Thursday, February 28, 2019

உண்மை தலைவன்....சிந்திக்க

🍁புதிய பார்வை🍁

ஒரு
சாலை...

ஏழு
அல்லது
எட்டு
பேர்,
ஒரு
பெரிய
பலமான
கட்டையை...

சாலையின்
ஒரு
பக்கத்தில்
இருந்து,
மறு
பக்கத்தில்
கொண்டு
செல்ல...

மிகவும்
சிரம
பட்டு
கொண்டு
இருந்தார்கள்...

அவர்களை
அதட்டி,
வேலை
வாங்கி
கொண்டு
இருந்தான்,
அவர்களின்
தலைவன்...

அப்போது
அவ்வழியாக
குதிரையில்
வந்த
வீரன்,
நடப்பதை
அமைதியாக
கவனித்தான்...

அந்த
தலைவனை
பார்த்து,
நீயும்
ஒரு
கை
வைத்து,
அவர்களுடன்
வேலை
செய்ய
கூடாதா,
என
கேட்டான்...

குழு
தலைவன்,
குதிரையில்
வந்த
வீரனை
பார்த்து...

நான்
யார்
தெரியுமா...
அவர்களின்
தலைவன்,
அவர்களோடு
சேர்ந்து
என்னை,
வேலை
செய்ய
சொல்கிறாயா...

என
ஆவேசமாக
கத்தினான்...

குதிரையில்
இருந்த
வீரன்,
கீழே
இறங்கினான்...

அவர்களுடன்
சேர்ந்து,
அந்த
பலமான
கட்டையை,
வெற்றிகரமாக
சாலையின்
மறுபக்கம்,
இடம்
பெயர்க்க
செய்தான்...

குட்டி
தலைவனை
பார்த்து,
இதைபோல
கடினமான
வேலை
இருந்தால்,
சொல்லி
அனுப்பு,
நான்
வந்து
உதவி
செய்கிறேன்,
என்று
கூறினான்...

நீ
யார்,
உனக்கு
விலாசம்
என்ன,
என்று
அலட்சியமாக
வினவினான்
அந்த
குட்டி
தலைவன்...

என்
பெயர்
ஜார்ஜ்
வாஷிங்டன்,
உன்
தலைமை
தளபதி,
என்று
பதில்
கூறிய,
அந்த
குதிரை
வீரன்,
சிட்டாய்
பறந்தான்...

வெற்றியின்
ரகசியம்
இதுதான்...

உடன்
இணைந்து,
பணி
செய்தால்,
உயர்வு
நிச்சயம்...

அன்புடன்
காலை
வணக்கம்...

Tuesday, February 26, 2019

Kangal neeye from the movie Muppozhuthum un karpanaigal

Kangal Neeye Karaoke - Muppozhudhum Un Karpanaigal Karaoke

சிந்திக்க....

🍁புதிய பார்வை🍁

இன்று நாம்
சந்திக்கும்
நபர்களை...

உளமார
ஊக்குவிப்போம்...

உண்மையாக
பாராட்டுவோம்...

அவர்களுக்கு
மனதார
நன்றி
தெரிவிப்போம்...

நாம்
ஊக்குவிக்கும்
ஒவ்வொரு
வார்த்தையும்...

புதிய
முயற்சிகள்
ஏற்படுத்த
உதவும்.

நம்
பாராட்டுகள்...

புதிய
சாதனைகளை,
புரிய
வைக்கும்.

நம்
நன்றி
கூறுதலில்...

பிறர் மனம்
குளிரும்.

நாம்
உதிர்க்கும்,
ஒவ்வொரு
மகிழ்ச்சி
கரமான
வார்த்தையும்...

நம்மை
புதிய
உலகத்திற்கு
அழைத்து
செல்லும்.

அன்புடன்
காலை
வணக்கம்...

ஆசிரியரின் பெருமை...

ஒரு ஊரில் கந்தசாமி என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான்.

மனைவி அவனிடம், "எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!'' என்றாள்.

மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.

"இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?' என்று சிந்தித்தான் அவன்.

நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான்.

நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான்.

உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான். மாம்பழத்தை பறித்தான்.

பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான்.

மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான்.

அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார்.

அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர்.

ஆசிரியரைப் பார்த்து, "இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்!'' என்றார்.

"அரசே! அப்படியே செய்கிறேன்!'' என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார்.

மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். "இவர்கள் இருவரும் என்னைவிட முட்டாள்களாக இருக்கிறார்களே' என்று நினைத்தான்.

"இங்கே மூன்று முட்டாள்கள்!'' என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், "இங்கே மூன்று பேர்தாம் இருக்கிறோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானே...' என்று கோபம் கொண்டார்.

அவனைப் பார்தது,"எங்கள் இருவரையும் உன்னுடன் சேர்த்து முட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள்களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்காவிட்டால் உன் உடலில் உயிர் இருக்காது!'' என்று கத்தினார் மன்னர்.

நடுக்கத்துடன் அவன், "அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன்.

மாம்பழப் பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு ஆசைப்பட்டாள்.

அரண்மனைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இருந்தும் மனைவியின் மீது கொண்ட ஆசையால் இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டேன்.
என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.

"மதிப்பிற்கு உரியவர் ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த இருக்கையில் அமர வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்க வேண்டும்.

ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர்.ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.

"எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன் நிலையைவிட்டுக் கீழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்!'' என்றான் அவன்.

இதைக் கேட்ட அரசர், "ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள் என்பதை உன்னால் அறிந்து கொண்டேன்.
இனி இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்!'' என்றார்.

அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து அனுப்பி வைத்தார்.

நீதி:

ஆசிரியரை மதிக்காத சமூகம் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை.

நன்றி
திரு.சுந்தரமூர்த்தி

வீரம்...கவிதை

🇮🇳வீரம்🇮🇳
வீரம்
ஈரம்
இது
தமிழர்களின்
தாரக
மந்திரம்...

சிலர்
சொல்லாலும்
சில
செயலாலும்
வீரம்
காட்டுவர்
ஆனால்
தமிழர்
வாழ்வையே
வீரமாய்
வாழ்வர்...

சமீப
காலங்களில்
தமிழலின்
வீரத்தை
குறைக்கவும்
வரலாற்றை
மறைக்கவும்
ஜல்லிகட்டுக்கு
தடை
என
ஆற்பரிக்கும்
ஒரு
கூட்டம்
இது
சில காலமே..

தமிழரின்
வீரம்
உலகரங்கில்
அரங்கேற
தடை
விதிக்க முடியுமா?...

காற்றுக்கே
வேளியா?
தமிழா
விழித்துகொள்....
எதிர்காலம்
நம்
கையில்
என்ற
நம்பிக்கையோடு...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿











Thursday, February 07, 2019

புதிய பார்வை...புதிந கோணம்....

🍁புதிய பார்வை🍁

மடிப்பாக்கத்தில் ஒரு பெண்மணி.கணவன் ஆதரவு உள்பட யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் சத்துணவு கூடத்தில் ஆயா வேலையில் சேருகிறார்...

அவர் குடும்பத்தில்
ஐந்து நபர்கள்.
வருமானம் போதாமையால் அப்பகுதியில் இட்லி கடை வைக்கிறார்...

கிடைத்த வருமானத்தில் குடும்பம் சுமாராக இயங்கியது...

சூழலை புரிந்து கொண்ட மகன் தன் படிப்பிலேயே முழு கவனத்தை செலுத்தி,
அனைத்து வகுப்பிலேயும் முதல் மாணவனாக வருகிறான்...

பிட்ஸ் பிலானியில்
படிப்பை தொடர்ந்த
மகன்,அவமானங்கள்,வேதனைகள்,வலிகள் அத்தனையும் புறம் தள்ளி,படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்துகிறான்.

கல்லூரியில் நடைபெற்ற வளாக தேர்வில் கிடைத்த,
ஒரு நாள் ஊதியம் ஏழாயிரம் ரூபாய் வேலையை உதறி விட்டு, ஓராயிரம்பேருக்கு வேலை தரும் எண்ணத்தை,தன் மனதில் விதைக்கிறான்...

நண்பர்கள், உறவினர்கள்
இவனை பிழைக்க தெரியாதவன் என பரிகாசம் செய்கின்றனர்.

அவைகளை புறம் தள்ளி ஒரு நிறுவனத்தை தொடங்குகிறான்.

அவன்
அவராகிரார்.

இன்று கோவா,
அகமதாபாத்,சென்னை உள்பட பல நகரங்களில் அவரது நிறுவனங்கள் வெற்றி நடை போட்டு கொண்டு வருகிறது.

குடிசையில் வசித்த அவர்,
ஒபாமாவின் அழைப்பின் பேரில்,நாற்பது நாட்கள் அவரது விருந்தாளியாக
வாழ்ந்து இருக்கிறார்.

80 விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

2003 ல் அம்பானி வாங்கிய விருதை, 2008 ல் இவர் வாங்கி ஆச்சர்யப்பட
வைத்திருக்கிறார்.

அவர்...

அவர்...

மதிப்பிற்குரிய
திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள்.

" ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...

வாழ்வென்றால் அது போராடும் போர்க்களமே...

நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்...

லட்சியம் நிச்சயம்
வெல்லும்
ஒரு நாளில் "...

என்னும்
வைர வரிகளுக்கு
ஏற்ப...

போராட்டம்
நிறைந்த
வாழ்வையே...

பூக்கள் நிறைந்த
பாதையாக,
மாற்றி அமைத்து...

தன் லட்சிய வாழ்வில்,
வெற்றி பெற்றுள்ளார் அவர்.

வாங்க...

நமக்கும்
இலட்சியங்கள்
பல உண்டு...

அவரை போல
நாமும்,
நம் லட்சியத்தில்
வெற்றி பெற,
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி
திரு.சுந்தரமூர்த்தி

Monday, February 04, 2019

கணிதத்தின் அடையாளம் இராமானுஜன்..

...இன்று கணிதமேதை ராமானுஜனின் 133 வது பிறந்த தினம்...

ஈரோட்டின் அடையாளம் இந்த ராமானுஜன்.

ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?

பள்ளி செல்லும் நாட்களில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ராமனுஜன் பற்றிய தொடரை படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.

உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,

ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,

ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,

எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,

இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,

இராமானுஜனின் இல்லம்

1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.

1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.

இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.

ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட  Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.

எது எப்படியோ ……… கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும்.

கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது.. அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…..ஏன் கிடைக்கவில்லை? இவர்களுக்கு அப்படி செய்தததன் மூலம் நமக்கு ஏதாவது சொல்ல வருகிறானா இறைவன்? இங்கே தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியாது தவிக்கிறேன்...

நன்றி ரைட் மந்த்ரா சுந்தர்...

பயனுள்ள சில வின்டோஸ் செயலிகள்...

விண்டோஸ் லேப்டாப் அல்லது பிசி வைத்திருக்கிறீர்களா? இந்த ஆப்களையெல்லாம் முயற்சி செய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

இன்று என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாலும், இன்னும் கணினி மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் ஓஎஸ் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான, அனைவருக்கும் தேவைப்படும் சில ஆப்கள் மற்றும் மென்பொருள்கள் தவிர பெரிதாக வேறு எதையும் நாம் பதிவிறக்குவதில்லை. ஆனால் அப்படி அத்தியாவசிய தேவையில்லையென்றாலும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய சில ஆப்களை பற்றிப் பார்ப்போம்.

Ueli

விண்டோஸில் இருக்கும் சர்ச் ஆப்சன் நன்றாக இருந்தாலும் சில விஷயங்களை அதில் எளிதாகத் தேடமுடியாது. இதை இன்ஸ்டால் செய்து alt+space-ஐ சேர்த்து அழுத்துவதன் மூலமே ஆப், சிறிய கணக்குகள், புரியாத வார்த்தைகள் என வேண்டியதைத் தேடமுடியும். இது மேக் ஓஎஸ்சில் இருக்கும் சர்ச் வசதியைப் போல செயல்படும். மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப இதன் லுக் மற்றும் வசதிகளை எளிதாக மாற்றியமைக்கமுடியும். உங்கள் கம்ப்யூட்டரில் தேடுவதை எளிதாக்க விரும்பினால் இதைப் பதிவிறக்கலாம்.

ShareX
விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எளிதென்றாலும், இந்த ShareX கொடுக்கும் வசதிகளில் பாதியை கூட அது கொடுக்காது. பல வகையான முறைகளில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க உதவும் இது எந்த ஃபார்மட்டில் வேண்டுமோ அதில் போட்டோவை எக்ஸ்போர்ட் செய்யமுடியும். மேலும் இதில் ஸ்கிரீனில் நடப்பதை விடியோவாகவும் ரெகார்ட் செய்யமுடியும். எடுத்தவுடன் நேரடியாக கிளவுட்டில் பதிவேற்றுவது எனப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இது. எனவே அடிக்கடி ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஸ்கிரீன்வீடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
PeaZip

Zip மற்றும் Rar ஃபைல்களை எக்ஸ்ட்ராக்ட் செய்வதற்குப் பெரும்பாலானோர் Winrar ஆப்பைதான் பயன்படுத்துவோம். ஆனால் அது அடிக்கடி பிளான் எக்ஸ்பைரி ஆகிவிட்டது என பாப்-அப்களை அனுப்பும். எக்ஸ்ட்ராக்ட் செய்யவும் அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு மாற்றாக இலவச PeaZip ஆப்பை பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் எக்ஸ்ட்ராக்ட் மட்டுமின்றி கம்ப்ரெஸ் செய்யவும் முடியும். அதுவும் பல ஃபார்மட்களில் செய்யமுடியும். பாஸ்வர்ட் கொண்டு கம்ப்ரெஸ் செய்வதென 'Compression' மற்றும் 'Extraction' தொடர்பான அனைத்துக்கும் இந்த ஒரு ஆப்பே போதுமென்பது சிறப்பு.
Convertor bot

பெயருக்கு ஏற்றது போலவே எந்த ஒரு டாகுமென்ட்டையும் வேண்டிய ஃபார்மட்டுக்கு மாற்றிகொடுக்கும் இந்த convertor bot. அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது. இதைப்போன்ற ஆப்கள் பெரும்பாலும் இணையத்திலேயே இருப்பதால் அங்கு உங்கள் டாகுமென்ட்டுகளை பதிவேற்றுவது எந்த அளவு பாதுகாப்பானது என்பது நமக்குத் தெரியாது. எனவே இதைப்போன்ற ஆஃப்லைன் ஆப்பை இதற்குப் பயன்படுத்துவது நல்லது.
Wiztree

நீங்கள் ஒரு லேப்டாப் பயன்பாட்டாளர் என்று வைத்துக்கொள்வோம். முழுவதும் SSD வகை ஸ்டோரேஜ் கொண்ட உங்கள் லேப்டாப்பில் 128 GB மட்டும்தான் ஸ்டோர் செய்யமுடியும். இதனால் அடிக்கடி உங்கள் லேப்டாப்பில் இடமில்லாமல் போகும். எது அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறதென தெரியாமலேயே பார்க்கும் ஃபைல்களை எல்லாம் டெலீட் செய்வோம். இப்படியான சூழலில் எது அதிக இடத்தைப் பிடிக்கிறது எனக் கண்டறிய மிகவும் உதவிகரமாக இருக்கும் Wiztree. இது ஃபைல்களின் சைஸை கொண்டு சார்ட் ஒன்றை ரெடி செய்யும். இதன்மூலம் அதிக இடம் பிடிக்கும் ஃபைல்களை எளிதாக டெலீட் செய்யமுடியும்.

நன்றி நட்புகளே....
மாணவர் நலம் கருதி...