அந்த நான்கு மாணவர்களும் தியான பயிற்சியில் இருந்தார்கள்.
ஏழு நாள்களுக்கு
தொடர்ந்து மௌனம்
காப்பது என்று முடிவு
செய்தார்கள்.
முதலிரண்டு நாள்கள்
சரியாகப் போயிற்று.
மூன்றாம் நாள்
எல்லோரும் தூங்க
ஆரம்பித்ததும் விளக்கு
அணைக்கப்படாததை பார்த்த ஒருவன்...
"யாராவது அந்த விளக்கை
அணையுங்களேன்"
என்றான்.
"நாம் பேசக் கூடாது
என்று முடிவு
செய்திருந்தோம்"
என்றான் இரண்டாமவன்.
"நீ இப்போது என்ன
செய்துகொண்டிருப்பதாக
நினைக்கிறாய்?"
என்றான் மூன்றாமவன்.
"நான் ஒருத்தன்தான்
இன்னும் பேசவில்லை"
என்றான் நான்காமவன்.
இதிலிருக்கிற
நகைச்சுவையை மீறி,
ஒரு நீதியை நாம்
பார்க்க வேண்டும்.
சட்டென்று எழுந்துபோய்
முதலாவது ஆள்
விளக்கை
அணைத்திருந்தால்
பேசவேண்டிய
அவசியமே இல்லை.
நான்காவது ஆள் வரை
யாருமே அதை
செய்யவில்லை.
ஒரு வேலையை
செய்து முடிக்க
காரணமே சொல்ல
வேண்டாம்.
ஆனால்...
சில நிமிடங்களில்
செய்ய முடியும் வேலையை
செய்யாமல் இருப்பதற்கு...
காரணங்களை தேடி
விளக்கம் தந்து
கொண்டிருப்பது...
பெரும்பாலான மனிதர்களுக்கு
இயல்பாய் இருக்கிறது.
வாங்க...
சின்ன சின்ன
சோம்பல்தனத்தை
தூக்கி போடுவோம்...
சுறுசுறுப்பின்
சிகரமாய்
வாழ்ந்து பார்ப்போம்...
அன்புடன்
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment