வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,கணித துறை வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியில் கணிதம் என்றாலே கசுக்கும் என்ற எண்ணத்தை மாற்றி மாணவர்களுக்கு கணிதம் கற்கண்டாய் இனிக்கும் பொருட்டு கணித பூங்கா ( Math Park )என்ற தலைப்பில் சேலம் மாவட்ட கணித ( வகுப்பு 6,7&8) ஆசிரியர்களுக்கு சுமார் 1000 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது. அந்த பயிற்சியில் மூன்று வகையான கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது .( 1.மாடல்ஸ், 2. பணித்தாள் & 3. செய்து கற்றல் ) இந்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் கணித ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.
இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் கணித துறை விரிவுரையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.
No comments:
Post a Comment