Tuesday, February 25, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

முழுமையான
அக்கறையுடன்,
அர்ப்பணிப்பு
உணர்வுடன்,
செய்யும்
காரியமே...

'முழு வெற்றியை'
பெற்றுத்தரும்.

தான் செய்யும் காரியங்களில்
தன்னை மறந்து
முழுவதுமாக
ஐக்கியப்படுதல்...

'அர்ப்பணிப்பு'
எனப்படும்.

'மெய் வருத்தம் பாரார்,
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார், செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார், கருமமே கண்ணாயினார்'

இது ஒரு
பழம்பெரும் பாடல்.

தன் கடமையை
கண்ணாக நினைப்பார்கள்.

உடல் சோர்வு
பார்க்க மாட்டார்கள்.

பசியை பற்றி
கவலை பட
மாட்டார்கள்.

காரியம் முடியும் வரை
கண்ணுறங்க
மாட்டார்கள்.

யார்க்கும் தீங்கு
நினைக்க மாட்டார்கள்.

தன்னை பற்றிய
அவச்சொற்களை
புறக்கணிப்பார்கள்.

ஓய்வில்லாமல்
தம் பணியை செய்து
அதன் முடிவில்,
வெற்றியில்,
மனம் மகிழ்வார்கள்.

இதுவே
இப்பாடலின்
பெருங்கருத்து.

வாழ்வில்
உயர்ந்தவர்களின்
குணங்கள் இது.

'முட்கள்' இல்லாத
அரியணை இல்லை.

'முயற்சி' இல்லாத
வெற்றி இல்லை.

'இனிமை' இல்லாத
வாழ்வில் அர்த்தமில்லை.

'அர்ப்பணிப்பு' இல்லாத
வாழ்வில் பெருமைஇல்லை.

நன்றி

- கே.ராமசாமி -

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: