உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்
* நீ எதுவாக மாற நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால், வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
* சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுகின்றன. அதை உடனே தெரிந்து
கொண்டுவிடுகிறோம். ஆனால், பல விஷயங்கள் நம் பார்வைக்குத் தெரிவதே இல்லை.
அவற்றின் சக்தியை மட்டும் நம்மால் உணர முடிகிறது. நாம் உட்கார்ந்து பாட்டு
கேட்கிறோம். அந்த வானொலிப் பெட்டியை நம்மால் பார்க்க முடிகிறது.
வான்வெளியில் வரும் ஒலியை பார்க்க முடியாது. அதுபோல் கடவுளை உணரத்தான்
முடியும். பார்க்க முடியாது.
* வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சியும், பெரும் மனஉறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவர்கள் கடலைக் கூட குடித்துவிடலாம்.
* கடவுளை அவருடைய அருளால் மட்டுமே பார்க்கமுடியும். கடவுள் நமக்கு மிகச்
சமீபத்தில் தான் இருக்கிறார். அவர் நமக்குள்ளே இருந்தாலும், தேடினால்
மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு. கடவுள்
உலகில் உள்ள அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும்.
* கடவுளை உணர முற்படுபவர்கள் படிப்படியாகவே முன்னேற முடியும். தொடர்ந்த தேடுதலின் சிகரமாக முழுமையாக அவரை அறிந்து கொள்ள இயலும்.
No comments:
Post a Comment