Sunday, August 30, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



குருவிடம்
ஒருவர்...

'  தன்னை 
  எல்லோரும் 
  திட்டிக் கொண்டே
  இருக்கிறார்கள்
  புறம் கூறிகொண்டு
  இருக்கிறார்கள்
  அதனால் என்
  வளர்ச்சி பாழாகிறது
  மன அமைதியும்
  கெடுகிறது '

என்று
புலம்பி தள்ளினார்.

' வாழ்வில்
  வளர்ச்சி 
  பெறவும்
  மன அமைதி 
  கொள்ளவும்
  என்ன வழி ??? '

என்று 
கேட்டார்.

'  நீ 
  கழுதையா ?
  எருமையா ?
  குதிரையா ?

  என்பதை 
  பொருத்து...
 
  உன் 
  வளர்ச்சியும்
  மன அமைதியும்
  இருக்கும் '

என்று 
குரு  கூறினார்.

' ஒன்றும் 
  புரியவில்லை '

என்றார் 
இவர்.

' கழுதையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  பின்னால் 
  எட்டி உதைக்கும். 

  எருமையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  கொஞ்சமும்
  கண்டு கொள்ளாது.

  குதிரையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  வேகமாக 
  ஓட தொடங்கும்.

  அதேபோல...

  நம்மை
  யாராவது
  திட்டினால்...

  சரிக்கு சமமாக 
  சண்டைக்கு போவது
  கழுதையை போல.

  இவர்களுக்கு 
  வளர்ச்சி என்பதே 
  இருக்காது.

  வீழ்ச்சி 
  என்பதாகத்தான் 
  இருக்கும்.

  நம்மை 
  யாராவது 
  திட்டினால்...

  கண்டு
  கொள்ளாமல்
  இருப்பது
  எருமையை
  போல...

  இவர்களுக்கு 
  வாழ்க்கை 
  வெறுமையாக 
  இருக்கும்.

  வளர்ச்சி 
  ஆமை வேகத்தில்
  இருக்கும்.

  நம்மை
  யாராவது
  திட்டினால்..

  அதை 
  வளர்ச்சிக்கான
  வாய்ப்பாக 
  மாற்றிக்கொண்டு...

  எதையும்
  பொருட்படுத்தாமல்...

  குதிரையை போல 
  ஓடிக்கொண்டே 
  இருந்தால்...

  இவர்களின்
  வாழ்வில் 
  விரைவான 
  வளர்ச்சியும்...

  வளமான 
  வாழ்க்கையும்...

  மன 
  அமைதியும்
  கிடைக்கும் '

என்று 
கூறினார் குரு. 

' உன்னை
  பற்றி யாரு 

  அட
  என்ன 
  சொன்னால் 
  என்ன

  இந்த 
  காதில் வாங்கி 

  அதை அந்த 
  காதில் தள்ளு '

வரிகளின் படி
வாழ்ந்தோம் 
எனில்...

வெற்றியும்
மகிழ்ச்சியும்
நமது காலடியில்
விழத்தொடங்கும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

முன்னேற
தொடங்கலாம்.

அன்புடன் 
இனிய
காலை 
வணக்கம்.

நன்றி
முனைவர்.சுந்தரமூர்த்தி

Thursday, August 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

உலக
புகழ் பெற்ற
ஸ்டாண்போர்ட்
பல்கலைகழகத்தில்...

இரண்டு
மாணவர்கள்
தங்களின்...

முனைவர் பட்ட 
ஆராய்ச்சியின்
ஒரு பகுதியாக...

திட்டம் 
ஒன்றை
தொடங்கி
செய்து வந்தனர்.

ஐந்து 
ஆண்டுகளாக
தொடர்ந்தும்...

அதில் ஒரு 
வருமானமும் 
இல்லை.

அதை பற்றி
கவலைப்படாமல்
அவர்களின் 
திட்டம்...

தொடர்ந்து 
கொண்டே 
இருந்தது.

இறுதியில்
அவர்களின் 
திட்டம்...

அசுர 
வளர்ச்சி
அடைந்து...

இன்று அந்த
நிறுவனத்தின்
ஒரு மணி நேர
வருமானம்
மட்டுமே...

7,129,629 
டாலர்கள்.

அந்த 
நிறுவனம்
' கூகுள் '

அதை
தொடங்கிய 
இருவர்...

'லாரி பேஜ்'
மற்றும்
'செர்கே பிரின்'

நிதானம்
பொறுமை
நம்பிக்கை
இருப்பின்...

இறுதி
வெற்றி
நமதே
என்பதில்...

எந்த
சந்தேகமும்
இல்லை
என்பது
உண்மைதானே.

வாங்க
நாமும்
முயற்சிகள்
செய்வோம்
வெற்றி
பெறுவோம்..

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Wednesday, August 26, 2020

புதிய பார்வை... புதிய கோணம்...

நின்று 
நிதானித்து 
யோசிக்க 
மக்களுக்கு
நேரமில்லை. 

எல்லோரும் 
ஓடிக்கொண்டே
இருக்கிறார்கள்.

எங்கே 
ஓடுகிறோம் 
என்பதை அவர்கள் 
அறிந்திருக்கவில்லை. 

ஏன் 
ஓடுகிறோம் 
என்பதும் 
அவர்களுக்கு
தெரியாது. 

மற்றவர்கள் 
ஓடுவதை
பார்த்து
இவர்களும் 
ஓடுகிறார்கள்.

பதவி 
வேட்டையை 
மேற்கொண்டு 
ஓடுகிறார்கள். 

பணத்தை
துரத்தியபடி 
ஓடுகிறார்கள். 

மற்றவர்களுக்கு 
தேவையானவை 
எல்லாம் 
தங்களுக்கும் 
தேவை என்று...
 
ஒருவரை
ஒருவர் 
முட்டிகொண்டு
ஓடுகிறார்கள்.

தனி
தன்மையை
இழந்து...

' கார்பன் '
பிரதிகள் போல் 
செயல்படுகிறார்கள்.

இப்படி 
ஓடுவதன் 
பெயர் வாழ்க்கை 
இல்லை.

இந்த 
இடைவிடாத 
பரபரப்பு...

ஒருவகையான 
நோய் மட்டுமே 
ஆகும்.

- ஓஷோ -

பணமோ
பதவியோ
சொத்தோ
மட்டுமே...

நம் 
வாழ்க்கையில்
முக்கியம்
இல்லை.

அதையும்
தாண்டி
ஒன்றுள்ளது. 

அது...

அது...

எந்த 
நிலையிலும்
நம் மனதை நாம்
மகிழ்ச்சியாக
வைத்து 
கொள்வதுதான்.

' போதும் 
  எனும் மனமே 
  பொன் செய்யும் 
  மருந்து '

என்னும்
முதுமொழிக்கு ஏற்ப...

நம்
மனதை
நாம் பழக்க
படுத்தி கொண்டால்...

இனி
எல்லாம் சுகமே.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Friday, August 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



தன்னை
காலால் எட்டி 
உதைத்த...

ஸ்மட்ஸ் 
என்னும்
ஆங்கிலேய
அதிகாரிக்கு...

தன் 
கையாலேயே
காலனி தயாரித்து
கொடுத்தவர்
காந்தி.

அதை
தன் உயிராய்
மதித்து...

தன் 
இறுதி 
நாள் வரை 
பொக்கிஷமாக 
நினைத்து...

போற்றி
பாதுகாத்து
வந்தவர் 'ஸ்மட்ஸ்'
என்பது வரலாறு.

அதனால்
தான் காந்தி
மகாத்மா என
எல்லோராலும்
அழைக்கப்படுகிறார்.

' நிலை
  உயரும் போது 
  பணிவு கொண்டால் 
  உயிர்கள் உன்னை 
  வணங்கும் '

என்னும்
வரிகள்
உண்மைதானே.

மகாத்மா
ஆகிறோமோ
இல்லையோ...

நல்ல
ஆத்மாவாக
இருக்க...

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


Monday, August 17, 2020

அம்மா..அம்மாதான்...

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

              *என் வீட்டு அழகி*
                        =======

*ப்ளீஸ்*
 என்று ஒத்த வார்த்தை சொன்னாலே  உருகி கரைந்து விடுவார் என் அப்பா.. 
ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!! 

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்.. 
இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!

கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,*
*பீரோவை அடுக்கி வை..*
*மதியானத்தில் தூங்காதே..* 
*எப்ப பாரு என்ன டிவி?* 
*புக் எடுத்து படி...*
*வீட்டு வேலை செய்*,
கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது.. 
இன்று 
*சாம்பார் சூப்பர்,*
*வத்தக்குழம்பு சூப்பர்* 
என்று அடுத்தவர்  என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது.. 
*இதிலும் நான்தான் தோற்று போனேன்*. 

இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான்
*நூடுல்ஸ் வந்த புதிது..* 
அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்.. 
*உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்* 
என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது..  
5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன். 

மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.
*ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..*
செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை  குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.
*ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*. 
இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!!

ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது. 

நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே.. 
இதை சாப்பிடு
அதை சாப்பிடாதே
இதை குடி 
இப்படி திரும்பு 
அப்படி படு,
குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு 
என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது.. அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!! 
*இப்போதும் நான்தான் தோற்றேன்!*

என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு,   தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்.. "இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது.. இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.

"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை  இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன். 

ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய் 
*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்.. 
*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*
என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று? 
அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல் 
*அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!*

எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர்  தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!

*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*

சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!! 

உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!

*எத்தனை இடர்பாடுகள்*,
*எத்தனை துயரங்கள்,* 
*எத்தனை வலிகள்*
வந்தால் என்ன? 
உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!
எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்!!

நன்றி..
படித்ததில்  பிடித்தது...

Saturday, August 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம் ...

உயர்ந்த
மனிதர்கள்
எவரையும்...

அவதூறு 
விட்டு
வைப்பதில்லை.

ஏசு
புத்தன்
காந்தி என 
அவர்களை கூட...

சிலர் 
அவதூறு 
செய்திருக்கிறார்கள். 

இன்று
அவர்கள் 
வாழ்ந்தால் கூட...

இது 
போன்ற 
அவதூறுகளில்
இருந்து அவர்களால்
தப்பிக்க இயலாது. 

அதனால்...

அவதூறுக்கு 
அஞ்சி ஒருவர்... 

தன் 
கடமையை 
விட்டு விலக 
வேண்டியதில்லை.

-யோகி ராம்சுரத்குமார்-

' உன்னை
  பற்றி யாரும்
  அடஎன்ன 
  சொன்னால் 
  என்ன ??

  இந்த காதில் 
  வாங்கி அதை
  அந்த காதில் 
  தள்ளு.

  மேகம் 
  மிதந்தாலும்
  காகம் 
  பறந்தாலும்...

  ஆகாயம் 
  தான் அழுக்காக 
  ஆகாதுன்னு 
  சொல்லு '

பா.விஜயின்
வார்த்தைகளை
உறுதி படுத்தலாம்.

கடமையை
கண்ணியமாக
செய்து
கலக்கலாம்
வாங்க.

_*மனம்*_
_*உறுதியாயின்*_
_*மகிழ்ச்சி*_
_*நம் கையில்*_

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Friday, August 14, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🇮🇳  புதிய பார்வை  புதிய கோணம்  🇮🇳

ஒரு 
பத்திரிக்கையாளர் 
கூட்டம்.

" இந்தியா 
  விடுதலை
  பெறுமா ??? "

ஒரு
நிருபரின் 
கேள்வி இது.

" சூரியன் 
  கிழக்கில் 
  உதிப்பது 
  எவ்வளவு 
  உண்மையோ...
 
  அவ்வாறே 
  இந்தியா 
  விடுதலை 
  பெறும்

  ஆனால்...
 
  பெற்ற 
  விடுதலையை 
  பேணிக்காக்க 
  ஆட்கள் எங்கே ? "

சாது 
வாஸ்வானி 
பதில் இது.

இந்தியா
விடுதலை
பெற்று
73 ஆண்டுகள்
சென்றபின்...

இந்த
கேள்வியை
நாம்...

மறு
ஆராய்ச்சி
செய்து பார்க்க
வேண்டி உள்ளது.

பசியும்
பட்டினியும்
தலைவிரித்து
ஆடும் போக்கு
நின்ற பாடில்லை.

வறுமை
கோட்டின் கீழே 
உள்ளவர்கள்...

வாழ்வு 
நிலையில்
மேம்பட்டதாக
தெரிய வில்லை.

கீழ் 
தட்டில்
நிற்கும் மக்கள்...

மகிழ்ச்சியில்
இருப்பதாய்
புரியவேயில்லை.

நம் 
நாடு 
மேலும்
வளம் பெற...

மக்கள்
நலம் பெற...

அனைத்து நிலை
மனிதர்களும்
மகிழ்ச்சியுடன் 
வாழ...

இப்போதைய
தேவை...

நம்முடைய 
மனங்களை 
கையாளும் 
தன்மையில்
மாற்றம்.

மீண்டும் ஒரு
மன புரட்சி.

கல்விக்கு 
சாலை உண்டு

நூலுக்கு 
ஆலை உண்டு

நாட்டுக்கு 
தேவை எல்லாம்

நாம் 
தேடலாம்.

தோளுக்கு 
வீரம் உண்டு

தோற்காத 
நியாயம் உண்டு

நீதிக்கு 
நெஞ்சம் உண்டு

நாம் 
வாழலாம்.

சிரிக்கும் 
ஏழை முகம் 
பார்க்கலாம்.

சிந்தும் 
கண்ணீர்தனை 
மாற்றலாம்.

வாருங்கள் 
தோழர்களே

ஒன்றாய் 
சேருங்கள் 
தோழர்களே

என்னும்
மன
நிலையில்...

நாம் 
அனைவரும்
மாறுவோம்
எனில்...

அகில
உலகத்திற்கும்
தலைமை
தாங்கும்...

அற்புத 
தன்மை...

நம்மை
வந்தடையும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

நம்
நாட்டை
முன்னேற்ற
தொடங்கலாம்.

இனிய
சுதந்திர தின
நல் வாழ்த்துகள்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Thursday, August 13, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

💕💕💕💕💕💕💕💕

20 
நொடிகள் 
வாழும் 
பூச்சிகளிலில்
இருந்து...

200 
ஆண்டுகள் 
வாழும் 
ஆமை வரை...

எல்லா
உயிர்களுக்கும்
ஒரு சிறப்பு 
உண்டு.

மலருக்கு 
தேன் 
வைத்தான். 

வண்டுக்கு 
உணரும் 
சக்தியை 
வைத்தான்.

குருவிக்கு 
சிறகு
வைத்தான். 

மீனுக்கு 
நீச்சல் 
வைத்தான்.
 
