எளிய குடும்பத்தில் பிறந்து
இந்தியாவின் குடியரசு
தலைவராக திகழ்ந்த
அப்துல்கலாம் அவர்களை
இன்றைய சமுதாயம்
மிகச்சிறந்த முன்மாதிரியாக
கொண்டிருக்கிறது...
கிரிக்கெட் வரலாற்றில் வார்த்தைகளால்
பேசுவதை விட,
மட்டையால் பேசுவதை
வாடிக்கையாய்
கொண்டிருந்தவர்
ராகுல் டிராவிட்...
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
தனது வீட்டில் வேலைகாரர்,
சமையலர் என யாரையும் வைத்து கொள்ளவில்லை...
விப்ரோ அதிபர்
அசிம் பிரேம்ஜி
தனது காரை தானே
அலுவலகத்திற்கு ஓட்டி கொண்டுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார்...
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தன் விமான பயணத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்து எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருவது கண்கூடு...
இந்தியாவின் முதல்
ஐ. பி. எஸ்.அதிகாரி
கிரண் பேடி அவர்கள்
திகார் சிறைச்சாலையில்
பணியமர்த்த பட்டபோது
மனம் உடையவில்லை.
மாறாக,
பல சீர்திருத்தங்களை செய்து, மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு ஐ.நா.சபையின்
பாராட்டை பெற்றார்...
ஆயிரமாயிரம் அரசு பணியாளர்கள் மத்தியில், நேர்மைக்கு முன் மாதிரியாக விளங்கி கொண்டிருப்பவர்
ஐ. ஏ. எஸ்.அதிகாரி
சகாயம் அவர்கள்...
எல்லா துறையிலும் நேர்வழியில் நடக்கின்ற,
தலைசிறந்த மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்...
இத்தகைய சிலரை
இன்றைய சமூகம்,
சிறப்பானவராக ஏற்க
முன் வருகிறது...
மற்றவர்களை விட
ஏதோ ஒரு தனித்தன்மை
அவர்களிடம் உள்ளது
என்பதே நிதர்சனம்...
உண்மை,பொறுமை,நேர்மை,
அன்பு,எளிமை,அர்ப்பணிப்பு,
என பல்வேறு குணங்களில்
அவர்கள் குன்றாவிளக்காய் இருப்பதே அவர்களின்
வெற்றிக்கு காரணம்...
இவை
எல்லாவற்றையும் விட...
'மற்றவர்களுக்கு முன்
ஒரு எடுத்துக்காட்டாய்
வாழ்ந்து காட்டுவது,
ஆயிரம் சொற்பொழிவுகளை
விட மேலானது' என,
அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்...
என்ன நண்பர்களே
நீங்களும்
இவங்கள
போல
வாழ
முடிவு
எடுத்துட்டிங்களா..?
வாழ்த்துகள்...
*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*
No comments:
Post a Comment