*📍 பொது மக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் ஆசிரியர்கள் மீது கோபத்தில் பொங்கும் அனைவருக்கும் இந்த பதிவு..*
*📍 JACTO-JEO அமைப்பு 9 கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தது.*
*📍இதுல எல்லாருக்கும் தெரிந்தது ஓய்வு ஊதியம்..*
*📍 ஆசிரியருக்கு ஓய்வூதியம் வேணுமா?.*
*📍 அவர் தான் நிறைய சம்பளம் வாங்குகிறார் அல்லவா? எதுக்கு போராட்டம் என்று தெரிந்து பேசுங்கள்..*
*📍 ஆசிரியர் சம்பளத்தில் மாதம் 10% ஓய்வூதியமாக பிடிக்கப்படும்..*
*📍 ஓய்வு பெற்ற பின் அதை வழங்க வேண்டும்..*
*📍 ஆனால் 28 ஆயிரம் கோடி ஆசிரியர்களிடமும் அரசு ஊழியர்களிடமும் பெற்று,,,*
*📍 ஓய்வு பெறும் நிலையில் அவர்களுக்கு திருப்பி தரவில்லை இந்த அரசு ..*
*📍 எங்கள் காசு கேட்டு நாங்கள் போராடினால் உங்களுக்கு என்ன செய்கிறது..??*
*📍 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் போது போய் வரிசையில் நின்னிங்க...*
*📍 யாரு காசை வாங்க நின்னிங்க..*
*📍 நான் கட்டின பணத்தை(பத்து லட்சம்) ஓய்வுக்கு அப்புறம் நான் கேட்டா!!,,*
*📍 வேலையை விட்டு போங்கடா அப்படின்னு நீங்க பேசுறீங்க...*
*📍 ஆயிரம் ரூபாய் கொடுக்கவும்,, ஸ்டெர்லைட் போராட்டத்தில் பத்து பேருக்கு மேல சுட்டுக் கொன்ற எடப்பாடி உங்களுக்கு நல்லவரா ஆயிட்டாராங்க..*
*📍 உங்களுக்கு அ, ஆ சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கெட்டவர்களாக ஆயிட்டாங்க...*
*📍 இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு பேசுங்க..*
*📍 மீடியா,,நியூஸ் பேப்பர் இதெல்லாம் பாத்து முடிவு பண்ணாதீங்க ..*
*📍 உங்கள் பக்கத்துல இருக்கற ஆளுங்க கிட்ட கேளுங்க..*
*📍 தெரியலேன்னா அமைதியா இருங்க..*
*📍 2014 க்கு அப்புறம் ஒரு டீச்சர் கூட புதிதாக Appointment ஆகலை..*
*📍 2014 ல் ஒரு பள்ளியில் 10 ஆசிரியர் பணியிடம் இருந்தது..*
*📍 இப்போது அதே பள்ளியில் 5 ஆசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது.*
*📍மீதி 5 அரசிடம் ஒப்படைக்கப்பட்டது..*
*📍 அப்டின்னா இருந்த 5 காலி பணியிடமும் ிஇனி கிடையாது..*
*📍 அப்போ TET பாஸ் பண்ணியவர்கள வீட்லயே உட்கார வேண்டியது தான்..*
*📍 உட்காந்து கிட்டு 10000 கிடைச்ச போதும்னு கடைசி வரை அதுல தான் இருப்பீங்க..*
*📍 2 வருசம் கழிச்சு நீங்களும் சம்பள உயர்வு வேணும்னு வந்து நிப்பீங்க..*
*📍 அப்போ 5000 -க்கும் வேறு ஒருத்தர் ரெடியா நிப்பார்..*
*📍 உங்களுக்கு அரசாங்க வேலையே கிடைக்காது..*
*📍 காலி பணியிடங்களை நிரப்ப உங்களுக்கும் சேர்த்து கோரிக்கை வைச்சா!;,,*
*📍 நீங்கள்!!,,*
*📍 எங்களை வெளிய போ.. நான் வரேனு சொல்றீங்க..*
*📍 உங்களுக்கு இடம் இருந்த தானே வருவீங்க..*
*📍 டிசம்பர் 2018 ல் 3800 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது..*
*📍 அப்படின்னா 3800 posting போச்சு..இனிமே அது கிடையாது..*
*📍 இது எத்தனை பேருக்கு தெரியும்?.*
*📍 இது எந்த media,,,newspaper ல் வந்தது?..*
*📍 1 முதல் 5 வகுப்பு உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்கள் 5 வகுப்புகளை கவனிக்க முடியுமா?.*
*📍 தனியார் பள்ளியில் 1 - ஆம் வகுப்புக்கு மட்டும் 5 ஆசிரியர்கள்..*
*📍 உங்க வீட்ல ஒரு குழந்தையை கவனிக்க முடியுமா உங்களால்....*
*📍 5 வகுப்புக ளில் இருந்த அந்த 2 ஆசிரியர்களில் ஒருவரை அங்கன்வாடிக்கு போக சொன்னால்!!,,*
*📍 1 முதல் 5 வகுப்பை 25 பாடங்களையும் ஒரு ஆசிரியர் கவனித்தால்,,*
*📍 கல்வித் தரம் தனியார் பள்ளிக்கு சமம் ஆகுமா...*
*📍 அரசுப் பள்ளியில் LKG,, UKG தொடங்கினா அதற்கு புதிதாக இடை நிலை ஆசிரியர்கள் Appointment செய்ய வேண்டும் என நினைத்து,,,*
*📍 அங்கன்வாடி யில் தொடங்கப் படுகிறது..*
*📍 அப்போ D.T.Ed படித்தவர்கள் ஒருத்தருக்கும் வேலை ாகிடைக்காது..*
*📍 தமிழக அரசாங்கத்தை இனி மேல் தனியார் நிறுவனங்களைப் போல காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து நடத்த,,*
*📍 ஒரு மாபெரும் சதித் திட்டத்தை அரசாணை 56 மூலமாக அரசு நிறைவேற்றி இருக்கிறது.*
*📍 இந்த அரசாணை 56 என்ன சொல்கிறது தெரியுமா?.*
*📍 தற்போது மூன்றரை லட்சம் அரசு ஊழியர் காலியிடங்கள் இருக்கின்றன.*
*📍 இந்த இடங்களையும், இனி மேல் காலியாகிற பணியிடங்களையும்,,*
*📍 அவுட்சோர்சிங் முறையில் தினக் கூலி அடிப்படையில் ஆட்களை சேர்த்து நிரப்ப வழி அமைக்கிறது.*
*📍இது, அடுத்த தலைமுறையினரை படு பாதாளத்தில் தள்ளி விடும்.*
*📍 வேலை வாய்ப்புகளை அழித்து விடும் என்பதால் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.*
*📍 அது போல, அரசாணை 100 மற்றும் 101 ஆகியவைகளும் ஆபத்தான அரசாணைகள் தான்.*
*📍 ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்க இந்த அரசாணைகள் வழி செய்கின்றன.*
*📍 இப்படி இணைப்பதன் மூலம், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது என்பதாலும்,,,*
*📍 பள்ளிகளில் ஆள் குறைப்பு செய்ய நேரும் என்பதாலும்,,*
*📍 இந்த ஆணைகளையும் ரத்து செய்யும் படி*
*போராடுகிறார்கள்.*
*📍 புதிய பென்சன் திட்டம் என்பது ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன்,,,*
*📍 அரசு தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து இபிஎஃப்பில் செலுத்த வேண்டும்.*
*📍 இப்படிப் போடப்படும் தொகையில் ஒரு பகுதி பணிக் கொடையாகவும்,,,*
*📍 மீதமுள்ள தொகை பென்சனாகவும் கிடைக்கும்.*
*📍 ஆனால், அந்தத் தொகையை கட்ட அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள்.*
*📍 இபிஎஃபில் கட்ட வேண்டும் என்றால் 28 பிளஸ் 28 – 56 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும் வேண்டும்.*
*📍 அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.*
*📍 அரசுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று தான் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும் படி கேட்கிறோம்.*
*📍 பழைய பென்சன் திட்டத்திற்கு அரசு சார்பில் பணம் போட வேண்டியதில்லை. வட்டியும் 7 ஆயிரம் கோடி இருந்தால் போதும்.*
*📍 அதாவது, மொத்தத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதும்.*
*📍 இதன் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் தான்.*
*📍 ஆனால்,,,*
*📍 இதைக் கூட செய்ய முடியாது என்று அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பது தான்,,,*
*📍 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சொல்லப்படும் விளக்கம்.*
*📍 8 வருடமா ஆட்சி செய்து நிதியில்லை அப்படின்னு சொன்னால் நீங்கள் யாரை கேள்வி கேக்கணும்..*
*📍 வயித்தெரிச்சல் பட்டு ஆசிரியர்களை கேட்கிறீர்கள் ..சம்பளம் இவ்ளோ வாங்கறாங்கன்னு..*
*📍 நீங்களும் TRB,TET,TNPSC, UPSC இப்படி தேர்வு எழுதுங்க..*
*📍 திறமை இருந்தால் பாஸ் ஆகுங்க..*
*📍 அங்க போய் எங்களுக்கு குறைவாக சம்பளம் குடுங்க அப்படின்னு சொல்லி தமிழ்நாட்டு நிதி நிலைமையை சரி செய்யுங்கள்..*
*📍 இனிமே நீங்கள் TET, TRB இல் தேர்வானல் தானே உண்டு..*
*📍 உங்கள் காலி பணியிடத்தை தான் அழித்து விட்டார்களே..*
*📍 நீங்கள் எப்படி உள்ள வருவீங்க... உங்களுக்கும் சேர்த்து போராடுகிற எங்களையும் போக சொல்லிட்டீங்க... வந்து பாருங்க ...*
*📍 அரசு பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டு,,*
*📍 தனியார் பள்ளிகளில் 50000 பணம் கட்டி படிக்க வைக்கும் போது தான் தெரியும்..*
*📍 ஏன் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று...*
*📍 தொலைக் காட்சி செய்தி மற்றும் செய்தித் தாள் மட்டும் பார்த்து சமூக வலை தளங்களில் ஆசிரியர்களைப் பற்றி கேவலமாக பேசும் அனைவருக்கும் இந்தப் பதிவு..*
*📍 கடைசியாக ஒரு வார்த்தை..*
*📍 இதைப் படிக்க உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் ஒரு ஆசிரியர் என்று மறவாதே...*
*📍 இனியாவது இத்தகைய போராட்டங்களில் உள்ள நியாயங்களை உணர வேண்டும்.*
*📍 வெறுமனே போராட்ட உணர்வுகளை எதிர்த்தால்!!,,*
*📍 நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.*
*📍 நிரந்தர வேலை வாய்ப்புகளை ஒழித்து விட்டு!!,,*
*📍 கார்பரேட் கம்பெனிகளைப் போல அரசுகள் மாறவும்!!,,*
*📍 கார்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைப் போல பணிப் பாதுகாப்பு இல்லாத அடிமைகளாக!!,,*
*📍 எதிர் கால சந்ததிகள் மாறவும் வழி அமைத்து விடும் என்பதை உணர்ந்தால் சரி.*
No comments:
Post a Comment