Monday, August 03, 2020

சாமானியன்...

🧑🏻📚✒️👩🏼✏️

அட்டை 
போடாத
அஞ்சாவது புக்கு
என்னைக்கோ கிழிஞ்சுருச்சு...

ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு
அறிவிப்பு மட்டும்
வந்திருச்சி...

பள்ளிக்கூடம்
பூட்டு போட்டு 
மாசம் 
இன்னைக்கு
நாலாச்சு...

பீசு கட்டி
படிக்கிறவனுக்கு
"ஸ்கூல்" 
வீட்டுக்கே 
வந்தாச்சு...

பிசபிசுத்துப்போன
எங்க படிப்பு
என்னாச்சு...

ஆன்லைன்ல
படிக்கிறேன்டா..
ஆணவமா
அண்டை வீட்டு 
ஆதி சொன்னான்..

எதிர்வீட்டு
கோபி சொன்னான்..
ரெண்டு ஜிபி
தேவைப்படுமாம்..

சட்டையில 
மட்டுமில்ல
அப்பா போன்லயும்
ரெண்டு பட்டன் இல்லை...

ஸ்மார்ட்டு போன் வாங்க
காசு இருந்தா
பீஸு கட்டுற ஸ்கூல்லேல
படிச்சிருப்பேன்...

கூலிக்கு 
மாரடிக்கும்
குருவம்மா 
எங்கம்மா...

கூறுகெட்ட
கொரானா
போனதுக்கு 
பின்னால்
வந்தா போதும்
சொல்லிட்டாளாம்
ஓனரம்மா...

அதனாலே
வீட்டுக்குள்ளே
முடங்கிருக்கா
எங்கம்மா...
ஆத்தா...
அப்துல் கலாம் ஆகனும்னா.
அரசு பள்ளியில
சேர்த்துவிட்டா...?!!!

ஒரு வேளை
சுடு சோறு
திண்பேன்னு
ஆசைப்பட்டா...!!

ரணமான 
அவ மனசு
குணமாவதெப்போ...

இப்ப...
சொல்லித் தரவும்
ஆளில்லை...
சோத்துக்கும் வழியில்ல

வறுமை ஒன்னும்
புதுசில்ல...
வாழ்ந்து பார்த்து
பழகிடுச்சு...
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான்
வாசல் பார்த்து
காத்திருக்கேன்...

மாஸ்க் வாங்க
காசு இல்ல...
கர்ச்சீப் தான்
கட்டிக்கிறேன்...

புக்கு மட்டும் 
குடு சாமி...
புரட்டி கிரட்டி கத்துக்கறேன்...

இப்படிக்கு...

அரசுப்பள்ளி மாணவன்
🙏

 (பகிர்வு )

No comments: