🍁🍁புதிய பார்வை🍁🍁
துறவியிடம்
விறகு வெட்டும்
தொழிலாளி
ஒருவன்,
பணக்காரர் ஆக
வழி கேட்டான்.
துறவி
சொன்னார்...
காட்டுக்கு
உள்ளே சென்று
உன் தொழிலை
செய். பணக்காரன்
ஆவாய்.
இவன்
உள்ளே சென்றான்.
அங்கே தேக்கு
மரங்கள் இருந்தன
வெட்டி விற்றான்.
பணம் நிறைய
வந்தது.
மறுபடியும்
துறவியிடம் சென்று
மேலும் பணம்
வேண்டும் என்றான்.
துறவி
கூறினார்...
இன்னமும்
உள்ளே போ.
இவன்
துறவி கூறியபடி
இன்னும் உள்ளே
சென்றான்.
அங்கே கருந்தேக்கு
மரங்கள் இருந்தன.
வெட்டி பணமாக்கி
பெரிய பணக்காரன்
ஆனான்.
இதிலும் திருப்தி
அடையாத இவன்...
மேலும் பணம்
சேர்க்க ஆசைப்பட்டு
துறவியிடம் சென்று
கேட்டான்.
துறவி
கூறினார்...
இன்னமும்
உள்ளே போ.
இவன்
சென்று பார்த்தான்.
அங்கே
விலையுயர்ந்த
அகர் மரங்கள்
இருந்தன.
இவன்
அதையும் வெட்டி
விற்று மிக பெரிய
பணக்காரன்
ஆகிப்போனான்.
இப்போது
ஒரு கேள்வி
மனதில் எழுந்தது.
இவை எல்லாம்
தெரிந்தும் துறவி
ஏன் இந்த
காரியங்களை
செய்யவில்லை ?
இதை
அவரிடமே
கேட்டான்
விறகு வெட்டி.
துறவி...
காட்டின் உள்ளே
செல்ல செல்ல
பணக்காரன்
ஆகும் வழி
உனக்கு
தெரிந்தது.
பணம் பொருள்
இவைகளை விட
ஒரு அற்புதமான
விஷயம் உள்ளது.
அதன் பெயர்
'மன அமைதி'
அது உனக்கு
தேவைப்படும்
காலம் வரும்.
அப்போது
என்னை வந்து
பார்.
உனக்கு
எல்லாம் புரியும்
என சொல்லி
அனுப்பினார்.
நாட்கள்
நகர்ந்தன...
பணம் சேர்ந்த
கையோடு
பல்வேறு
நிலைகளில்,
வாழ்வு சென்றதில்
அவன் மனதில்
மகிழ்ச்சி குறைய
தொடங்கியது.
இப்போது
துறவியை தேடி
சென்று...
'மன அமைதி'
பெறும் வழியை
கேட்டான் அந்த
விறகு வெட்டி.
துறவி கூறினார்
உள்ளே போ.
விறகு வெட்டி
குழம்பினான்.
உள்ளே உள்ளே
போனதால் தான்
பணக்காரன்
ஆனேன்.
இன்னமும் நான்
உள்ளே போக
மாட்டேன்
என்றான்.
துறவி
அவனை பார்த்து
நகைத்து விட்டு...
வா
இந்த மரத்தடியில்
உட்கார்.
எல்லாவற்றையும்
மறந்து மனதளவில்
துறந்து உன் மனதில்
உள்ளே போ.
மன அமைதி
உனக்கு கிட்டும்
என்று கூறினார்
துறவி.
அவர்
கூறியபடியே
எல்லாவற்றையும்
மறந்து மரத்தின்
கீழ் அமர்ந்தான்
விறகு வெட்டி.
மனதின்
உள்ளே
உள்ளே
சென்றான்.
பல
சிந்தனைகள்
புறப்பட்டன.
அவன்
ஞானம் பெற
தொடங்கினான்.
தன்னை
அறிந்தவன்
ஞானி ஆகிறான்.
தன்னையே
வென்றவன்
மகான் ஆகிறான்.
இது
வார்த்தைகள்
மட்டுமல்ல...
வாழ்வியல்
நெறிகளும்
கூட...
வாங்க..
மன நிம்மதி
மற்றும்
மன அமைதி
பெற...
நம்மை நாம்
அறிய
தொடங்கலாம்.
நம்மை நாம்
வெல்ல
முயற்சிகள்
செய்யலாம்.
அன்புடன்
காலை
வணக்கம்.
💫💫💫💫💫💫💫💫
No comments:
Post a Comment