கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை
விட இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. கொலுத்தும் வெயிலால் மாலையில் வீடு
திரும்பும் குழந்தைகள் சோர்வாக காணப்படுவார்கள். தேர்வு நேரத்தில் இந்த புற
காரணிகள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். முடிந்தவரை அவர்களை
வீட்டில் குளுமையாக வைத்துக் கொள்ளப் பார்ப்போம். இதோ சில குறிப்புகள்…
- நாம் எல்லோரும் செய்யும் முதல் தவறு. தாகம் என்று அடிக்கடி ஃப்ரிட்ஜில் வைத்த நீரை எடுத்து நீங்களும் குடிக்கக்கூடாது, குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது, உடல் சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது.
- தாகத்தை தீர்க்க நன்னாரி வேர் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். இதைக் குடிப்பதால் உடல் வெப்பம், தாகம் சட்டு தணியும்.
- சீரகம் ஊற வைத்த தண்ணீரும் நல்ல தேர்வுதான். அதில துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதிய நீரைப் பயன்படுத்துவது நல்லது.
- வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.
- வியர்வை அதிகமாக வெளியேறும் பிரச்னை உள்ளவர்கள் ஒரு வாளி தண்ணீரில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து குளித்தால், வியர்வை நாற்றத்தைக் குறைக்கலாம்.
- குழந்தைகளுக்கு செயற்கையான குளிர்பானங்களை வாங்கிக் குடிக்காமல் இளநீர், நீர்மோர் என்றூ குடிக்க கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் கீரை அடிக்கடி செய்து கொடுக்கலாம். கேரட்டை தோல் சீவி கழுவிக் கொள்ளுங்கள். கால் கிலோ கேரட்டுக்கு மூன்று பெரிய சில்லு தேங்காய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஜூஸரில் பிழிந்து கொள்ளுங்கள். பிழிந்த ஜூஸுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்கள்.
No comments:
Post a Comment