தேளுக்கு 
கொடுக்கு 
வைத்தான். 

நண்டுக்கு 
கிடுக்கி 
வைத்தான்.

இப்படி எல்லா
உயிர்களுக்கும்
ஒரு சிறப்பு...
 
ஆண்டவன் 
கொடுத்துதான்
இருக்கிறார்.

ஆனால்...

இவை 
எவற்றுக்கும் 
மனமோ
சிந்தனையோ
கிடையாது. 

தனக்கு 
இது எதுவும் 
கிடையாது 
என்பது கூட...

அதற்கு 
தெரியாது.

இருப்பினும் 
அவை...

அதன் 
சிறப்புகளை 
கொடுத்துக் 
கொண்டேதான் 
இருக்கின்றன.

அதே
போலத்தான்...

மனிதர்களுக்கும் 
பொதுவான 
ஒரு சிறப்பை...

இறைவன் 
கொடுத்து
இருக்கிறான்.

அதன் பெயர் 
' _*அன்பு*_ '

அன்பு 
என்பது...

நாம் 
வெளிப்படுத்தும் 
போதுதான்...

நமக்குள் 
அன்பு இருக்கிறது 
என்பதே நமக்கே 
தெரிகிறது. 

இந்த 
அன்பை 
வெளிப்படுத்த... 

எந்தவிதமான 
கலைகளும் 
தேவையில்லை.

கல்வியும் 
தேவையில்லை. 

ஆற்றலும் 
தேவையில்லை.

உண்மையில்...

இதற்கு
எந்த வித
செலவும்
இல்லை.

கருணையாக
காண்பதும்...

வாயார 
வாழ்த்துவதும்... 

மனமார 
புன்னகை 
செய்வதும்...

அன்பின்
வெளிப்பாடே.

- இசைக்கவி 
  ரமணன் -

' பார் முழுதும் 
  மனித குல
  அன்புதனை 
  விதைத்து...

  பாமரர்கள் 
  நெஞ்சத்தில்
  பண்புகளை
  வளர்த்து...

  போர் முறையை 
  கொண்டவர்க்கு
  நேர்முறையை 
  விதைத்து...

  சீர் வளர 
  தினமும் 
  வேகமதை 
  வளர்த்து...

  பெற்ற 
  திருநாட்டினிலே
  பற்றுதனை 
  விதைக்கணும்.

  பற்றுதனை 
  விதைத்துவிட்டு
  நல்ல 
  ஒற்றுமையை 
  வளர்க்கணும் '

உடுமலை
நாராயண
கவியின்
வார்த்தைகளை
நிஜ படுத்த...

முயற்சிகள்
செய்வோம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

நன்றி
மீள்பதிவு..

Wednesday, August 12, 2020

புதிய பார்வை புதிய கோணம்.



மன்னர் 
ஒருவர் இருந்தார்.

தம் 
நாட்டில்‌
மிக சிறந்த 
ஒருவரை 
தேர்ந்தெடுத்து...

அவரை 
கௌரவிக்க 
விரும்பினார்.

மந்திரிகளை 
அழைத்து 
அதற்கான
தெரிவினை
செய்து தருமாறு 
வேண்டினார்.

அவர் 
ஆணைப்படி 
மந்திரிகள் 
பத்து நபர்களை 
தெரிவு செய்தனர். 

வறுமையில் 
பிறந்தாலும்
அறிவாற்றலின்
துணை கொண்டு
அறிஞர் ஆனவர்.

வாணிபத்தில் 
சிறந்து கூடவே 
அற செயல்கள் 
செய்து வருபவர்.

படைப்புகளில்
மக்களால் பெரிதும்
ரசிக்கப்படும்
கவிஞர்.

மக்கள் 
விரும்பும் 
மருத்துவர்.

சிறந்த 
கட்டிடக் 
கலைஞர்.

இப்படி 
பத்து நபர்களை 
தெரிவு செய்து
அவர்களை...

மன்னரிடம் 
அழைத்து
சென்றனர் 
மந்திரிகள்.

இவர்களில் யாரை 
தேர்ந்தெடுப்பது 
என்பதில்...

குழப்பம் 
அடைந்தார் 
மன்னர்.

எல்லோரும் 
அவரவர் 
துறையில் 
சிறந்து 
விளங்கினர்.

என்ன 
செய்வதென்று 
மன்னருக்கு 
புரியவில்லை.

அப்போது 
ஒரு வயதான 
பெரியவரை 
காவலர்கள்
கைத்தாங்கலாக 
அழைத்து 
வந்தனர்.

சாதாரண 
உடையில் 
இருந்தாலும்...
 
அவரது 
கண்கள் ஒளி 
வீசுவதாகவும்...

முகத்தில் 
அன்பு 
மலர்ந்தும் 
இருந்தது. 

" இவர் யார் ? "

என்று 
மன்னர் கேட்டார்.
 
" மேற்கூறிய 
  பத்து சாதனை
  புரிந்தவர்களின் 
  ஆசிரியர் இவர் "

என்று  கூறினர்
காவலர்கள்.

