Friday, May 21, 2021

விருந்தாளி அல்ல...

#கொரோனா 

கொரோனா வெனும் சூராவளி அடித்துக் கொண்டிருக்கும் இவ்வேலையில். 

அரசாங்கமும் மருத்துவர்களும் செவிலியர்களும் முன்களப் பணியாளர்களும் காவல்துறையினரும் பொதுப்பணித்துறையினரும் ஆற்றும் பணி போற்றுதற்குறியது.

இவ்வளவு பேர் எதற்காக இரவு பகலாக உயிரைப் பனயம் வைத்து பணிபுரிகிறார்கள், நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும் கொரோனாவை முற்றிலுமாக ஒளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சேவையாற்றி வருகிறார்கள். 

மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சைப் பணிகளைத் தாண்டி பொது மக்களை எதிர்கொள்வதிலும் சில சமயங்களில் கடுமையான உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.
ஒருசில மருத்தவர்கள் உயிர் தியாகமும் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். 

இவ்வளவு பேரும் எதற்காக இப்படி 
முனைப்புடன் நேரம் காலம் பாராமல் 
தங்களது கடைமைகளை செய்கிறார்கள், நமக்காக தானே அதை ஏன் எள்ளளவும் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறீர்கள். 

மளிகை கடைகள் காய்கறி கடைகள் பழக்கடைகள் தேநீர் கடைகள் இறைச்சிக் கடைகளில் இப்படி எங்குப் பார்த்தாலும் சிறிது கூட சமூக இடைவெளி துளியும் இல்லாமல் வாங்க குவிகிறீர்கள்.
ஏன் தினமும் வாங்கி சமைத்து உண்டால் தான் சாப்பிட முடியுமா.
ஏன் இரண்டு நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு சேர்த்து வாங்கி வைத்துக்கொள்ள முடியாதா. உங்கள் ஆரோக்கியத்திற்கு காய்கறிகளும் பழங்களும் வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்தியுடன் இருக்கலாம் என்ற நினைப்பா. 

நீங்கள் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வாங்கிச் செல்வது பொருட்களை மட்டும் அல்ல கொரோனா தொற்று நோயையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் சிறிதளவாவது யோசித்தீர்களா. 

இன்னும் கடற்கரை சாலையின் வழியே நடை பயிற்சி செய்கிறவர்கள் ஏன் நீங்கள் எல்லாம் படித்த அதி மேதாவிகள் தானே ஏன் அந்த நடை பயிற்சியை உங்கள் வீட்டின் மொட்டைமாடி அல்லது வீட்டிற்கு உள்ளேயே நடை பயிற்சி செய்ய முடியாதா. வெளியில் வந்து பயிற்சி செய்தால் தான் ஆரோக்கியம் கிடைக்குமா. இது ஒருபுறம் இருந்தாலும் விவேகானந்தர் இல்லம் அருகே ஒருவன் அதிகாலையிலேயே 
ஆர்கானிக் உணவு என்று நடைபாதை கடையை நடத்துகிறார்
அவரிடம் போய் சமூக இடைவெளி சிறிதும் இல்லாமல் வாங்கி சாப்பிடுகிறீர்கள் ஏன் இங்கே வந்து வாங்கி சாப்பிட்டால்தான் உங்கள் உடல்நலம் மேம்படுமா. 

இன்னொன்று ஊரடங்கு தளர்வு முடிந்த பின்னும் வீதிகளில் நடமாடுவது இரு சக்கர வாகனங்களில் செல்வது என்று சிறிது கூட சமூக பொருப்பு இல்லாமல் நடந்து கொள்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை நினைத்து பாருங்கள். 

மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் ஆக்ஸிஜன் இல்லாமல் எவ்வளவு பேர் உயிரைக் கையில் பிடித்து அவர்களது குடும்பத்தினர் விடும் கண்ணீரை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கவில்லையா. 

அது நம்மிடம் வராத வரையில் தான் அது வெறும் செய்தி அந்நிலை உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

சிறிதாவது இந்நேரத்தில் நம் நலநிற்காக பாடுபடும் அரசாங்க ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள். 

வீட்டிலேயே இருங்கள் உங்கள் வீர சாகசங்களை காட்ட இது நேரமில்லை. 

நான் காணும் காட்சிகளை வைத்தே இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
மற்றவர்களின் உயிரோடும் வாழ்கையோடு விளையாடாதீர்கள். 

முடிந்த வரை வீட்டிலேயே இருந்து 
கொரோனாவை இந்தியாவை விட்டே விரட்டுவோம். 

ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள் கொரோனா நமது விருந்தாளி அல்ல உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல.

சமூக அக்கறையுடன்.

மீள் பதிவு...( பகிர்வு)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் கவனம் தேவை...