Sunday, December 15, 2024

வாழ்க்கையின் மந்திர சாவி...

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1. போனது போய்விட்டது ஆனது ஆகிவிட்டது, இனி என்ன நடக்க வேண்டும்? அதைப் மட்டும் பேசு.

2. நல்ல வேளை இதோடு முடிந்ததென திருப்திப்படு.

3. உடைந்தால் என்ன? வேற வாங்கி விடலாம்.

4. பேரூந்து  போய்விட்டால் என்ன? அடுத்த பேரூந்து வரும்.

5. பணம் தானே போனது. கை கால் இருக்கு. மனதில் தெம்பு இருக்கு, சம்பாதித்து விடலாம்.

6. செல்கிறவர்கள் ஆயிரம் சொல்வார்கள்  எல்லாமே சரி என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

7. அவன் அப்படித்தான் இருப்பான், அப்படித்தான் பேசுவான், அதையெல்லாம் கண்டுகொள்ளலாமா? ஒதுங்கி விடு அப்போதுதான் உனக்கு நிம்மதி.

8. இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு   போய் கவலைப்படுவது.

9. கஷ்டம் தான்,  ஆனால் முடியும்.

10. நஷ்டம் தான், ஆனால் மீண்டு வந்துவிடலாம்.

11. இதில் விட்டதை அதில் எடுத்து விட மாட்டேனா?

12. விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?

13. விழுந்தது விழுந்தது தான். எழுந்திருக்க வழியை தேடு.

14. உட்கார்ந்தே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு, நடக்க வேண்டியதைப் பார்.

15. இவன் இல்லையென்றால் என்ன வேற ஆளே இல்லையா?

16. இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லையா?

17. இப்போதும் முடியவில்லையா? சரி. இன்னொரு முறை முயற்சி செய்.

18. இது மிகவும் கஷ்டம், கொஞ்சம் யோசித்தால் வழி கிடைக்கும்.

19. முடியுமா? என்று நினைக்காதே. முடியும் என்று நினை.

20. கிடைக்கவில்லையா? விடு, காத்திரு இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21. அவன் கதை நமக்கெதுக்கு. நம் கதையைப் பார்.

22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிந்து  போன கதை.

24. சும்மா யோசித்துக்  கொண்டே இருக்காதே. குழப்பம் மட்டுமே  மிஞ்சும், வேகமாக வேலையை ஆரம்பி.

25. ஆஹா இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யாரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

26. உலகத்தில்  யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கிறான்.

27. ஊரில் ஆயிரம் பிரச்சினை. என் பிரச்சினையை நான் தீர்த்தால் போதாதா?

28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது அதன் வழியில். என் வேலை வேற வழியில்.

29. எப்போதுமே ஜெயிக்க முடியுமா? அப் அப்போது, தோற்றால் என்ன பெரிய தவறா?

30. அவனை ஜெயித்தால் தான் வெற்றியா? நான் தான் தினம் வளர்கிறேன, அதுவே வெற்றி இல்லையா?

31. அடடே, இதுவரை நன்றாக  தூங்கி விட்டேன் பரவாயில்ல. இனிமேல் விழித்திருந்தால் போதும்.

32. நான்கு காசு பார்க்கும்  நேரம். கண்ட  பேசி காலத்தை கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

வீழ்வது கேவலமில்லை, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள். வெற்றி நமதே.

 அரசு நாயகன்
நன்றி
பகிர்வு பதிவு

Saturday, November 30, 2024

பேப்பர் பாய்..

தினமும் ஒரு இளைஞன், அதிகாலை வேளையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும். பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

திடீரென ஒரு நாள் அந்த பெட்டியைக் காணவில்லை, காலிங் பெல்லை அழுத்தி பார்த்த போது ஒரு வயோதிகர். எண்பது வயதிருக்கும். மெதுவாக

பெரியவர் வந்து கதவை திறந்தார்

இளைஞனும் அவரிடம், "வாசலில் இருந்த பாக்ஸ் எங்கே ஐயா " என்று கேட்டான் .. பெரியவரோ, "தம்பி நான் தான் அந்த பெட்டியை நேற்று எடுத்து விட்டேன். நீ தினமும் என்னை அழைத்து பேப்பரை என் கையிலேயே கொடுத்து விடு" என்றார்.

இளைஞனோ ! "ஐயா அது உங்களுக்கும் நேரம் எடுத்து கொள்ளும், எனக்கும் நேரம் அதிகம் செலவாகும், காலையிலே பல இடங்களுக்கு சென்று பேப்பர் போடுவதால் அதில் எனக்கு நேரம் கூடுதலாக செலவாகும், ஆகவே நீங்கள் மறுபடியும் அந்த பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்தால்

நன்றாக இருக்கும்" என்றான்.

பெரியவரோ " தம்பி, பரவாயில்லை... நீ என்னை அழைத்து கையில் பேப்பர் கொடுத்து விட்டு போ வேண்டுமென்றால் நான் கூடுதலாக 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் அதிகம் தருகின்றேன்" என்றார்.

இளைஞனுக்குஒன்றும் புரியவில்லை !

அவரிடமே காரணத்தைக் கேட்டான்.

அதற்கு பெரியவர், "தம்பி சமீபத்தில் என்னுடைய மனைவி காலமாகி விட்டாள்.

நான் தனியாவே இருக்கின்றேன். எனது பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். என் மனைவி நெடு நாட்களாக மரணபடுக்கையில் நோயாளியாகவே இருந்து இறந்து போனாள்.

நான் பெற்று வளர்த்த பிள்ளைகளெல்லாம் அவள் நோயாக இருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். என் மனைவியின் மரணத்திற்கு கூட யாரும் வரவில்லை.

நான் கஷ்டப் பட்டு வளர்த்த பிள்ளைகளுக்கும் நான் பாரமாகி விட்டேன்.

நீயாவது தினமும் வந்து என்னை அழைத்து பேப்பர் தந்தால் நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் புரியும் .

யாரெல்லாம் எனது நெருங்கிய சொந்த உறவுகள் என நினைத்தேனோ அவர்கள் எல்லாருமே துக்கம் விசாரித்ததோடு கடமைக்கு என வந்து போனார்கள்,

ஆனால் யாரெல்லாம் வரவேக்கூடாது என நினைத்தேனோ அந்த அக்கம் பக்கத்தினர் தான் என் மனைவியின் இறுதி சடங்கில் இறுதி அடக்கம் வரையில் எந்த பலனும் எதிர்பாராமல் இருந்து உதவினர், இப்போது நானும் வயோதிகன் என்பதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோடு பாசத்தோடு ஸ்நேகம் வைத்து கொள்வதில்லை. காரணம், பணம் அந்தஸ்து உயர்ந்த நிலையில், நான் இருந்தபோது வலிய வந்து அன்பாக உறவு கொண்டாடிய அந்த நல்ல உள்ளங்களை மதிக்கத் தெரியாமல் தடுத்த என்னால் எந்த விதமான நன்மையும் வராது என்றும் தான் அவர்களும் என்னை தொடர்பு கொள்வதில்லை ...

ஒரு வேளை நீ பேப்பர் போட தினமும் என்னை அழைக்கும்போது, நான் வரவில்லை என்றால் நான் அன்று இறந்து விட்டேன் என தீர்மானித்து விடு...! உடனே அக்கம் பக்கம் , போலீஸை அழைத்து சொல்லி விடு...!

அப்புறம் தம்பி என்னுடைய பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பரும் தருகிறேன், ஒரு வேளை நான் இறக்கும் போது தயவு செய்து என் பிள்ளைகளுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் என் மரண செய்தியை சொல்லி விடு" என்றார்.

இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞனுக்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, சொல்லிக் கொண்டிருந்த பெரியவருக்கும் குரல் தழுதழுத்தது.

இன்றைய நவீன உலகில் தனித்தீவாக உள்ள வீடுகளிலும் ஒவ்வொரு அப்பார்மெண்டிலும்

இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

சில முதியோர்கள் வாட்சப்பில்

தினமும் குட்மார்னிங் என்றும் வணக்கம் என்றும் அனுப்பும் போதெல்லாம், இந்த பெரிசுக்கு வேற வேலையில்லை, இது ஒரு தொல்லை தான் என்று நினைத்து பலரை நானே பிளாக் செய்துள்ளேன்.

பச்சை இலைகள் ஒன்றை மறந்து விட வேண்டாம் , நாமும் பழுத்த இலைகள் ஆகி மரத்திலிருந்து ஒரு நாள் உதிர்ந்து விடுவோம் என்று ...!!!

-படித்ததில் பிடித்தது.

நன்றி பகிர்வு பதிவு...

Thursday, November 21, 2024

வாசிக்க திணறும் உலகம்....

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு – த. பெருமாள்ராஜ்

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு

உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில்,  உள்ள பல குழந்தைகள், வாசிக்க சிரமப்படுகிறார்கள் என ராயல் ஹாலோவே (Royal Holloway), லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில், 48 வளரும் நாடுகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின்   வாசிப்புத் திறன் ஆராயப்பட்டது. 96 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெரும்பாலான குழந்தைகள் அடிப்படை வாசிப்புத் திறன்களைக் கூட கற்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. எழுத்துக்களை அடையாளம் காண்பது, சொற்களை உச்சரிப்பது போன்ற எளிய பணிகளில் கூட அவர்கள் சிரமப்பட்டனர்.

கல்வி முறைகளில் குறைபாடு
இந்தப் பிரச்சினைக்குக் காரணம், பல பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளில் கல்வியறிவை வளர்ப்பதற்கான சிறந்த வழி, ஆரம்பக் கல்வியின் போது உயர்தரமான, முறையான, ஒலிப்பு (Phonics Method) முறை கற்பித்தலைக் கடைபிடிப்பதே என பல்வேறு ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், பல வளரும் நாடுகளில் இந்த முறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

தற்போதைய நிலை தொடர்ந்தால், உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை அடைய முடியாது எனக் கூறும் இந்த ஆய்வு ‘நேச்சர் ஹியூமன் பிஹேவியர்’ என்ற இதழில் 08, நவம்பர், 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிப்பு முறை – திறவுகோல்
வளரும் நாடுகளில், வாசிப்புத் திறனை மேம்படுத்த, ஆதாரங்களின் அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், குறிப்பாக ஒலிப்பு முறை (Phonics Method), விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

ஒலிப்பு முறை (Phonics Method) என்பது, எழுத்துக்களுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் இடையிலான தொடர்பை குழந்தைகளுக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு முறையாகும்.

உதாரணமாக இம்முறையில், “boy” என்ற வார்த்தையில் “oy” என்ற எழுத்துக்களின் கூட்டணியும், “play” என்ற வார்த்தையில் “ay” என்ற எழுத்துக்களின் கூட்டணியும் எவ்வாறு ஒலிக்கின்றன என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இந்த ஒலிப்பு முறைகளை அறிந்துகொண்டால், குழந்தைகள் அறிமுகமில்லாத சொற்களையும் எளிதாக வாசிக்க முடியும். உதாரணமாக, “toy” அல்லது “stay” போன்ற சொற்களை வாசிக்கும் போது, முன்னர் கற்றுக்கொண்ட “oy” மற்றும் “ay” ஒலிப்பு முறைகளைப் பயன்படுத்தி வாசிக்க முடியும்.
குழந்தைகள் சொற்களை எளிதாக உச்சரிக்கவும், வாசிக்கவும், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம், குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்படுவதுடன், மொழி மீதான அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும்.

உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆய்வில் எழுத்துக்களை அடையாளம் காணல், சிறிய வார்த்தைகளின் சரியாக உச்சரித்தல் போன்றவற்றின் அடிப்படையில் குழந்தைகள் மதிப்பிடப்பட்டனர்.

அடிப்படை வாசிப்புத் திறன்கள் குறைந்தபட்ச அளவுகோல்களுக்குக் கீழே உள்ளன என்றும், வாசிப்பதைக் கற்றுக்கொள்வதன் முதல் மூன்று ஆண்டுகளில் செயல்திறன் இடைவெளி அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

விரைவான நடவடிக்கை அவசியம்
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் உள்ள உலகளாவிய கல்வியறிவு இலக்குகளை, சிறப்புத் தலையீடுகள் இல்லாமல் அடைய முடியாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் சுமார் 15 ஆண்டுகளாக ஒலிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அடிப்படை வாசிப்புத் திறன்களில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இதை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகளாவிய கல்வியறிவை மேம்படுத்துவது பலவிதங்களில் மிகவும் முக்கியம். வாசிப்புத் திறன் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாகவும், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பாகவும் கருதப்படுகிறது.

கல்வியில் முதலீடு வீணாவதா?
குழந்தைகள் வாசிக்கக் கற்றுக்கொள்ளாததால், கல்வியில் செய்யப்படும் உலகளாவிய, பரந்த முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உளவியல் பேராசிரியர் கேத்தி ராஸ்டில், “இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொதுக் கொள்கையின் ஒரு பெரிய தோல்வியை வெளிப்படுத்துகின்றன. உலகளாவிய கல்வி முறைகளின் மிக முக்கியமான பணி குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுப்பதாகும். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் தொடக்கத்திலேயே பின்தங்கி விடுகின்றனர். ஒலிப்பு முறை கற்பித்தல், இந்த மாணவர்களை வெற்றிகரமான வாசிப்புப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும்” என்று கூறினார்.

உலக வங்கியின் மைக்கேல் க்ராஃபோர்ட், “வெற்றிகரமாக வாசிக்க வைப்பது எப்படி என்பதைக் காட்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகள் நம்மிடம் உள்ளன. கல்வித் துறையில் முடிவெடுப்பவர்கள் இந்த ஆதாரங்களை விரைவில் செயல்வடிவமாக்க வேண்டும்” என்று கூறினார்.

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு ஆய்வுக்கட்டுரை இணைப்பு
https://dx.doi.org/10.1038/s41562-024-02028-x

கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்

பகிர்வு பதிவு...

நன்றி



Monday, November 11, 2024

இன்றைய இளைஞர்கள்..சிந்திக்க

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை

புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று

நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை

தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்.
படித்ததில் பிடித்தது..

பகிர்வு பதிவு

நன்றி...!

Monday, September 23, 2024

பெற்றோர்கள் குழந்தைகளின் சேவகரா...?

பெற்றோர்கள், பெற்றோர்களாகவே இருங்கள், ஒரு போதும்  நண்பராகாதீர்கள்...!

பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.

எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள்.

நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.

அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.

சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன்.

அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.

அவள் சை என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.

நான் சில நிமிடம் கழித்து மீண்டும் செல்லம் என்று அழைத்த போது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு... 

அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும் ?

எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்?

நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.

எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது என்று கூறினாள்.

நான் ஸாரிம்மா என்று சொல்லி விட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்க்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

என் இதயம் அழுதது... 

நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்.

இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள் ?

நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்தது தவறோ ?

அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ ?

நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ ?

அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள்... 

ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே !!! 

பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள் ?

இன்று பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பதைப் பற்றிக் கவலைப் படுகிறது இந்த உலகம்.

ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா ???

அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்... 

இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள் ?

இதற்குக் காரணம் என்ன ?

இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.

அவள் நான் என்ன உனக்கு வேலைக்காரியா ?

