Friday, June 02, 2017

குழந்தைகளுக்கான ஆத்திச்சூடி...

🙏 குழந்தைகளுக்காக பண்பாட்டு ஆத்திச்சூடி:
அன்புடன் பழகு
ஆர்வமுடன் செயல்படு
இனிமையாக பேசு
ஈன்றோரை வணங்கு
உண்மை உரைத்திடு
ஊக்கம் பெற்றிரு
எளிமையாக வாழ்
ஏற்றம் கொண்டிரு
ஐயங்கள் போக்கிடு
ஒற்றுமை காத்திடு
ஓதல் செய்திடு
ஔவை நூல்படி
எஃகுபோல் நில்
கனிவோடு நட
அங்கசேட்டை தவிர்
சமத்துவம் காண்
ஞயமாக சொல்
கடமையை செய்
கணக்கு அறிந்திடு
தமிழை போற்று
நன்றி நினை
பகிர்ந்து உண்
மகிழ்ச்சி கொள்
வயலில் நட
மரங்கள் வளர்
லட்சியம் வெல்
வணக்கம் கூறு
அழகாக எழுது
அளந்து அறி
திறன் பெற்றிடு
மனதை அடக்கு
கருணை காட்டு
காய்கறி உண்
கிழமை போற்று
கீதம் பாடு
குழப்பம் தவிர்
கூச்சம் போக்கு
கெடுதி மற
கேள்வி கேள்
கைகளை கழுவு
கொடுத்து மகிழ்
கோஷம் போடாதே
சஞ்சலம் போக்கு
சாந்தமாக இரு
சிந்தனை செய்
சீராய் நட
சுத்தம் காக்க
சூட்சுமம் கொள்
செய்து பார்
சேமித்து வாழ்
சைக்கிள் ஓட்டு
சொல்லி எழுது
சோதித்து அறி
ஞானம் பெருக்கு
தந்தையை வணங்கு
தாயை போற்று
திறமையாக வாழ்
தீர்வு காண்
துக்கம் மற
தூய்மை செய்
தெய்வம் தொழு
தேசம் எண்ணு
தைரியம் பழகு
தொன்மை நேசி
தோழமை கொள்
நல்லதை செய்
நாடு போற்று
நிமிர்ந்து நில்
நீச்சல் பழகு
நுட்பம் அறி
நூல்கள் வாசி
நெஞ்சில் நினை
நேர்த்தியாக செய்
நையாண்டி செய்யாதே
நொறுக்கி தின்
நோய்களை அகற்று
பணிந்து நட
பார்த்து செல்
பிழையின்றி படி
பீடுடன் வாழ்
புதிதாக யோசி
பூர்த்தி செய்
பெரியோர்களை மதி
பேதம் நீக்கு
பைய பேசு
பொறுமை கொள்
போதனை அறி
மகிழ்ந்து ஆடு
மாற்றம் உருவாக்கு
மிதமாக உண்
மீள்பார்வை செய்
முயற்சி காண்
மூத்தோர் வணங்கு
மெய்யாக உழை
மேன்மை அடை
மையம் கொள்
மொழிகள் பேசு
மோதல் தவிர்
மௌனம் பழகு
யந்திரம் அறி
யாத்திரை செல்
யுக்திகள் கொள்
யூகம் செய்
யோகா பயில்
வரவேற்பு செய்
வாய்மை பேசு
விஞ்ஞானம் அறி
வீரம் கொள்
வெற்றி காண்
வேகம் தவிர்
வைகறை எழு.
🙏👍💐

நன்றி....
&&&&&&&&&&
இரா.தேன்மொழி
தலைமை ஆசிரியர்
ஊ.தொ.பள்ளி
அனக்காவூர் காலனி
தி.மலை.மாவட்டம்.

No comments: