Monday, December 23, 2019

கணித மேதை இராமானுஜம்...

ஈரோட்டில் பிறந்த கணிதமேதை இராமானுஜம் பிறந்தநாளான இன்று அவரைப் பெருமிதத்துடன் நினைவு கூர்வோமே.....

  ( அவரைப் பற்றிய
வாழ்க்கைக் குறிப்புடன்
நம் மகிழ்வான
வாழ்க்கைக்கு உரிய
கணிதக் குறிப்பும்
உங்களுக்காக.....)

*இன்றைய நாளில் பிறந்தவர்...*
(22-திசம்பர்)
*இராமானுஜன்*.....

🌟 இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

🌟 இவருடைய வாழ்வில் யு ளுலnழிளளை ழக நுடநஅநவெயசல சுநளரடவள in Pரசந யனெ யுppடநைன ஆயவாநஅயவiஉள என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

🌟 இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (வுசபைழழெஅநவசல) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.

🌟 இவர் மனதிலும்இ கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (ஆயபiஉ ளுஙரயசநள)இ தொடர் பின்னம் (ஊழவெiரெநன குசயஉவழைளெ)இ பகா எண்களும் கலப்பு எண்களும் (Pசiஅந யனெ ஊழஅpழளவைந ரேஅடிநசள)இ எண் பிரிவினைகள் (ரேஅடிநச Pயசவவைழைளெ)இ நீள்வட்டத் தொகையீடுகள் (நுடடipவiஉ ஐவெநபசயடள)இ மிகைப்பெருக்கத் தொடர் (hலிநசபநழஅநவசiஉ ளநசநைள) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.

🌟 இராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்இ தியரி ஆஃப் நம்பர்ஸ்இ டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்இ தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்இ எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

🌟 1914ஆம் ஆண்டுக்கும்இ 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரைஇ பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

🌟 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments: