Wednesday, May 05, 2021

போட்டோ Graph ...ஒரு பார்வை...3

கற்றலின் பகிர்வு.

போட்டோகிராபிக்கு அடிப்படை காட்சி அமைப்பு  Rule of third. 

நாம் புகைப்பட கலையில் ஆரம்ப நிலையில் நாம் மொபைல் அல்லது கேமராவில் எடுத்து பழகுவோம் இதற்கு Bulls Eye என்று பெயர் இது ஒரு காட்சியை அதாவது ஒரு subject ஐ நடு சென்டரில் வைத்து எடுக்கப்படும் இது பார்ப்பதற்கு விருப்பபடாமலும் அதாவது Borring
மற்றும் அந்த புகைப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருக்கும். 

இதையே நாம் அடிப்படை composition Rule of third ஐ பயன் படுத்தி காட்சியை அமைத்தால் பார்க்க சிறப்பானதாகவும் ஒரு பொருள் உணர்த்தும் படியும் இருக்கும். அதாவது ஒரு subject ஐ காட்சி படுத்துபோது Rule of third அமைப்பை அமைத்து எடுக்கும்போது இதில்  Framing ல் horizontal & vertical type ல் ஒன்பது பிரிவுகளாக (Box type) ல் அமைந்து இருக்கும். (இது முதல் படத்தில் உள்ளது) 

உதாரணமாக ஒருவரை இடமிருந்து வலமாக பார்க்கிறார் போல் எடுத்தால் அவரை Framil இடது ஓரமாக அமைத்து எடுத்தால் அவர் வலது புரமாக பார்க்கிறார் என்பதை நாம் விளக்கி கூறவேண்டாம் அந்த காட்சி அமைப்பே  தெரிவித்து விடும். 

அதேபோல் Landscape புகைப்படங்கள் எடுத்தாலும் உதாரணமாக ஆகாயத்தை மையமாக காட்ட விரும்பினால் ஆகாயத்தை முதல் இரண்டு கிரிட் வரை அமைத்து எடுக்கலாம், அல்லது நிலத்தை மையப் படுத்தி எடுக்க நினைத்தால் நிலத்திற்கு அதிக அதாவது இரண்டு கிரிட்ல் பொருந்த அமைத்து காட்சியை அமைத்தால் தங்களுடைய புகைப்படம் மிக அழகாக தோன்றும். 

Grid ஐ கேமராவில் செட் செய்ய Nikon கேமராவில் (ஏனெனில் என்னிடம் Nikon கேமரா மட்டுமே உள்ளது)
View finder வழியாக பார்க்க Menu வில் சென்று custom setting menu தேர்வு செய்து அதில்
shooting display வில் உள்ள
view finder தேர்வு செய்து grid on செய்து கொள்ளவும், மொபைலில் செட்டிகில் சென்று Grid ஐ ஆன் செய்து கொள்ளவும். 

உதாரணமாக சில புகைப்படங்களையும் இங்கே தங்களின் பார்வைக்கு பதிவு செய்துள்ளேன். 

ஒளி இன்னும் ஒளிரும்...

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

No comments: