Wednesday, March 26, 2014

சல்லி வேர்

எழுதியது ஈரோடு கதிர் 




அந்தச் செடியை 
நான் வைக்கவில்லை
ஒரு நாளும்
நீரூற்றியதுமில்லை
எந்தவகையிலும்
எனக்கு உறவுமில்லை
உயர வளரத் துடித்து
இடைவிடாது காற்றில்
அலையும் கொடியை
அருகாமைப் பந்தலில் 
ஏற்றிவிட்டிருக்கிறேன்
படர்ந்து பரவலாம்
வானத்தை நோக்கி
கையும் அசைக்கலாம்
சல்லி வேரொன்றின்
நுனியை மட்டும் 
என் ரத்தநாளத்தில்
பிணைத்தபடி!

No comments: