அரசுப்பள்ளி ஆசிரியரின் அருமை....
கண்டிக்கும் அன்னையாக இருப்பேன். ஆனால் உன் கண்கலங்கினால் அதை துடைக்கும் உன் கரமாக இருப்பேன்.
தவறு செய்யும் போது அதை தண்டிக்கும் தந்தையாக இருப்பேன்.
தூக்கத்திலும் உன்னை தண்டித்துவிட்டோமே என்று கலங்கும் மனதுடனே விழித்திருப்பேன்.
கற்றுக்கொள்ளவில்லையே என்று கத்திடுவேன்.
கஷ்டபடுத்திவிட்டேனா என்று உன்னை அழைத்து கொஞ்சிடுவேன்.
வீட்டுப்பாடம் செய்யவில்லையா எனில் எரிந்துவிழுவேன்.
குழந்தைக்கு வீட்டில் என்ன குறையோ என எண்ணிப்பார்ப்பேன்.
அதிகாரிகள் வரும்போது உன்னை மறைக்க பார்ப்பேன்.
நான் மறைத்தாலும் மறைக்க முடியா சூரியனாய் நீ எழும் போது எனக்குள் நகைப்பேன்.
அளவுகோலால் உனை அடிப்பேந். அந்த வலியால் நீ அழதாலும் அடுத்த நொடி எனை நோக்கி அன்போடு வரும் போது உன் வலியை நான் சுமப்பேன்.
குழுவில் அமராமல் உன் குசும்பை காட்டும்போது என்னை அறியாமல் என் வேதனையை மறந்து சிரிப்பேன்.
நாளைய வீட்டுப்பாடத்தை தரும்போது நன்றாக அதை குறித்துக்கொண்டு மறுநாள் நீ குறித்த குறிப்பேடு கூட இல்லாமல் வந்தாலும் அதற்கு நீ சொல்லும் காரணத்தை இரசிக்கும் இரசிகனாக இருப்பேன்.
என் வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு நீ சென்ற பிறகு என்னை கடக்கும் போதெல்லாம் என்னை பார்க்க மாட்டாயா என்று தவிக்கும் அப்பாவி ஆசிரியராக நான் இருப்பேன்....
அணைத்தாலும் அடித்தாலும் என்னை ஹீரோவாக பார்க்கும் என் குழந்தையாக நீ இருப்பாய்.
இதுதான் நம் அரசு பள்ளி.
1 comment:
நல்ல பகிர்வு.
Post a Comment