இரவில் பேய் மழை
_________________________________
பகலின் படாடோபத்தை, மதிக்கும் அனைவரும்,
“இரவாகிய தன்னை யாரும் மதிப்பதில்லையென்று,”
இருட்டுப் போர்வையில் முகம் புதைத்துக்கொண்டு,
இரவு முழுதும் மனம் விட்டு அழுதது…!
நறுமண மலர்…!
_________________________
வாடி கிடந்த மலரிடம், அன்றலர்ந்த மலர்,
“நறுமணத்துடன் நானிருக்க, நலம் குலையும்படி
நேற்றே ஏன் மலர்ந்தாய்..? என்ன அவசரம்..?” என்று
அதிகாரமாய் வினவ, “கவலைபடாதே..! நாளை நீயும்
என்னருகில்…!”என்றது வாடிய மலர் அலட்சியமாய்…!
பூங்காவின் புற்கள்….!
_________________________________
“நாங்கள் இனி, எந்நாளும் எவர் கால்களிலும்
மிதிபட்டு நசுங்காமல், தலைநிமிர்ந்து நலமுடன்
நிற்போம் என்று, வெளியிருந்த மற்ற புற்களிடம்,
தன்னம்பிக்கையுடன்” சொல்லிக்கொண்டது…..!
சூறாவெளியின் போட்டி அழைப்பு…!
_________________________________________________________
“என்னைப்போல் உன்னால் பயணிக்க முடியுமா..?”
ஆக்ரோசமாக சுழன்றடித்து ஆவேசபட்ட சூறாவளியிடம்,
“உன் ஆரம்பமே நான்தான்..!” என்று தன்னடக்கத்துடன்,
பதில் ௬றி அமைதியுடன் நகர்ந்தது தென்றல்….!
கற்றவர்களின் பெருமை..!
_________________________________________
“என்னால்தான் உனக்குப்பெருமை..!” என்றது காகிதம்
எழுத்திடம்..! அவசரமாய் அங்கு வந்து “இல்லவே இல்லை! என்னால்தான்!” என்றது எழுதுகோல்.! எழுந்து நின்ற
எழுத்துக்கள் “நம்மால் எதுவுமில்லை, கற்றவர்களால்தான்
நமக்கு என்றும் பெருமை..!” என்றது அமைதியுடன்..!
இன்னும் வளரும்...
.சிவா..
No comments:
Post a Comment