Tuesday, March 17, 2020

புதிய பார்வை.....புதிய கோணம்....

உலகம்
உறைந்துள்ளது...

பல்கலை
கழகங்கள்,
கல்லூரிகள்,
அனைத்து வகை
கல்வி நிலையங்கள்
மூடப்பட்டு
விட்டன...

பள்ளி
வாசல்கள்,
தேவாலயங்கள்
கோவில்கள்
நடை சாத்தி
விட்டன...

திருவிழாக்கள்,
திருமணங்கள்
இதர பிற
நிகழ்ச்சிகளில்
மக்கள்
கூட வேண்டாம்
என அரசுகள்
அறிவுரை
வழங்கியுள்ளன...

ஊர்வலங்கள்
கூட்டங்கள்
மாநாடுகள்
நடத்த
தடைவிதிக்க
பட்டுள்ளன...

'தேசிய பேரிடர்'
என மத்திய
மாநில
அரசுகள்
அறிவித்து
விட்டன...

ஆனானப்பட்ட
அமெரிக்க அதிபர்
டிரம்ப் முதல்...

அடித்தட்டு
மனிதர்கள் வரை...

அனைவரும்
அதிர்ச்சியில்
ஆடித்தான்
போயுள்ளனர்.

ஆம்...

உலகம்
உறைந்து தான்
போயுள்ளது.

மதங்கள்
சாதிகள்
பிரிவினைகள்
காணாமல்
போயுள்ளன...

அவர் சரியில்லை
இவர் சரியில்லை
என்னும் பேதங்கள்
மக்களால்
மறக்கடிக்க
பட்டுள்ளன...

இவைகள்
தெரிவிக்கும்
செய்தி என்ன ???

'இயற்கையை
வெல்ல எவராலும்
முடியாது' என்பதே.

மிக பெரிய
சுனாமிக்களும்
மாபெரும்
வெள்ளங்களும்
மிக மோசமான
நில அதிர்வுகளும்
அவ்வப்போது வந்து...

'நான் இருக்கிறேன்
என்னை மறந்து
வாழாதீர்கள்'

என்று
தெரிவிக்கும்
போதெல்லாம்....

அப்போது
மட்டும் மக்கள்,
எல்லாம்
மறந்து,
ஒன்று கூடி
போராடி...

மனிதத்தை
மீட்டெடுத்தது
வரலாறு.

மனிதத்தை
மறந்து
மீண்டும்
சுயநலமாக நாம்
மாறும் போது...

'பறவை காய்ச்சல்'
எனவும்
'பன்றி காய்ச்சல்'
எனவும்...

இதோ இப்போது
'கொ ரா னா'
வைரஸ் எனவும்...

இயற்கை
நம்மை...

மறுபடியும்
எச்சரிக்கை
செய்கிறது.

இந்த பேரிடர்கள்
தெரிவிக்கும்
கருத்து என்ன ???

நாம் மட்டுமல்ல
நம்மை சுற்றியுள்ள
நம் சமுதாயம்
மேம்பட...

நம்முடைய
உணவுமுறை,
நம்முடைய
பண்பாடு,
அடுத்தவர்
நலன் பற்றிய
அக்கறை,
சுற்றுப்புற
சுகாதாரத்தில்
அனைவருக்குமான
பொறுப்பு என...

இவைகளில்
கூட்டு முயற்சியாக...

நாம் அனைவரும்
இணைந்து
செயல்பட வேண்டும்
என 'சொல்லாமல்
சொல்வதே' ஆகும்.

இதில் இருந்து
மீண்டுவர...

இனி ஒரு பேரிடர்
நிகழாமல் தடுக்க...

'உடலளவில்'
தனித்து நாம்
இருந்தாலும்...

'உள்ள அளவில்'
ஒன்றிணைந்து
இயங்க
தொடங்குவோம்

'அரசு
வழிகாட்டல்களை'
கடைபிடிக்க
தொடங்குவோம்.

வாங்க...

'இனி ஒரு விதி
செய்வோம்...

அதை எந்த நாளும்
காப்போம்'.

*அன்புடன*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

No comments: