🍁🍁புதிய பார்வை🍁🍁
ஒரு
பொன்மாலை
பொழுது...
பூங்காவில்
சிறுவன் ஒருவன்
பள்ளியில் இருந்து
வந்து ஒரு பெஞ்சில்
அமர்ந்தான்.
தன் பையில்
இருந்து
ஒரு பாக்ஸை
எடுத்து...
அதில் இருந்த
உணவை உண்ண
தொடங்கினான்.
யதேச்சையாக
எதிர் பெஞ்ச்சை
பார்த்தான்.
அங்கு ஒரு
வயதான பாட்டி
புன்னகையுடன்
இவனை
பார்த்தபடி
அமர்ந்திருந்தார்.
இதை கண்ணுற்ற
சிறுவன் தானும்
புன்னகைத்த படி
அந்த பாட்டியை
உணவருந்த
அழைத்தான்.
பாட்டியும்
சிறுவன் அமர்ந்த
பெஞ்சில் அமர்ந்து
அவன் கொடுத்த
உணவை உண்டார்.
சற்று நேரத்தில்
இருவரும்
புன்னைகைத்தபடி
அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.
சிறுவனின் தாய்
என்ன இன்று
நீ மிகவும்
மகிழ்ச்சியாய்
இருக்கிறாய்?
என்று கேட்டார்.
அம்மா
இன்று மாலை
பூங்காவில் ஒரு
கடவுளை
கண்டேன்...
அவர்
மிக அழகாக
புன்னகைத்தார்...
அந்த அன்பு முகத்தை
என்னால் மறக்க
இயலவில்லை
என்று கூறினான்.
அதே நேரம்
பாட்டி வீட்டில்...
பாட்டியின் மகள்
இன்று நீங்கள்
மிகவும்
மகிழ்ச்சியாக
இருக்கிறீர்கள்
என்ன காரணம்?
என்று கேட்டாள்.
பாட்டி...
இன்று மாலை
நான் ஒரு
கடவுளின்
குழந்தையை
கண்டேன்.
அவன் அழகாக
இருந்தான்.
பாசமாக
என்னிடம்
பழகினான்.
எனக்கு
உணவு வழங்கி
உண்ணவும்
கூறினான்.
அவனின்
பிரகாசமான
புன்னகையை
மறக்க
முடியவில்லை
என்று கூறினார்.
அறிமுகம்
இல்லாத
மனிதர்கள் கூட...
அவர்களின்
புன்னகையில்...
அவர்கள்
வழங்கும்
சிறு ஆறுதல்
வார்த்தைகளில்...
அவர்கள்
செய்யும்
சிறு சிறு
செயல்களில்...
நாம் கடவுளை
காண முடியும்.
பாசமுள்ள
பார்வையிலே
கடவுள்
வாழ்கிறான்...
அவன்
கருணை கொண்ட
நெஞ்சினிலே
கோவில்
கொள்கிறான்...
என்னும் வரிகள்
உண்மைதானே.
வாங்க...
அன்பு
உலகில்
சஞ்சரிப்போம்.
அற்புத
சமூகத்தை
படைக்கவும்
செய்வோம்.
💫💫💫💫💫💫💫💫
No comments:
Post a Comment