Monday, May 03, 2021

போட்டோ Graph ஒரு பார்வை..2

எனது கற்றலின் அனுபவ தொடர்ச்சி. 

ஒரு புகைப்படத்திற்கு ஒளி எப்படி முக்கிய பங்கு வகிக்கிறதோ அதேபோல் ஒரு காட்சி அமைப்பும் மிகமிக முக்கியம் நாம் காட்சி அமைக்கும் முறையில் தான் அது சிறந்த புகைப்படமா அல்லது ஒரு சாதாரண புகைப்படமா என்று தீர்மானிக்க படுகிறது. 

புகைப்பட கலை என்பது நம் ரசனையின் வெளிப்பாடு உதாரணமாக லைலா மஜ்னு காதல் கதையில் லைலா என்ன அவ்வளவு அழகானவளா? என்று ஒரு கேள்வி வருகிறது. அதற்கு பதில் லைலா எவ்வளவு அழகானவள் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமெனில், அவளை நீங்கள் மஜ்னுவின் கண்கள் வழியாகப் பார்க்கவேண்டும், என்று கவிதைபோல பதில் வரும். அதுபோல ஒரு காட்சியின் அழகை முழுமையாக உணர வேண்டும்மெனில் நீங்கள் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருக்கவேண்டும். 

காட்சி அமைப்பு தான் ஒரு சிறந்த புகைப்படத்தை உருவாக்குகிறது.
இதற்கு Composition என்று பெயர்,
இதில் பதினைந்து விதிமுறைகள் உள்ளன அவைகள்.
1.The rule of thirds
2.Leading lines
3.Golden ratio
4.Golden triangle
6.Depth of field
7.Framing
8.Fill the frame
9.Negative space 
10.Rule of odds
11.View point
12.Symmetery
13.Patterns
14.Balance
15Colour of theory 

இதை நாம் உபயோகித்தால் நாம் எடுக்கும் புகைப்படம் மேலும் சிறப்பானதாக அமையும்  The rule of third, leading lines, golden ratio, fill the frame, patterns இவைகளை  தெரிந்துகொண்டால் போதுமானது. 

அடுத்த  என்னுடைய அனுபவ பகிர்வு
The rule of thirds பற்றிய பதிவு
ஒளி தொடரும்.

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

No comments: