🍒 மார்கழி மாதத்தின் சிறப்புகள்!! 🍒
🍁 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார்.
🍁மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு=பெருமை)
🍁இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.
🍁 ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.
🍁 தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும்.
🍁அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.
🍁எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது.
🍁மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உகந்தது.
🍁 தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் 'தனுர் மாதம்" எனவும் அழைப்பர்.
🍁 இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம்.
🍁 ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது.
🍁எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.
🍁இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.
நன்றி...!
பகிர்வு பதிவு
No comments:
Post a Comment