திரு: விஜயகாந்த்.
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி..!!
இது என்ன புதுப் பெயர்..யார் இவர்?, என்று திகைக்காதீர்கள்.
திரு: விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் இது தான்.
சினிமா அவரை விஜயகாந்த் ஆக்கி பின்னாளில் கேப்டனாக மாற்றியது.
இவை எல்லாம் ஏதோ ஒரே நாளிலோ, அரசியல் பின்புலத்தினாலோ,
எவருடைய
சிபாரிசு னாலோ
கிடைத்து விடவில்லை.
உழைப்பு... உழைப்பு... அயராத உழைப்பு..!!
சினிமா ஆசையில் மதுரையில் இருந்து சென்னை வந்து,
ஏறாத படிகள் எல்லாம் ஏறி
வாய்ப்பு கேட்டு.....
இறுதியில்
திரு எம்.ஏ.காஜா அவர்கள் இயக்கத்தில் " இனிக்கும் இளமை" என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். அந்தப் படமும் சுமாராகத் தான் போனது.
பிறகு " தூரத்து இடி முழக்கம் " என்ற ஒரு படம்.
இந்தப் படம் தான் விஜயகாந்த் அவர்களை நல்லதொரு நடிகராக தமிழ்த் திரையுலகில் அறிமுகப் படுத்தியது.
தொடக்க காலத்தில்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயக்கம் காட்டியதாகவும், மறுத்து விட்டதாகவும் செய்திகள் உண்டு.
( பின்னாளில் அவர்களே இவரோடு ஜோடி சேரப் போட்டி போட்டது தனிக்கதை. )
காரணம்... இவர் கறுப்பு.. அதுவும் கூடுதல் கறுப்பு.
தனது நிறமே தடையாக இருந்தபோதும் அதையும் தனது தளராத தன்னம்பிக்கை கொண்டு வெற்றி கண்டவர் தான்
திரு: விஜயகாந்த் அவர்கள்.
தொழிலாளர் வர்க்கத் தோழனாக
பல படங்களில் இவர் நடித்த போதும்,
பொதுவுடைமை இயக்கப் போராளியாக,
தொழிற்சங்கத் தலைவனாக
திரு: இராம நாராயணன் அவர்களின் இயக்கத்தில் இவர் நடித்த " சிவப்பு மல்லி " திரைப்படம் விஜயகாந்த் அவர்களை பலபடிகள் உயர்த்தியது என்றால் அஃது மிகையல்ல.
பிறகு
திரு: எஸ் ஏ.சந்திரசேகர்
இயக்கத்தில் நாயகனாக இவர் நடித்த
" சட்டம் ஒரு இருட்டறை"
திரைப்படம் இவர் வாழ்வில் மிகப்பெரிய
திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு நன்றிக்கடனாக
அந்த இயக்குனரின் மகன் விஜய்யை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்து வளர்த்து விட்டவர் விஜயகாந்த் தான்.
# உச்ச நட்சத்திரங்கள் ஒரு சிலர் ( குறிப்பாக ஒருவர்) இதோ! அரசியலுக்கு
வரப் போகிறேன்...
இப்ப வருவேன்...அப்ப வருவேன்.. என்றெல்லாம் போங்கு காட்டிக்கொண்டு இருந்த போது,துணிந்து
அரசியலில் கால் பதித்தவர் திரு: விஜயகாந்த் அவர்கள்.
துணிந்தவனுக்கு தோல்வி இல்லை என்பது போல் வெற்றி தேவதையும் இவரை அரவணைத்துக் கொண்டாள்.
எதிர்க்கட்சி தலைவரும் ஆனார்.
ஆனால்
விரைவான வளர்ச்சி,
விரைவான வீழ்ச்சியும் தரும் என்று எச்சரித்து வழிநடத்த எவரும் இல்லாது போனதால் அரசியல் சறுக்கலும் ஆரம்பமானது.
# அரசியலில் எப்படியோ.... ஆனால்
திரையுலகில்
புதிய இயக்குனர்கள் பலரையும் அறிமுகப்படுத்திய பெருமையும்,
திரையுலக பிரமுகர்கள், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், உள்ளிட்ட பலருக்கும் உற்ற தோழனாக, உதவும் கரமாக, பாசமுள்ள பாதுகாவலனாக
திரு: விஜயகாந்த் அவர்கள் திகழ்ந்தார் என்பது தான் எவராலும் மறுக்க இயலாத உண்மை., அவரின் புகழ்பாடும் பெருமை.
# அன்னார் ஆன்மா அமைதியுற ஆண்டவனைப் பிராத்திக்கின்றோம்.#
நன்றி
பகிர்வு பதிவு
No comments:
Post a Comment