இதை கேட்ட 
மன்னர் மிகுந்த 
மகிழ்ச்சி அடைந்து...

தன் 
ஆசனத்திலிருந்து 
எழுந்து வந்து...

அந்த 
ஆசிரியரை 
கைகூப்பி 
வணங்கினார்.

மேலும்...
 
" சாதனை புரிந்த
  இந்த பத்து 
  பேரும்...

  சிறந்த 
  மனிதர்கள்தான்
  சந்தேகமில்லை.

  இருப்பினும்...

  இவர்களை 
  உருவாக்கிய 
  ஆசிரியரரான
  இவரே... 

  மிக 
  சிறப்பு 
  வாய்ந்தவர்.

  இவரே
  இந்த நாட்டில் 
  மிக சிறந்த 
  மனிதர் "

என்று நாட்டு 
மக்களுக்கு 
அறிவிப்பு
செய்தார்.
 
மேலும்...

பண முடிப்பும்
பரிசுகளும்
வழங்கி...

அவரை 
மனமுவந்து
கௌரவித்தார்.

சாதனை புரிந்த
பத்து பெரும்...

மன்னரின் 
தீர்ப்பை
மனமுவந்து 
ஏற்றதுடன்...

ஆசிரியரின் 
காலில் விழுந்து 
வணங்கி...

அவரிடம்
ஆசிகளையும்
பெற்றனர்.

வாங்க.

அகிலத்தை
மாற்ற கூடிய
அற்புத சக்தி
படைத்தவர்கள்
ஆசிரியர்கள்
மட்டுமே.

அவர்களை
மதிப்பதில்
பெருமை
கொள்வோம்.

அவர்களை
துதிப்பதில்
மகிழ்ச்சி
அடைவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை. சுந்தரமூர்த்தி

இது இருந்தால்..கொரோனா பயம் வேண்டாம்..

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்.
அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.
அதன் விபரங்கள் 
#மூலிகை #தேநீர்:
சுக்கு - 100 கிராம்,
அதிமதுரம் - 100 கிராம்,
சித்தரத்தை - 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் - 10 கிராம்,
திப்பிலி - 5 கிராம்,
ஓமம் - 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு - 5 கிராம்
மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.
பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.
இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.
இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.
கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!
பத்தியமில்லை.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.
 எல்லோருக்கும் பயனுள்ள இந்த அரிய குறிப்பை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்க.
வாழ்க சித்த மருத்துவம்.
வளர்க தமிழரின்

Sunday, August 09, 2020

புதிய பார்வை... புதிய கோணம்...

🍁🍁 புதிய பார்வை 🍁🍁

ஆல்பர்ட் 
ஐன்ஸ்டீன் 
உலகம் அறிந்த 
அறிவியல் அறிஞர்.

ஜெரோம் 
விட்மன் 
புகழ்பெற்ற 
அமெரிக்க 
நாவலாசிரியர்.

இவர்கள் 
இருவரும் 
இணைபிரியாத 
நண்பர்களாக 
மாறியது...

ஒரு 
சுவாரஸ்ய 
நிகழ்வு ஒன்றில்.

விட்மன் 
இளைஞராக 
இருக்கும்போது...

ஒரு 
செல்வந்தரின் 
வீட்டு நிகழ்ச்சிக்கு 
சென்றிருந்தார்.

அப்போது 
'பாஷ்' எனப்படும் 
இசை நிகழ்ச்சி 
அங்கு நடந்து 
கொண்டிருந்தது. 

இசையில் நாட்டம் இல்லாதவராக 
இருந்த விட்மன்
இசை ஞானம் 
உள்ளவர் போல...

எல்லோரும் 
கை தட்டும்போது 
இவர் கை 
தட்டுவதும்...

எல்லோரும்
தலையாட்டும்போது 
இவர் தலையை
ஆட்டுவதுமாக
இருந்தார்.

திடீரென்று 
விட்மனின் தோளை 
யாரோ தட்டினார்கள்.

விட்மன் 
திரும்பி பார்த்தார்.

தட்டியவர் 
அறிவியல் அறிஞர் 
ஐன்ஸ்டீன்.

அப்போது அவர்கள்
ஒருவரை ஒருவர்
அறிந்திருக்கவில்லை.

" உங்களுக்கு 
  'பாஷ்' இசை பற்றி 
  தெரியுமா ? "

என்று கேட்டார் 
ஐன்ஸ்டின்.
 
ஐன்ஸ்டினின் 
கண்களை நேராக 
பார்த்த விட்மன் 
பொய்சொல்ல 
பிடிக்காமல்...

" அதை பற்றி 
  எனக்கு தெரியாது "

என்று 
கூறினார்.

உடனே 
விட்மனின் 
கையை பிடித்து 
ஒரு மாடி அறைக்கு 
அழைத்து சென்றார் 
ஐன்ஸ்டீன்.

அங்கு 'பாஷ்'
இசையின் 
நுணுக்கங்களை 
எடுத்து கூறியவர்...

" உங்களுக்கு முழு 
  விருப்பமிருந்தால்
  இசையை எளிதில் 
  கற்றுகொள்ளலாம்"

என்றதுடன்
அவரை இசையில்
நாட்டம் கொள்ள...

மேலும் 
சில எளிய 
பாடல்களை 
பாடி காட்டி...
 
இசை 
குறிப்புக்களை
வழங்கி அசத்தவும்
செய்தார் ஐன்ஸ்டின்.

இதை
மிகவும் ரசித்த 
விட்மன்...

' தான் காண்பது 
 கனவு தானா ' 

என 
ஆச்சரியப்பட்டு...

ஐன்ஸ்டீன் 
எதிரில் சில 
பாடல்களை
தானும்
பாடிக்காட்டி...

அவரின்
பாராட்டை
பெற்றார் விட்மன்.

" இசை   
  இவ்வளவுதான்
  இனி ரசிக்க       
  தொடங்குங்கள் "

என்று 
விட்மனை
வாழ்த்தினார்
ஐன்ஸ்டின்.

"  உங்களின்
   பொன்னான
   நேரத்தை 
   ஒதுக்கி...

   முன்பின் 
   அறிமுகமில்லாத 
   எனக்கு... 

   இவ்வளவு 
   சிரத்தையை
   நீங்கள் 
   எடுத்தீர்கள்.

   தங்களுக்கு
   என் நன்றிகள் "

என்று 
கூறினார் விட்மன்.

நிகழ்ச்சியின் 
இறுதியில்...
 
விழா 
ஏற்பாடு 
செய்த தலைவர்...
 
" Mr.ஐன்ஸ்டீன்...

  நிகழ்ச்சியை 
  பெரும்பாலும் 
  நீங்கள் ரசித்து
  பார்க்கவில்லையே?
  
  இடையில் எங்கு
  சென்றீர்கள் ? "

என 
கேட்டார்.

" நீங்கள் 
  சொல்வது
  உண்மைதான்.

  நிகழ்ச்சியின்
  இடையில்...

  மனிதர்களுக்கு 
  இடையேயான 
  மகத்தான ஒரு 
  செயலில்...

  நான் 
  ஈடுபட்டு கொண்டு
  இருந்தேன் " 

என்று 
கூறினார் 
ஐன்ஸ்டின்.

" ஒன்றும்
  புரியவில்லை "

என்றார் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்.

" முன்பின் தெரியாத   
  ஒரு மனிதரின் 
  அன்பின் 
  எல்லைக்குள் 
  செல்ல...

  ஒரு 
  நுழைவாயில்
  இன்று 
  திறக்கப்பட்டது "

என்று 
கூறினார்
ஐன்ஸ்டின்.

பெற்ற 
அறிவை 
அறிவியல்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல்...
 
சக 
மனிதரின் 
அன்பிற்கும் 
பயன்படுத்திய 
ஐன்ஸ்டீன் புகழ்...

இன்றளவும்
நிலைத்திருக்க 
இதுவே காரணம்
என்றால் அது
மிகையல்ல.

வாங்க...

மனிதம்
பழகுவோம்.

மகத்துவராக
மாற 
தொடங்குவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி முனை.சுந்தரமூர்த்தி



Saturday, August 08, 2020

மேலான் மாணவன் என்பதில் பெருமை...

நன்றி...!  நன்றி....!

உலகெங்கும் தன் குழந்தைகளை புகழ் பரப்பி வரச் செய்யும்  சேலம் மாநகரின் அடையாளமாக  இன்று என்றும் விளங்கும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் 90 வது ஆண்டு விழா மலர் தயாரிக்கும்  ஆசிரியக் குழுவில் எனக்கு வாய்ப்பளித்து பெருமையுர செய்த பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் 90 ஆண்டு விழா குழுவிற்கு எனது மனமாந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்...

இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்
மேலாண் மாணவர் (1981-82).


Friday, August 07, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



" லட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  துட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  நகை
  நட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  விட்டு
  கொடுத்தால்
  தான்
  இன்பம்
  வரும் "

நீதியரசர்
கற்பக விநாயகம்
அவர்களின்
வார்த்தைகள்
இவை.

' விட்டு 
  கொடுப்பவர்
  கெட்டு
  போவதில்லை...

  கெட்டு
  போபவர்
  விட்டு
  கொடுப்பது
  இல்லை '

இது
பெரியோர்களின்
வாக்கு.

விட்டு 
கொடுப்பது
என்பது...

மென்மையானவர்
மேன்மைமிக்கவர்
குணங்களில் 
ஒன்று.

அதை
ருசித்தவர்க்கே
அதனை
ரசிக்க தெரியும்.

அதை
ரசிப்பவர்க்கே
அதன்
ருசி புரியும்.

அதெல்லாம்
ஒரு மகா
ரசனை.

நீங்களும்
வாங்க...

ரசிக்க
ருசிக்க
தொடங்கலாம்.

வாழ்க்கையை
கொண்டாட
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


புதிய பார்வை ...புதிய கோணம்.....

