🍁புதிய பார்வை🍁
மடிப்பாக்கத்தில் ஒரு பெண்மணி.கணவன் ஆதரவு உள்பட யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் சத்துணவு கூடத்தில் ஆயா வேலையில் சேருகிறார்...
அவர் குடும்பத்தில்
ஐந்து நபர்கள்.
வருமானம் போதாமையால் அப்பகுதியில் இட்லி கடை வைக்கிறார்...
கிடைத்த வருமானத்தில் குடும்பம் சுமாராக இயங்கியது...
சூழலை புரிந்து கொண்ட மகன் தன் படிப்பிலேயே முழு கவனத்தை செலுத்தி,
அனைத்து வகுப்பிலேயும் முதல் மாணவனாக வருகிறான்...
பிட்ஸ் பிலானியில்
படிப்பை தொடர்ந்த
மகன்,அவமானங்கள்,வேதனைகள்,வலிகள் அத்தனையும் புறம் தள்ளி,படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்துகிறான்.
கல்லூரியில் நடைபெற்ற வளாக தேர்வில் கிடைத்த,
ஒரு நாள் ஊதியம் ஏழாயிரம் ரூபாய் வேலையை உதறி விட்டு, ஓராயிரம்பேருக்கு வேலை தரும் எண்ணத்தை,தன் மனதில் விதைக்கிறான்...
நண்பர்கள், உறவினர்கள்
இவனை பிழைக்க தெரியாதவன் என பரிகாசம் செய்கின்றனர்.
அவைகளை புறம் தள்ளி ஒரு நிறுவனத்தை தொடங்குகிறான்.
அவன்
அவராகிரார்.
இன்று கோவா,
அகமதாபாத்,சென்னை உள்பட பல நகரங்களில் அவரது நிறுவனங்கள் வெற்றி நடை போட்டு கொண்டு வருகிறது.
குடிசையில் வசித்த அவர்,
ஒபாமாவின் அழைப்பின் பேரில்,நாற்பது நாட்கள் அவரது விருந்தாளியாக
வாழ்ந்து இருக்கிறார்.
80 விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.
2003 ல் அம்பானி வாங்கிய விருதை, 2008 ல் இவர் வாங்கி ஆச்சர்யப்பட
வைத்திருக்கிறார்.
அவர்...
அவர்...
மதிப்பிற்குரிய
திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள்.
" ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் அது போராடும் போர்க்களமே...
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்...
லட்சியம் நிச்சயம்
வெல்லும்
ஒரு நாளில் "...
என்னும்
வைர வரிகளுக்கு
ஏற்ப...
போராட்டம்
நிறைந்த
வாழ்வையே...
பூக்கள் நிறைந்த
பாதையாக,
மாற்றி அமைத்து...
தன் லட்சிய வாழ்வில்,
வெற்றி பெற்றுள்ளார் அவர்.
வாங்க...
நமக்கும்
இலட்சியங்கள்
பல உண்டு...
அவரை போல
நாமும்,
நம் லட்சியத்தில்
வெற்றி பெற,
முயற்சிகள்
செய்வோம்.
அன்புடன்
காலை
வணக்கம்.
நன்றி
திரு.சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment