Saturday, February 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஆதிகால மனிதன்
உணவுக்காக
விலங்குகளை
வேட்டையாடினான்...

இன்றைய மனிதன்
தன் வாழ்க்கைக்காக
சக மனிதனையே வேட்டையாட
தொடங்கி விட்டான்...

'இயற்கை' தனக்கான கோட்பாட்டில் இருந்து மீறும்போது இயற்கை சீர்கேடு ஏற்படுகிறது...

மனிதன் செயற்கையாய் மனு தர்மத்தை மீறும்போது பிரபஞ்சமே நாசமாக போகிறது...

அனைத்திற்கும்
காரணம்
ஆசைதான்...

ஆசை இருக்கலாம்,
தவறில்லை.

ஆனால்...

அதுவே பேராசையாக
மாறும் போதுதான்
பிரச்னையாக
உருவெடுக்கிறது...

நன்றாக வாழ வேண்டும் என்பதில் தவறில்லை...

அறம் தவறி
வாழ்வதுதான் தவறு...

'மானுடராய் பிறப்பதே அரிது' என்றால்...

அறியாமல் வாழ்ந்து
என்ன பயன் ???

பணம்,பகட்டு,
பதவி,புகழ்,
இவை எல்லாம்
புற வாழ்க்கையின்
செழிப்பாகும்...

அன்பு,அறம்,
பண்பு,பண்பாடு
என வாழ்வது
அக வாழ்வின்
சிறப்பாகும்.

நான் யார்???
நாம் யார்???

என தெரிவதில்
நம் தெளிவு அடங்கியுள்ளது...

'முழுமை பெறுவது'என்பது
முற்றும் துறந்த ஞானியரின்
நிலை மட்டுமன்று...

தன்னையும் பிறரையும்
உணரும் நிலையே 'முழுமை'யாகும்...

பற்றற்ற நிலை என்பது ஆசைகள் இல்லாத
நிலை இல்லை...

நியாயமான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள
யாரையும் காயப்படுத்த கூடாது என்பதுதான் தெளிந்த நிலை...

வாழ்க்கை என்பதை கண்டறியும் 'தேடலே'
செழுமை...

அதில்...

வெற்றி பெற்று '
'வாழ்தலே'
முழுமை...

வாங்க...

வானம் அளவு
யோசிக்கலாம்...

வாழ்க்கை பாடம்
வாசிக்கலாம்...

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனைகள்.....