Tuesday, March 03, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு பேராசிரியர்
தன் மாணவர்கட்கு
ஒரு தேர்வு வைத்தார்.

கேள்விதாள்கள்
மூன்று வகையாக
பிரிக்கப்பட்டிருந்தது.

'மிக கடினமானது'
முதல் வகையாகவும்...

'சுமாரானது'
இரண்டாம் வகையாகவும்...

'மிக எளிமையானது'
மூன்றாம் வகையாகவும்
அவை இருந்தன.

'எந்த கேள்விதாளையும்
எடுத்து எழுதலாம்' என்று வாய்ப்பு தரப்பட்டிருந்தது.

மாணவர்கள் அவரவர்
விருப்பம் போல் கேள்வி தாள்களை எடுத்தனர்.

விடைகளை எழுதி, தாள்களை ஆசிரியரிடம்
வழங்கினர்.

அவைகளை திருத்தாமலேயே...

மிக கடினமான
கேள்விதாள்களுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'முதல் தரம்' என்றும்...

சுமாரான கேள்வித்தாளுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'இரண்டாம் தரம்'
என்றும்...

மிக எளிமையான கேள்வித்தாளுக்கான
விடைகளை எழுதியவர்களுக்கு
'மூன்றாம் தரம்' என்றும்
மதிப்பிட்டு வழங்கினார்.

மாணவர்கள் அதிர்ச்சியுற்று,
"இப்படி திருத்தாமலேயே தரம் பிரித்து விட்டீர்களே" என்று கேட்டனர்.

"உங்களது முயற்சிகளில், எந்த அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை, கண்டறிவதற்கான ஒரு தேர்வுதான் இது.

அதிக முயற்சி எடுத்து கொண்டவர்கள்
முதல் ரகம்தானே"
என்று அவர்களுக்கு
விடையளித்தார் ஆசிரியர்.

'விடாமுயற்சியும்,
உயர்ந்த குறிக்கோளும்
மிக சிறந்த வெற்றியை
பெற்றுத்தரும்' என்பது
உண்மைதான்.

வாங்க
நாமும்
முயன்று
வெற்றிகளை
குவிப்போம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: