வது, காணொளிகளை இணைப்பது போன்ற பல தகவல்களை ஆசிரியர் பெருமக்களுக்கு எடுத்துக் கூறினோம். இந்த பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மடி கணினியின்  மற்றும் செயல்திறன் கை பேசி மூலம் செய்து கற்றுக்கொண்டார்கள்... பயிற்சி அனைவருக்கும் பல புதிய யுத்திகளையும் தொழில்நுட்ப அறிவையும் பெற்றார்கள்..அனைவரும்  சிறப்பாக கலந்துகொண்டு செய்து கற்றார்கள் ... தங்கள் கற்ற தொழில் நுட்ப அறிவை வகுப்பறையில் பயன்படுத்துவதாக ஆசிரியர் உறுதி கூறிய நிகழ்வு மறக்க முடியாத தருணம்..மேலும் ஆசிரிய பெருமக்கள் கேட்ட வினாக்கள் சிறப்பாக பதிலளித்து பயிற்சியை அருமையாகவும், எளிமையாகவும், அனைவரும் மகிழும் வண்ணம் முடித்தோம் என்பதில் எங்களுக்கும் மற்றற்ற மகிழ்ச்சி . வாய்ப்பு வழங்கிய  சேலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உத்தமசோழபுரம் முதல்வர் மற்றும்  விரிவுரையாளர் தனம்மாள் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..