Monday, February 22, 2021

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

ஒரு
அழகிய
கிராமம்.

அங்கிருந்த
மக்கள் 

பக்கத்து ஊரில்
நடைபெற்று
கொண்டிருந்த
சந்தைக்கு

தம்
நிலத்தில்
விளைந்த
பொருட்களை
விற்கவும்

வாங்கிய
பொருட்களை
கொண்டு வரவும்

தலையிலேயே
பொருட்களை
சுமந்து கொண்டு
சென்றனர் 
வந்தனர்.

கழுத்து வலியும்
உடல் வலியும்
அவர்களை
பாடாய்
படுத்தியது.

வரும்
வழியில்
சுமைகளை
இறக்கி வைத்து 
இளைப்பார

சுமைதாங்கி
ஒன்று கட்டலாம்
என்று தீர்மானம்
செய்தனர்.

அதற்காக 
அந்த ஊரில் 
முக்கிய புள்ளியான
புண்ணிய மூர்த்தி
என்பவரிடம் 

பண உதவி 
செய்யும்படி
வேண்டினர்.

  நீங்கள் கட்டும்
  சுமைதாங்கியால்
  எனக்கு எந்த ஒரு
  பயனும் இல்லை

  அதனால் பணம் 
  தர முடியாது 

என்று
கறாராக
கூறினார் அவர்.

  பெயரில் மட்டும் 
  புண்ணியம் 
  இருந்து
  என்ன 
  பயன் 

என்று
புலம்பியபடி
சென்றனர் 
மக்கள். 

இருப்பினும்

எங்கெங்கோ
பணத்தை 
புரட்டி

ஒரு 
வழியாக
சுமைதாங்கியை
கட்டி முடித்தனர்.

அதுவும்
பெயருக்கு 
ஏற்ப

எல்லோரின்
சுமைகளை 
தாங்கி

மக்களுக்கு 
உதவி செய்து
கொண்டிருந்தது.

காலம்
சென்றது.

காட்சிகளும்
மாறியது.

  ஓடமும் ஒருநாள்
  வண்டியில் 
  ஏறும் 

என்னும்
பழமொழிக்கு
ஏற்ப

புண்ணிய
மூர்த்தியின்
வியாபாரம் 
ஒருநாள் 
படுத்தது.

உயிர் வாழ
உணவிற்கே
போராட வேண்டிய
சூழ்நிலை அவருக்கு
ஏற்பட்டது.

சில
மளிகை
பொருட்களை
தலையில் 
தூக்கி சென்று 
சந்தையில்
வியாபாரம் 
செய்ய 
தொடங்கினார்
அவர்.

பாரத்தை
தூக்கி தூக்கி
சுமந்ததால்
 
உடல் வலி
கழுத்து வலி
அவருக்கும்
ஏற்பட்டது.

ஒரு நாள்
தலைபாரம்
தாங்க முடியாமல்

வழியில் இருந்த
சுமைதாங்கியில்
பாரத்தை இறக்கி
வைத்தார்.

சுமைதாங்கி
கல்லில் 
ஒரு வாசகம்
வடிக்கப்பட்டு
இருந்ததை
பார்த்தார்
படித்தார்.

அது

அது

  _*அறம்*_
  _*செய்ய*_ 
  _*விரும்பு*_

அதை 
வாசித்த
அவர் மனம்

பொட்டில்
அறைந்தார் 
போல வலித்தது.

சுமைதாங்கியோ
அவரை பார்த்து 
சிரித்தது.

இதை கட்ட 
ஊர் மக்கள் 
பண உதவி 
கேட்டபோது

கறாராக தாம் 
பணம் தர 
மறுத்த
ஞாபகம் 

அவர் 
நெஞ்சை
பாடாய் 
படுத்தியது.

இக்கதை
கூறும் கருத்து ::

  நம்மிடம்
  உள்ளதில்
  சில துளிகள்

  அது
  பணமோ
  உணவோ
  பொருளோ

  எதுவாக
  இருப்பினும்

  அடுத்தவருக்கு
  கொடுத்து
  உதவுவோம்
  எனில்

  மகிழ்ச்சி என்பது
  இரு தரப்பிற்கும்
  ஏற்படும் என்பதே.

_*தர்மம்*_
_*தலை காக்கும்*_

_*தக்க*_
_*சமயத்தில்*_
_*உயிர் காக்கும்*_

இந்த
வரிகள் 
சொல்லும்
செய்தியும் 
அதுதானே.

வாங்க

கொடுத்து
பழகலாம்

அதை
பார்த்து
மகிழலாம்

அன்பான
உலகம் 
அமைவதை
ரசிக்க 
தொடங்கலாம்.

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்


நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.