🍁🍁புதிய பார்வை🍁🍁
நிறுவனம்
ஒன்றில்
ஒரே கிளையில்
20 ஆண்டுகள்
பணியாற்றிய
ஒருவருக்கு
பாராட்டு விழா
நடைபெற்றது.
அவர்
வீட்டிற்கும்
அலுவலகம்
இருந்த
இடத்திற்கும்...
ஏறக்குறைய
100 கிலோமீட்டர்
தூரம் இருந்தது.
தினமும்
இரயிலில்
இரண்டு மணி
நேரம் பயணம்
செய்தவர் அவர்.
அவரிடம்
கேள்வி ஒன்று
கேட்கப்பட்டது.
உங்கள்
வீட்டிலிருந்து
அலுவலகம்
செல்ல...
தினமும்
2 மணி நேரம்
செலவு
செய்கிறீர்களே
எப்படி உங்களால்
முடிகிறது ?
உங்களுக்கு
சலிப்பு
தட்டவில்லையா ?
அதற்கு
அந்த பணியாளர்...
நீங்கள் சொல்வது
உண்மைதான்.
நான்
பயணத்திற்கான
நேரத்தை
செலவு
செய்ததாக
கருதவில்லை.
மாறாக...
அதை
ஒரு முதலீட்டில்
போட்டேன்
என்றார்.
கேள்வி
கேட்டவர்
எனக்கு ஒன்றும்
புரியவில்லை.
சற்று விளக்கமாக
கூறுங்கள் என்றார்.
தினமும்
பயணப்பட்ட
அந்த
20 ஆண்டுகளில்
ஏழு மொழிகளை
நான் கற்று
கொண்டேன்.
அது
பல்வேறு
வழிகளில்
எனக்கு
பயன்பட்டது.
நிறைய
வெளிநாட்டு
மனிதர்கள்
தொடர்பு
கிடைத்தது.
பல
நிறுவனங்களில்
மொழி பெயர்ப்பு
பணிகளில்
என்னை
அழைக்கிறார்கள்.
பல
மொழிகளில்
கவிதை கதை
கட்டுரைகள்
எழுத
ஆரம்பித்துள்ளேன்.
அதற்கு
நல்ல
வரவேற்பு
உள்ளது.
இந்த
நிலைக்கு
நான்
வருவதற்கான
காரணம்...
பயண
நேரங்களை
பலன் தரும்
வகையில்
நான்
பயன்படுத்தி
கொண்டதே
என்றார்.
கேள்வி
கேட்டவர்
வாயடைத்து
போனது
மட்டுமல்லாமல்...
இவரை வாயார
வாழ்த்திவிட்டும்
சென்றார்.
வாங்க...
வீணாகும்
நேரம் என்று
ஒன்று இல்லை.
ஏதோ ஒரு
வகையில்
அதை நாம்
பயன்படுத்தும்
போது...
நமக்கு
மட்டுமல்ல நம்
சமுதாயத்திற்கும்...
அது
பயனளிக்க
வல்லதே
என்பதை
நாம்
உணர்ந்தோம்
எனில்...
வெற்றிகள்
நம்மை வந்து
சேரும்.
வாழ்க்கை
மகிழ்ச்சியாய்
மாறும்.
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment