கணிதமும் சமூக அறிவியலும் கொஞ்சம் தூரமாக இருக்கும் வீட்டுக்காரர்கள் என்றால்,
கணிதமும் மொழிப்பாடங்களும் இன்னும் தூரமாக இருக்கும் வீட்டுக்காரர்கள் என்றால்,
கணிதமும் அறிவியலும் அருகில் இருக்கும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் ஆவார்கள்.
ஒரு கணித ஆசிரியர் அறிவியல் ஆசிரியராகவும். அறிவியல் ஆசிரியர் கணித ஆசிரியராகவும் இருப்பது முக்கியம்.
எப்படி அப்படி இருக்கலாம் என்பதற்கு என்னால ஒரு உதாரணத்தை கொடுக்கிறேன்.
Complimentary Angles என்றால் இரண்டு கோணங்களை கூட்டினால் அது 90 டிகிரி வர வேண்டும்.
20 டிகிரி கோணத்தின் Complimentary Angle 70 டிகிரி
20 + 70 = 90
35 டிகிரி கோணத்தின் Complimentary Angle 55 டிகிரி
35 + 55 = 90
89 டிகிரி கோணத்தின் Complimentary Angle 1 டிகிரி
89 + 1 = 90
இது கணிதம்.
ஒரு பந்தை விசை (Force) கொடுத்து எறிந்தால் அது எடுக்கும் பாதையே Projectile ஆகும்.
Projectile என்பது Parabola என்ற பரவளையமாகும்.
இந்த அறிவியல் Projectile க்கும் கணிதம் Complimentary Angle க்கும் சம்பந்தம் இருக்கிறது.
ஒரே விசையில் (Force) யில் Complimentary கோணங்களில் எறிந்தால் அது ஒரே தூரத்தைதான் கடக்கும்...
ஒரு விநாடிக்கு 25 மீட்டர் தூர வேகத்தில் ஒரு பந்தை 15 டிகிரி கோணத்தில் எறிகிறீர்கள். அது எவ்வளவு தூரத்தில் விழுகிறது என்பதை அளக்க வேண்டும்.
அதே வேகத்தில் 15 டிகிரி கோணத்தின் Complimentary Angle ஆன 75 கோணத்தில்ஒரு பந்தை எறிந்து அது எவ்வளவு தூரத்தில் விழுகிறது என்பதை அளக்க வேண்டும்.
அப்படி அளந்தால் இரண்டுமே ஒரே அளவு தூரத்தைதான் கடந்திருக்கும்.
அப்படியானால் ஒரே விசையில் எறியப்படும் Complimentary கோணங்களில் எறியப்படும் பந்து ஒரே அளவைத்தான் கடக்கிறது என்பதை நிருபித்து விட்டோம்.
Projectile ஐ பதினொன்றாம் வகுப்பில் படிப்போம்
( எனக்கு தெரிந்தவரை)
Complimentary கோணங்களை ஏழாம் வகுப்பில் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு கணித ஆசிரியர் Complimentary Angles எடுக்கும் போதே ஐந்து நிமிடம் எடுத்து Projectile பற்றியும் வேகமாக அறிமுகம் செய்து விடலாம்.
Projectile ஐ அறிமுகப்படுத்த ஐந்து நிமிடம் தாராளமாய் போதும்.
கிரிக்கட் - கேட்ச் பிடித்தல் - Projectile பற்றி சொன்னால் மாணவர்கள் மனதில் நச்சென்று பதிந்து விடும்.
இப்படியாக கணிதம் எடுக்கும் போதே அறிவியலையும், அறிவியல் எடுக்கும் போதே கணிதத்தையும் சொல்லிக் கொடுக்கலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும் கணித ஆசிரியர்களும் அறிவியல் ஆசிரியர்களும் மாதம் இருமுறை இரண்டு மணி நேரம் மீட்டிங் போட வேண்டும்.
அந்த இரண்டு மணி நேரத்தில் கணித சிலபஸையும் அறிவியல் சிலபஸையும் எடுத்து வைத்து எப்படி எப்படி இரண்டையும் இணைத்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று விவாதித்து நல்ல புரிதலுக்கு வரவேண்டும்...
ஆசிரியர் பணியைப் போல கிரியேட்டிவான பணி உலகில் எதுவுமே இல்லை...
அவர்களால் இதை எளிதில் செய்து முடிக்க முடியும்...
No comments:
Post a Comment