Tuesday, September 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

நாம்
பிறக்கும் நாடு
பேசும் மொழி 
நம்முடைய 
பெற்றோர்
ஆசிரியர்கள்
உறவினர்கள்
நண்பர்கள் 
உருவாக்கும் 
சூழல்தான்...

நமக்கான 
அடித்தளத்தை 
அமைத்து
தருகிறது. 

ஆனால்
சில நேரம் 
அது நம்மை 
கட்டுப்படுத்தி
விடக்கூடும். 

மொழி
மாநிலம்
நாடு கலாசாரம் 
போன்ற...

வட்டங்களுக்குள் 
சிக்கி கொள்ளாமல்...

உலக
பார்வையோடு 
சிந்திக்கும்போது... 

இன்னும் 
பல வாய்ப்புகள் 
நமக்குக் கிடைக்கும்.

ஆனால், 
அந்தப் பார்வை 
எளிதில் கிடைத்து 
விடாது. 

நம்மை
போலவே 
இருக்கிறவர்கள்...

நம்மை 
போலவே 
சிந்திப்பவர்களிடம் 
மட்டுமல்லாமல்...

கொஞ்சம் 
வெளியில் வந்து 
பார்க்க வேண்டும்,
பழக வேண்டும். 

பார்வைகள்
மாறும்போது...
 
காட்சிகள் 
மாறும்.

மனம் 
விரிவாகும்.
 
தன்னம்பிக்கை 
பெருகும்.

புதிய 
முயற்சிகளில் 
துணிவோடு 
இறங்கும் போது...

வெற்றிகள்
நம் காலடியில்
குவியும்.

 - என் சொக்கன்  -

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

புதிய
பார்வை
பிறக்கட்டும்.

புதிய
சிந்தனை
சிறக்கட்டும்.

புதிய
வெற்றிகள்
அமையட்டும்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.