*க ரோ னா*
உலகை
ஆட்டுவித்து
கொண்டிருக்கும்
அதி பயங்கர
தொற்று நோய்.
இன்னமும்
மருந்து கண்டு
பிடிக்க முடியாமல்...
அறிவியல்
அறிஞர்களுக்கு
மருத்துவர்களுக்கு
ஆராய்ச்சியாளர்களுக்கு
கண்ணாமூச்சி காட்டி
கொண்டிருக்கும்
கொடூர வைரஸ்.
தினம் தினம்
மனிதர்களை
வாரி சுருட்டி
வாயில் போட்டு
கொண்டிருக்கும்
மனசாட்சி இல்லாத
முரட்டு வைரஸ்.
இதை
ஒழிப்பது குறித்து...
பிரபல
மருத்துவர்
ராம சுப்ரமணியம்
அவர்களின்
கருத்து.
"அரசு நடவடிக்கை
மட்டும் போதாது.
மக்கள்
முன்னெச்சரிக்கை
விஷயங்களில்...
கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்."
பொதுவாக
மக்களுக்கு
நோய் வந்து
விடும் என்னும்
பயம் இருக்கத்தான்
செய்கிறது.
ஆனாலும் பலருக்கு
எனக்கெல்லாம்
நோய் வராது
என்னும்...
அசட்டு
தைரியத்தில்
செய்யும்
சேட்டைகளால்...
நோய்
அதிகரிக்கின்றது
என்பதே உண்மை.
நேற்றைய
கணக்குப்படி...
சீனாவில்
பாதிக்க பட்ட
மக்களை விட...
தமிழகத்தில்
பாதிக்க பட்டவர்கள்
எண்ணிக்கை
அதிகம்.
நோய் வந்து
விட்டால் அடுத்து
என்ன நடக்க
போகின்றது
என நினைத்தால்...
மிகுந்த
கவனத்துடன்
இருப்பர் என்பது
நிதர்சனம்.
லாலா கடை
உரிமையாளர்
உள்பட
திருநெல்வேலி
இருட்டு கடைக்கும்
அல்வா கொடுத்தது
இந்த கொரோனா.
நடிகர்
அரசியல்வாதி
பணக்காரன்
ஏழை என...
பாகுபாடு காட்டாமல்
பரிதவிக்க வைப்பது
இந்த கரோணா.
இதில் இருந்து
தப்பிக்கும் முறை
இரண்டே இரண்டு
தான்.
ஒன்று
நோய் வராமல்
முன் காத்து கொள்வது.
இரண்டு
நோய் வந்த பின்
அரசுக்கு தெரிவித்து
தனிமை படுத்தி
கொள்வது.
இரண்டாவது
நிலைக்கு
செல்லாமல்...
முதல்
நிலையிலேயே
நாம் தப்பிக்க
முடியும்.
அதற்கு நாம்
செய்ய வேண்டியது
ஒரு சின்ன S M S.
குறுஞ்செய்தி
அனுப்பும் s m s
அல்ல.
இது
வேறமாதிரி...
*S* oap
*M* ask
*S* ocial Distance.
வெளியில்
போய்விட்டு
வீட்டுக்குள்
வரும்போது...
கண்டிப்பாக
சோப் போட்டு
கை கழுவ
வேண்டும்.
வெளியில்
செல்லும்போது
கண்டிப்பாக
மாஸ்க் அணிய
வேண்டும்.
யாரிடம்
பேசுவதாக
இருந்தாலும்...
இடைவெளி விட்டு
பேச வேண்டும்.
இந்த மூன்று
கட்டளைகளை...
தினம் தினம்
நிறைவேற்றும்
மனிதனிடம்...
வைரஸ் வர
வாய்ப்பே இல்லை.
அரசின்
வழிகாட்டுதல்களும்...
மருத்துவர்களின்
ஆலோசனைகளும்...
பாதிக்கப்
பட்டவர்களின்
அனுபவங்களும்...
இதைத்தான்
சொல்கின்றன.
வாங்க
அடிக்கடி
சோப் போட்டு
கைகளை
கழுவுவோம்..
மனமுவந்து
மாஸ்க் போட
பழகுவோம்.
தள்ளி நின்னு
பேச வழக்க
படுத்துவோம்.
இதை தொடரும்
பட்சத்தில்...
கரோணா
மட்டுமல்ல...
எந்த
வைரசையும்...
காத தூரம்
ஒட்டி விடலாம்
நாம்...
நன்றி
No comments:
Post a Comment