என் இனிய உறவுகளே , நட்புகளே... வணக்கம்.நீங்கள் அனைவரும் என் இரத்த உறவுகள்.உங்களை காணாமல் இருப்பது.மனதிற்கு பெரும் பாரமாக இருக்கிறது.எப்போதும் உங்களைப்பற்றிய சிந்தனைகள் நெஞ்சில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது.எங்கோ பிறந்தோம்.எங்கோ வளர்ந்தோம்.ஆனால் கவியரசரின் ஈர்ப்பால் அனைவரும் அனைத்து மாவட்டந்தோறும் இணைந்தோம்.இணைந்த கரமாக.
*ஒரு வேண்டுகோள்*
1.அருள் கூர்ந்து வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்.
2.அவசியம் கருதி வெளியே செல்ல நேரிட்டால்,முக கவசம் அணிந்து செல்லவும்.
3.யாரிடமும் நெருங்கி பேசுவதை தவிருங்கள்.
4.இடைவெளி விட்டு பேசுங்கள்.
5.சிரமமாகத்தான் இருக்கும்.சுதந்திர பறவையாய் துள்ளிக்குதித்த நம்மால் முடியாது தான்.
6.இருப்பினும். நம்மை பாதுக்காக்கவும்.நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்காகவும்.இந்த தியாகம் செய்து தான் ஆகனும்.
7.நேரம் செல்வது ரொம்ப கொடுமையாகதான் இருக்கும்.
8.அந்த நேரங்களில் சிந்தனை சிறகை தட்டி விடுங்கள்.கவிதைக்காலமாய் மாற்றுங்கள்.
நீங்களும் கவிஞராகலாம்.
9.வண்ணத்தூரிகையை உங்கள் எண்ணப்படி கிறுக்குங்கள்.அந்த கிறுக்கல் கூட உங்களை ஓவியனாக்கலாம்.
10.குறித்த நேரத்தில் சாப்பிட.உங்களின் இல்லாளுக்கு கொஞ்சம் முடிந்தவரை உதவிடுங்கள்.அந்த உதவிக்கூட உங்களை சமையல் கலைஞராக்கலாம்.
11.உங்கள் வாரிசுகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் உணர்வுகளை புரியும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.அதுகூட உங்களை மனோத்தத்துவ நிபுணராக்கலாம்.
12.வீட்டை சுத்தமாக்க உங்களின் இல்லாளுக்கு உதவிடுங்க.அவர்களின் சிரமமத்தை உணரும் ஒரு வாய்ப்புக்கிடைக்கலாம்.அதுவும் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக்கலாம்.
13.ஒரு லாங் சைஸ் நோட்டு எடுத்து.உங்கள் பேனாவை கையில் எடுத்து.நீங்கள் பிறந்தது முதல் இன்று வரை வாழ்க்கைப்பயணத்தில் சந்தித்த இன்ப நிகழ்வு. இன்னல்கள். உங்கள் சாதனைகள்.பொது வாழ்க்கையில் உங்கள் பங்கு.இலக்கிய உலகில் உங்கள் பங்கு.நீங்கள் செய்த நல்லவைகள்.தெரியாமல் அறியாமல் செய்த நிகழ்வுகள். இவைகளை பட்டியலிட்டு.கோர்வையாக எடுத்து எழுதுங்கள்.நீங்களும் எழுத்தாளராகலாம்.
*தங்களின் நலனில்என்றும்*
*அக்கறையுடன்...*
*இனிய காலை வணக்கம்.*