Monday, February 22, 2021

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

ஒரு
அழகிய
கிராமம்.

அங்கிருந்த
மக்கள் 

பக்கத்து ஊரில்
நடைபெற்று
கொண்டிருந்த
சந்தைக்கு

தம்
நிலத்தில்
விளைந்த
பொருட்களை
விற்கவும்

வாங்கிய
பொருட்களை
கொண்டு வரவும்

தலையிலேயே
பொருட்களை
சுமந்து கொண்டு
சென்றனர் 
வந்தனர்.

கழுத்து வலியும்
உடல் வலியும்
அவர்களை
பாடாய்
படுத்தியது.

வரும்
வழியில்
சுமைகளை
இறக்கி வைத்து 
இளைப்பார

சுமைதாங்கி
ஒன்று கட்டலாம்
என்று தீர்மானம்
செய்தனர்.

அதற்காக 
அந்த ஊரில் 
முக்கிய புள்ளியான
புண்ணிய மூர்த்தி
என்பவரிடம் 

பண உதவி 
செய்யும்படி
வேண்டினர்.

  நீங்கள் கட்டும்
  சுமைதாங்கியால்
  எனக்கு எந்த ஒரு
  பயனும் இல்லை

  அதனால் பணம் 
  தர முடியாது 

என்று
கறாராக
கூறினார் அவர்.

  பெயரில் மட்டும் 
  புண்ணியம் 
  இருந்து
  என்ன 
  பயன் 

என்று
புலம்பியபடி
சென்றனர் 
மக்கள். 

இருப்பினும்

எங்கெங்கோ
பணத்தை 
புரட்டி

ஒரு 
வழியாக
சுமைதாங்கியை
கட்டி முடித்தனர்.

அதுவும்
பெயருக்கு 
ஏற்ப

எல்லோரின்
சுமைகளை 
தாங்கி

மக்களுக்கு 
உதவி செய்து
கொண்டிருந்தது.

காலம்
சென்றது.

காட்சிகளும்
மாறியது.

  ஓடமும் ஒருநாள்
  வண்டியில் 
  ஏறும் 

என்னும்
பழமொழிக்கு
ஏற்ப

புண்ணிய
மூர்த்தியின்
வியாபாரம் 
ஒருநாள் 
படுத்தது.

உயிர் வாழ
உணவிற்கே
போராட வேண்டிய
சூழ்நிலை அவருக்கு
ஏற்பட்டது.

சில
மளிகை
பொருட்களை
தலையில் 
தூக்கி சென்று 
சந்தையில்
வியாபாரம் 
செய்ய 
தொடங்கினார்
அவர்.

பாரத்தை
தூக்கி தூக்கி
சுமந்ததால்
 
உடல் வலி
கழுத்து வலி
அவருக்கும்
ஏற்பட்டது.

ஒரு நாள்
தலைபாரம்
தாங்க முடியாமல்

வழியில் இருந்த
சுமைதாங்கியில்
பாரத்தை இறக்கி
வைத்தார்.

சுமைதாங்கி
கல்லில் 
ஒரு வாசகம்
வடிக்கப்பட்டு
இருந்ததை
பார்த்தார்
படித்தார்.

அது

அது

  _*அறம்*_
  _*செய்ய*_ 
  _*விரும்பு*_

அதை 
வாசித்த
அவர் மனம்

பொட்டில்
அறைந்தார் 
போல வலித்தது.

சுமைதாங்கியோ
அவரை பார்த்து 
சிரித்தது.

இதை கட்ட 
ஊர் மக்கள் 
பண உதவி 
கேட்டபோது

கறாராக தாம் 
பணம் தர 
மறுத்த
ஞாபகம் 

அவர் 
நெஞ்சை
பாடாய் 
படுத்தியது.

இக்கதை
கூறும் கருத்து ::

  நம்மிடம்
  உள்ளதில்
  சில துளிகள்

  அது
  பணமோ
  உணவோ
  பொருளோ

  எதுவாக
  இருப்பினும்

  அடுத்தவருக்கு
  கொடுத்து
  உதவுவோம்
  எனில்

  மகிழ்ச்சி என்பது
  இரு தரப்பிற்கும்
  ஏற்படும் என்பதே.

_*தர்மம்*_
_*தலை காக்கும்*_

_*தக்க*_
_*சமயத்தில்*_
_*உயிர் காக்கும்*_

இந்த
வரிகள் 
சொல்லும்
செய்தியும் 
அதுதானே.

வாங்க

கொடுத்து
பழகலாம்

அதை
பார்த்து
மகிழலாம்

அன்பான
உலகம் 
அமைவதை
ரசிக்க 
தொடங்கலாம்.

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்


நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.

Friday, February 19, 2021

கணிதம் கற்கண்டு- நுண் காணொளிகள்

சேலம்: 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று (பிப். 17) உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆசிரியர்களின் புது முயற்சியாக 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த மைக்ரோ வீடியோஸ் எனப்படும் நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கணிதம் கற்கும் திறனை மேம்படுத்தவும், கணிதப் பாடத்தை புரிந்துகொண்டு பயில்வதற்காகவும் நுண் காணொளிகள் தயாரிக்கப்படுகின்றன. கணித ஆசிரியர்களைக் கொண்டு இப்பணிமனை நடைபெற்றது. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காணொளி பதிவுகளாக இவை உருவாக்கப்படயிருக்கின்றன.

கற்றல் திறனை மேம்படுத்தும் நுண் காணொளிகள்

அனிமேஷன் மூலம் இப்பதிவுகள் உருவாக்கப்படவுள்ளதால் மாணவர்களின் புரிதல் அதிகரிக்கும். கணிதப் பாடத்தின் கடினமான பகுதிகளைக் கூட இந்த காணொளிகள் மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். வகுப்பறையில் பயில்வதை சமூக சூழ்நிலைகளில் பயன்படுத்தவும் ஏதுவாக அமையும்.

இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிர்ச்சி நிறுவன முதல்வர். செல்வம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹாலக்ஷ்மி, சேலம், வீரபாண்டி, பகுதிகளிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்..

நன்றி சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்பள் மற்றும் கணித துறை விரிவுரையாளர்கள்...


Sunday, February 14, 2021

ஆசிரியர் செம்மல் விருது...

சோழநாடு  ( தஞ்சாவூர் பகுதி) என்றாலே  மொழி,பண்பாடு மற்றும் கலை என்று நம் மன கண் முன் வந்து காட்சி கொடுக்கும்...இது அன்று மட்டுமல்ல இன்றும்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...முத்தமிழான இயல்,இசை & நாடகம் வளர்க்கவும் இதில் சிறந்தோரை கண்டு அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி போற்றி வரும் ஒரு சில குழுமங்களில் தஞ்சை தமிழ் மன்றம் தனித்து நிற்கிறது.  நேற்று (14-2-21)வலங்கைமானில் இம் மன்றம் சிறந்த கவிஞர்களையும், கலைஞர்களையும் மற்றும் சிறந்த ஆசிரியர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கி மகிந்தார்கள்..இந்த இனிய நிகழ்வில் எனக்கும் *ஆசிரியச் செம்மல்* என்று விருதை வழங்கி என் பணியை போற்றினார்கள்..என்னை போற்றிய * தஞ்சை தமிழ் மன்றம்*  நிறுவனர்,தலைவர்,செயலர் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

இவண்
என்றும் கல்விப் பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

Saturday, February 13, 2021

கணித பூங்கா...

வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,கணித துறை  வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியில் கணிதம் என்றாலே கசுக்கும் என்ற எண்ணத்தை மாற்றி மாணவர்களுக்கு கணிதம் கற்கண்டாய் இனிக்கும் பொருட்டு கணித பூங்கா ( Math Park )என்ற தலைப்பில் சேலம் மாவட்ட கணித ( வகுப்பு 6,7&8) ஆசிரியர்களுக்கு சுமார் 1000 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது.  அந்த பயிற்சியில்  மூன்று வகையான கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது .( 1.மாடல்ஸ், 2. பணித்தாள் &  3. செய்து கற்றல் )  இந்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்   கணித ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.

 இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் கணித துறை விரிவுரையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். 
 

என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.

Tuesday, February 09, 2021

புதிய பார்வை...புதிய கோணம் ...

அறுவடை
மோசமாக 
இருந்தது 
என்பதற்காக 
விவசாயி 
அடுத்த 
விதையை 
விதைப்பதை
நிறுத்தி 
விடுவதில்லை 
விவசாயிகள் 
தங்கள் 
வேலையை 
நிறுத்தி 
விடுவதால் 
அடையக்கூடியது 
ஏதும் 
இல்லை 
அவர்கள் 
இழப்பை 
பொருட்படுத்தாமல் 
தங்கள் 
வேலையை 
தொடரந்து
தொடர்வது 
அதனால்தான் இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்களுக்கு 
அளிக்கப்பட்ட 
பொறுப்பை 
நீங்கள் 
நிறைவேற்றுங்கள்
நீங்கள் 
நிறுத்தினால் 
வளர்ச்சி 
அடைய 
முடியாது 
சிறந்த 
உழைப்பே
சிறந்த 
பலனை 
கொடுக்கும்...

வாங்க
நாமும்
தடைகளை
தாண்டி
வானத்தை
வசப்படுத்த
முயற்சிப்போம்..

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்...