ஒரு குருவிடம்
மாணவன் ஒருவன்,
தன்னை சீடனாக
ஏற்று கொள்ளும்படி
வேண்டினான்...
குரு மாணவனைபார்த்து,
"அதற்கு கொஞ்சநாள் ஆகும்"
என்று கூறினார்...
"எவ்வளவு காலம்?" என்று
மாணவன் கேட்டான்...
"ஒரு வருடம் ஆகலாம்"
என்று குரு கூறினார்...
"அவ்வளவு காலமா?" என்று மாணவன் வினவினான்...
"ஐந்துவருடங்கள் கூட,
ஆகலாம்" என்றார் குரு...
"ஐந்து வருடங்களா?" என்றான் மாணவன் சலிப்புடன்...
இதனை உணர்ந்த குரு,
"உனக்கு பத்து வருடங்கள்
கூட ஆகலாம்" என்று கூறினார்...
"பத்துவருடங்களா?"
என்றான் மாணவன்
மிகுந்த அதிர்ச்சியுடன்...
அவன் முக அதிர்வுகளை கண்ட குரு, "நீ இறுதி வரை சீடனாகவே ஆகாமலும் போகலாம்" என்றார் அமைதியாக...
குருவின் இந்த பதிலில் வெறுப்படைந்த மாணவன்,
அந்த இடத்தை விட்டே
நீங்கினான்...
'பொறுமையும்,
காத்திருத்தலும் மட்டுமே,
நம்மை உயர்இடத்திற்கு அழைத்து செல்லும்' என்பதே,
இக்கதையின் கருத்து.
வாங்க
நாமும்
பொருமை
காப்போம்
வாழ்வை
இனிப்பாக்குவோம்...
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment