Monday, March 08, 2021

தனித்துவ ஆர்வக் குறிப்பொலி மற்றும் தந்திரோபாய மின் உள்ளடக்க வடிவமைப்புக்கான திட்டப் பயிற்சி

தனித்துவ ஆர்வக் குறிப்பொலி மற்றும் தந்திரோபாய மின்  உள்ளடக்க வடிவமைப்புக்கான திட்டப் பயிற்சி

நாள் 04.03.2021
இடம்   மாவட்ட ஆசிரியர்க் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தமசோழபுரம்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக திட்டமிடல் என்பது மிகவும் அவசியம்.
முதல்வர் ஐயா அவர்கள் பயிற்சிக்கான திட்டமிடலை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

நாள் முழுவதும் பயிற்சியை முதல்வர் அவர்களே முன்னின்று நடத்தி இடையிடையே பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அனைவரையும் ஈடுபடுத்தி இப்பயிற்சிக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும், உத்திகளையும் அளித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

பயிற்சி கட்டகம் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் போல் சுருக்கமாக, விளக்கமாக, தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக மிக குறைந்த பக்கங்களிலேயே ரத்தினச் சுருக்கமாக இருப்பது மிகவும் சிறப்பு.

எங்களைப் போன்ற கணினி தொழில்நுட்பத்தில் குறைந்த அளவு அனுபவம் கொண்ட ஆசிரியர்களையும் தொழில்நுட்பத்திற்கு உள்ளாக ஈர்க்கும் இச்செயல் ஆராய்ச்சி இந்தத் தொழில்நுட்ப காலத்தில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

பயிற்சி தலைப்பிலேயே ஒரு தந்திரத்தை ஏற்படுத்தி உள்ளார்ந்த ஆர்வத்தை கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் வழிகாட்டி ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றும் இந்த ப் பரிமாற்ற பயிற்சி எங்களைப்போன்ற ஆசிரியர்களுக்கு மேலும் தொழில்நுட்பத்தை கற்க உதவியாக அமையும் என்பது திண்ணம்.

பயிற்சி கட்டகத்தில் உள்ள தந்திரங்களை போன்று வழிகாட்டி ஆசிரியர்களும் அவர்கள் தொழில்நுட்ப தந்திரங்களை  எங்களைப் போன்ற ஆசிரியருக்கு கற்றுத் தருவதன் மூலம் முதல்வர் அவர்களின் கனவு இந்தப்  பயிற்சியின் நோக்கம் சிறப்பாக நிறைவேறும்.

மாணவர்கள் பாட கருத்துக்களை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும், ஆசிரியர்கள் சிரமமின்றி மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணமும் செயல் ஆராய்ச்சியின் முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது.

கற்பிப்போர்க்கும் கற்போருக்கு மிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலை இச்செயல் ஆராய்ச்சியின் முடிவு ஏற்படுத்தும் என்பது உறுதி.

    

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/e-courses-production-workshop-launched/tamil-nadu20210304144614474


No comments: