பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒரு மன அழுத்தம்,
ஏதோ ஒரு பிரச்சனை,
ஏதோ ஒரு குறை,
இருந்துகொண்டே தான்
இருக்கிறது...
சார்லி சாப்ளின் முதல்
வைகை புயல் வடிவேலு வரை
நம்மை மகிழ்விக்கும்
மனிதர்களுக்கு கூட
மறுபக்கம் இருக்கிறது...
நாம் போகும் பாதையில் மேடுபள்ளம்இருப்பது போல...
நம் வாழ்க்கை பாதையிலும்
மகிழ்ச்சியும் துன்பமும்
இருக்கத்தான் செய்யும்...
நாம் நினைக்கும் விதத்தில் நிகழ்வுகள் நடந்தால் மனம் மகிழ்ச்சி கொள்வதும்,
மாறாக நடப்பின், மனம் அழுத்தம் கொள்வதும் வாடிக்கையே...
மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் அதை உள்ளேயே வைத்து கொள்ளாமல், உற்ற
துணையிடம், நம்பிக்கையான நண்பர்களிடம், மன நல ஆலோசகர்களிடம் இறக்கி வைக்க வேண்டும்...
உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் விளையாட்டுகளிலோ,
நடைபயிற்சியிலோ,
யோக பயிற்சிகளிலோ
நாம் ஈடுபடலாம்...
அமைதியான பாடல்களை கேட்பது, கருத்து செறிவுள்ள
கதைகளை படிப்பது,
மகிழ்ச்சியூட்டும் திரைப்படங்களை பார்ப்பது என, நம் மனஓட்டத்தை நாம்
மடை மாற்றம் செய்யவேண்டும்...
வாழ்க்கையில்
வெற்றி பெற்ற
பல பெரியமனிதர்கள்,
சின்ன சின்ன
விஷயங்களில்கூட,
நகைச்சுவையை உருவாக்கி அதில் தங்களை 'ரிலாக்ஸ்'
செய்துகொள்கிறார்கள்...
"நகைச்சுவை மட்டும் இல்லாதிருந்தால்
நான் எப்போதோ
இறந்திருப்பேன்"
என்று கூறியவர்
அண்ணல் மகாத்மா...
"மனம் ஒரு குப்பைத்தொட்டி.
அது எப்போதும் குப்புற கவிழ்த்தே வைக்க வேண்டும்"
என்பார் காப்மேயர்.
'கவலை'என்னும் வார்த்தையிலேயே
'வலை'என்னும்
வார்த்தை உள்ளது.
அந்த 'வலையில்'
சிக்காமல்
'கவனமாக' இருப்பின்...
ஒவ்வொரு கணமும்
நமக்கு 'மகிழ்ச்சியே'...
வாங்க
மகிழ்ச்சிய
வாழ்வோம்
மற்றவர்களையும்
மகிழ்விப்போம்...
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment