Sunday, August 09, 2020

புதிய பார்வை... புதிய கோணம்...

🍁🍁 புதிய பார்வை 🍁🍁

ஆல்பர்ட் 
ஐன்ஸ்டீன் 
உலகம் அறிந்த 
அறிவியல் அறிஞர்.

ஜெரோம் 
விட்மன் 
புகழ்பெற்ற 
அமெரிக்க 
நாவலாசிரியர்.

இவர்கள் 
இருவரும் 
இணைபிரியாத 
நண்பர்களாக 
மாறியது...

ஒரு 
சுவாரஸ்ய 
நிகழ்வு ஒன்றில்.

விட்மன் 
இளைஞராக 
இருக்கும்போது...

ஒரு 
செல்வந்தரின் 
வீட்டு நிகழ்ச்சிக்கு 
சென்றிருந்தார்.

அப்போது 
'பாஷ்' எனப்படும் 
இசை நிகழ்ச்சி 
அங்கு நடந்து 
கொண்டிருந்தது. 

இசையில் நாட்டம் இல்லாதவராக 
இருந்த விட்மன்
இசை ஞானம் 
உள்ளவர் போல...

எல்லோரும் 
கை தட்டும்போது 
இவர் கை 
தட்டுவதும்...

எல்லோரும்
தலையாட்டும்போது 
இவர் தலையை
ஆட்டுவதுமாக
இருந்தார்.

திடீரென்று 
விட்மனின் தோளை 
யாரோ தட்டினார்கள்.

விட்மன் 
திரும்பி பார்த்தார்.

தட்டியவர் 
அறிவியல் அறிஞர் 
ஐன்ஸ்டீன்.

அப்போது அவர்கள்
ஒருவரை ஒருவர்
அறிந்திருக்கவில்லை.

" உங்களுக்கு 
  'பாஷ்' இசை பற்றி 
  தெரியுமா ? "

என்று கேட்டார் 
ஐன்ஸ்டின்.
 
ஐன்ஸ்டினின் 
கண்களை நேராக 
பார்த்த விட்மன் 
பொய்சொல்ல 
பிடிக்காமல்...

" அதை பற்றி 
  எனக்கு தெரியாது "

என்று 
கூறினார்.

உடனே 
விட்மனின் 
கையை பிடித்து 
ஒரு மாடி அறைக்கு 
அழைத்து சென்றார் 
ஐன்ஸ்டீன்.

அங்கு 'பாஷ்'
இசையின் 
நுணுக்கங்களை 
எடுத்து கூறியவர்...

" உங்களுக்கு முழு 
  விருப்பமிருந்தால்
  இசையை எளிதில் 
  கற்றுகொள்ளலாம்"

என்றதுடன்
அவரை இசையில்
நாட்டம் கொள்ள...

மேலும் 
சில எளிய 
பாடல்களை 
பாடி காட்டி...
 
இசை 
குறிப்புக்களை
வழங்கி அசத்தவும்
செய்தார் ஐன்ஸ்டின்.

இதை
மிகவும் ரசித்த 
விட்மன்...

' தான் காண்பது 
 கனவு தானா ' 

என 
ஆச்சரியப்பட்டு...

ஐன்ஸ்டீன் 
எதிரில் சில 
பாடல்களை
தானும்
பாடிக்காட்டி...

அவரின்
பாராட்டை
பெற்றார் விட்மன்.

" இசை   
  இவ்வளவுதான்
  இனி ரசிக்க       
  தொடங்குங்கள் "

என்று 
விட்மனை
வாழ்த்தினார்
ஐன்ஸ்டின்.

"  உங்களின்
   பொன்னான
   நேரத்தை 
   ஒதுக்கி...

   முன்பின் 
   அறிமுகமில்லாத 
   எனக்கு... 

   இவ்வளவு 
   சிரத்தையை
   நீங்கள் 
   எடுத்தீர்கள்.

   தங்களுக்கு
   என் நன்றிகள் "

என்று 
கூறினார் விட்மன்.

நிகழ்ச்சியின் 
இறுதியில்...
 
விழா 
ஏற்பாடு 
செய்த தலைவர்...
 
" Mr.ஐன்ஸ்டீன்...

  நிகழ்ச்சியை 
  பெரும்பாலும் 
  நீங்கள் ரசித்து
  பார்க்கவில்லையே?
  
  இடையில் எங்கு
  சென்றீர்கள் ? "

என 
கேட்டார்.

" நீங்கள் 
  சொல்வது
  உண்மைதான்.

  நிகழ்ச்சியின்
  இடையில்...

  மனிதர்களுக்கு 
  இடையேயான 
  மகத்தான ஒரு 
  செயலில்...

  நான் 
  ஈடுபட்டு கொண்டு
  இருந்தேன் " 

என்று 
கூறினார் 
ஐன்ஸ்டின்.

" ஒன்றும்
  புரியவில்லை "

என்றார் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்.

" முன்பின் தெரியாத   
  ஒரு மனிதரின் 
  அன்பின் 
  எல்லைக்குள் 
  செல்ல...

  ஒரு 
  நுழைவாயில்
  இன்று 
  திறக்கப்பட்டது "

என்று 
கூறினார்
ஐன்ஸ்டின்.

பெற்ற 
அறிவை 
அறிவியல்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல்...
 
சக 
மனிதரின் 
அன்பிற்கும் 
பயன்படுத்திய 
ஐன்ஸ்டீன் புகழ்...

இன்றளவும்
நிலைத்திருக்க 
இதுவே காரணம்
என்றால் அது
மிகையல்ல.

வாங்க...

மனிதம்
பழகுவோம்.

மகத்துவராக
மாற 
தொடங்குவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி முனை.சுந்தரமூர்த்தி