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

" நட்பு 
  என்பது, 
  சூரியன் போல...

  எல்லா நாளும் 
  பூரணமாய் 
  இருக்கும்.

  நட்பு 
  என்பது
  கடலலை போல...

  என்றும் 
  ஓயாமல் 
  தொடர்ந்து வரும்.

  நட்பு 
  என்பது, 
  அக்கினி போல...

  எல்லா 
  மாசுகளையும் 
  அழித்து விடும்.

  நட்பு 
  என்பது 
  தண்ணீர் போல...

  எதில் 
  ஊற்றினாலும் 
  ஒரே மட்டமாய் 
  இருக்கும்.

  நட்பு 
  என்பது
  நிலம் போல...

  எல்லாவற்றையும் 
  பொறுமையாய் 
  தாங்கி 
  கொள்ளும்.

  நட்பு 
  என்பது, 
  காற்றை போல...

  எல்லா 
  இடத்திலும் 
  நிறைந்து இருக்கும் "

வைர முத்து 
அவர்களின்
வார்த்தைகள்
இவை.

வாங்க...

ஆண்டிற்கு
ஒரு நாள்
மட்டும்...

நண்பர்கள்
நாள் 
எதற்கு ???

உண்மையான
நட்பிற்கு
ஒவ்வொரு
நாளுமே...

நண்பர்கள்
நாள் தான்
நமக்கு.

நட்பை
கொண்டாட
தொடங்குவோம்.
 
நட்பின்
ஆனந்த
அலையில் 
மூழ்கி...

முத்துக்கள்
எடுக்க
மகிழ்ச்சியில்
திளைக்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி முனை.சுந்தரமூர்த்தி..


Tuesday, August 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மன்னர் 
ஒருவர் இருந்தார்.

ஒருநாள் இரவு 
தூக்கத்தில் ஒரு 
கனவு கண்டார்.

தனது 
அனைத்து 
பற்களும் 
விழுந்து 
விட்டதாக 
'அது' இருந்தது.

திடுக்கிட்டு 
விழித்த மன்னர் 
பயந்து போனார்.

மறுநாள்
ஆஸ்தான
ஜோதிடரை 
அழைத்து...

தான் கண்ட 
கனவினை 
விவரித்து...

" கனவின்
  விளைவாக 
  என்ன நடக்கும் ? "

என்று 
கேட்டார்.

ஓலை 
சுவடிகளை 
ஆராய்ந்த ஜோதிடர்... 

" உங்களுக்கு 
  முன்னரே 
  உங்கள் 
  சொந்தங்கள் 
  இறந்து
  விடுவார்கள் " 

என்று 
கூறினார்.

இதைக்கேட்டு 
வெகுண்ட 
மன்னர்...

ஜோதிடரை 
சிறையில்
அடைத்தார்.

மன 
சஞ்சலம் 
தீராத மன்னர்... 

வேறொரு 
புகழ்வாய்ந்த 
ஜோதிடரை 
வரவழைத்து...

தான் கண்ட 
கனவினை கூறி...

" இதன் 
  விளைவுகள் 
  என்னவாக
  இருக்கும் ? "

என்று 
வினவினார்.

அந்த
ஜோதிடர்... 

" மன்னா !
  
  உங்களுக்கு 
  நீண்ட ஆயுள் 
  உண்டு.

  உங்கள் 
  உறவினர்கள் 
  மறைந்த 
  பின்னரும்...

  நீங்கள் 
  உயிர்  
  வாழ்வீர்கள் "

என்று 
கூறினார்.

மன்னர் மகிழ்ந்து 
அவருக்கு பரிசுகள் 
கொடுத்து அனுப்பி 
வைத்தார்.

இரண்டு  
ஜோதிடர்களும்
கூறிய கருத்து 
ஒன்றுதான்.

ஆனால் 
சொல்லப்பட்ட 
விதம்தான் வேறு.

வாங்க...

எதிர்மறையான 
கருத்துக்களையும் 
நேர்மறையாக...

கேட்பவர் மனம்
வருந்தாதவாறு...

கூறும் 
விதங்களை 
அறிந்து 
கொள்வோம்.

' அந்த 
  அற்புத
  முறைகளை '

நம் வாழ்வில்
செயல் படுத்த...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்

Monday, August 03, 2020

சாமானியன்...

🧑🏻📚✒️👩🏼✏️

அட்டை 
போடாத
அஞ்சாவது புக்கு
என்னைக்கோ கிழிஞ்சுருச்சு...

ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு
அறிவிப்பு மட்டும்
வந்திருச்சி...

பள்ளிக்கூடம்
பூட்டு போட்டு 
மாசம் 
இன்னைக்கு
நாலாச்சு...

பீசு கட்டி
படிக்கிறவனுக்கு
"ஸ்கூல்" 
வீட்டுக்கே 
வந்தாச்சு...

பிசபிசுத்துப்போன
எங்க படிப்பு
என்னாச்சு...

ஆன்லைன்ல
படிக்கிறேன்டா..
ஆணவமா
அண்டை வீட்டு 
ஆதி சொன்னான்..

எதிர்வீட்டு
கோபி சொன்னான்..
ரெண்டு ஜிபி
தேவைப்படுமாம்..

சட்டையில 
மட்டுமில்ல
அப்பா போன்லயும்
ரெண்டு பட்டன் இல்லை...

ஸ்மார்ட்டு போன் வாங்க
காசு இருந்தா
பீஸு கட்டுற ஸ்கூல்லேல
படிச்சிருப்பேன்...

கூலிக்கு 
மாரடிக்கும்
குருவம்மா 
எங்கம்மா...

கூறுகெட்ட
கொரானா
போனதுக்கு 
பின்னால்
வந்தா போதும்
சொல்லிட்டாளாம்
ஓனரம்மா...

அதனாலே
வீட்டுக்குள்ளே
முடங்கிருக்கா
எங்கம்மா...
ஆத்தா...
அப்துல் கலாம் ஆகனும்னா.
அரசு பள்ளியில
சேர்த்துவிட்டா...?!!!

ஒரு வேளை
சுடு சோறு
திண்பேன்னு
ஆசைப்பட்டா...!!

ரணமான 
அவ மனசு
குணமாவதெப்போ...

இப்ப...
சொல்லித் தரவும்
ஆளில்லை...
சோத்துக்கும் வழியில்ல

வறுமை ஒன்னும்
புதுசில்ல...
வாழ்ந்து பார்த்து
பழகிடுச்சு...
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான்
வாசல் பார்த்து
காத்திருக்கேன்...

மாஸ்க் வாங்க
காசு இல்ல...
கர்ச்சீப் தான்
கட்டிக்கிறேன்...

புக்கு மட்டும் 
குடு சாமி...
புரட்டி கிரட்டி கத்துக்கறேன்...

இப்படிக்கு...

அரசுப்பள்ளி மாணவன்
🙏

 (பகிர்வு )

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

சின்ன
சின்ன
வருத்தங்கள்...
 
கோபமாக
மாறுகின்றன.

சின்ன
சின்ன
கோபங்களே...

சினமாக
மாறுகின்றன.

சின்ன
சின்ன
சினங்களே...

பகையாய்
மாறுகின்றன.

சின்ன
சின்ன
பகையே...

போராய்
மாறுகின்றன.

சின்ன
சின்ன
போரே...

மிக பெரிய
அழிவை
ஏற்படுத்து
கின்றன.

" யாரிடம் 
  குறை இல்லை

  யாரிடம் 
  தவறில்லை

  வாழ்வது 
  ஒரு முறை

  வாழ்த்தட்டும் 
  தலைமுறை "

என்னும்
கண்ணதாசனின்
வரிகளுக்கு
ஏற்ப...

வாங்க...

வருத்தங்களை
விலக்கி 
வைப்போம்.

மன்னிக்க
தொடங்குவோம்.

மகிழ்ச்சியை
ஏற்படுத்துவோம்.

நம்மால
முடியுமா ???

கேள்விகள்
வேண்டாம்.

முயற்சிகள்
செய்யலாம்.

365 நாளும்
மகிழ்ச்சியாய்
இருக்கலாம்.

வாய்ப்புகள்
நம் வசம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்

Sunday, August 02, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

உலக
புகழ் பெற்ற
கால் பந்தாட்ட
வீரர் பீலே.

அவர்
தொடக்கத்தில்
போதுமான
அடிப்படை
பயிற்சிகளை
பெறவில்லை.

இருப்பினும்...

அவர் 
அணியில் 
சேர்த்து 
கொள்ளப்பட்டார்.

' அணியில் தேர்வு 
  செய்யபட்டதின்
  ரகசியம் என்ன ? '

என அவரிடம்
கேட்க பட்டது.

" என்
  வாழ்க்கையில்
  எனக்கு
  தெரிந்தது...

  உற்சாகம்
  உற்சாகம்
  உற்சாகம்
  மட்டுமே.

  ஆடுகளத்தில்
  எப்போதும்
  உற்சாகமாக
  இருந்தது...
 
  சுற்றி
  இருந்தவர்களை
  எப்போதும்
  உற்சாகமாக
  வைத்திருந்தது...

  வெற்றிகளை
  பெற்றே
  தீருவேன்
  என
  முழுமையாக
  நம்பியது...

  இதுதான்
  அணியில்
  என்னை
  தேர்ந்தெடுக்க
  காரணம் "

என்று
கூறினார் பீலே.

எப்போதும்
உற்சாகமாக
இருப்பது...

எதையும்
சாதிக்க
நம்மால்
முடியும்
என
நம்புவது...

உறுதியுடன்
முயற்சிகள்
செய்து
வெற்றிகள்
பெறுவது
என்பது...

நம்மாலும்
முடியும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

வெற்றிகளை
பெறலாம்.

மகிழ்ச்சியாய்
இருந்து
வாழ்வை...

ரசிக்கவும்
தொடங்கலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.