நீயே போய் எடுத்துக் கொள் என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே இல்லை மா நான் தான் உனக்கு வாழ்நாள் முழுவதும் சேவகன் என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது.

இதற்குக் காரணம் என்ன ?

நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும்,  புகழ் பெற்றவர்களாகவும் இருந்தாலும்... 

அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான் !!! 

அவர்கள் என்றுமே, அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.

பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான்.

நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள்... 

அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம்.

ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே !!! 

அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கும், அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கு ஒரு போதும் அஞ்சாதீர்கள்...!!!

பகிர்வு :- INFOSYS - திரு.நாராயண மூர்த்தி.

நன்றி

பகிர்வு பதிவு

Sunday, September 22, 2024

கத்தி மேல் நடக்கும் ஆசிரியர்கள்...

இன்றைய சூழலில் ஆசிரியர் பணி என்பது கத்தி மேல் நடப்பது போலாகிவிட்டது. ஆகிவிட்டது என்பதை விட ஆக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

வீட்டில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான சுதந்திரமும் செல்லமும் தான் வெளி இடங்களிலும் பள்ளியிலும் தொடர்கிறது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு நல்லதை விட தீயதே எளிதில் கிடைக்கின்றது.

உதாரணமாக சமூக வலைதளங்களில் பாடம் சார்ந்த வீடியோக்களை விட ரீல்ஸ் என்ற பெயரில் சில தருதலைகள் செய்யும் மோசமான செயல்தான் குழந்தைகளை எளிதில் சென்றடைகிறது. அப்படி அதை பார்க்கும் மாணவர்கள் தாமும் அதைப்போல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இந்த பருவத்தின் இயல்பு தான். 

அதை நல்வழியில் மடைமாற்றும் இடம் தான் பள்ளிக்கூடங்கள். எது சரி எது தவறு என்று மாணவர்களுக்கு புரியவைப்பதே இன்றைய சூழலில் ஆசிரியர்களின் முதன்மை பணியாக உள்ளது. ஆனால் வகுப்பறை சூழலோ ஆன்லைன் பதிவேடுகளுடனே கடந்து போகவைக்கின்றது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் மாணவர்களால் நாளை எந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள முடியும். சிறு தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆசிரியர்களும் கேட்கமுடியவில்லை, ஏன் பெற்றோர்களாலே முடியவில்லை. அப்படி எனில் அவர்களுக்கு யார்தான் எடுத்துக்கூறுவது.

தற்போது அரசுப்பள்ளிகள் அனைத்தும் அளப்பரிய அளவில் உயர்ந்த இடத்தை நோக்கிச்சென்றுகொண்டு இருக்கின்றன. வண்ணம் பார்த்து ஆண்டுகள் பல ஆன பள்ளிகள் அனைத்தும் இன்று வண்ணமயமாக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன.

செல்போன் சிக்னலே வராத ஊரில் உள்ள பள்ளிகளில் கூட 24-மணி நேர இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. வாசிப்பை ஊக்குவிக்க அட்டகாசமான நூலகங்கள் உள்ளன. வறுமையால் கல்வி தடைபடாமல் இருக்க அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியையும் பெருமையையும். இப்படியான சூழலில் தான் இப்போது தொடர்ச்சியாக இதுபோன்று அரசுப்பள்ளிகளை பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பற்றியும் எதிர்மறையான செய்திகள் வந்துகொண்டு மக்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றன.

ஆசிரியர் மாணவர் உறவு எங்கு வலுவாக சிறப்பாக உள்ளதோ அங்கு கற்றல் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஆனால் இன்று அந்த உறவோ ஏதோ எதிரியை பார்ப்பது போல் ஆக்கிவிட்டது இன்றைய காலச்சூழல். ஒரு பள்ளியில் தான் எத்தனை பிரச்சனைகள், சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, ஏற்றத்தாழ்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டும் மாற்ற முடியும் என்று எண்ணினால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் எதுவும் இல்லை.

ஆசிரியர்களும் கற்பித்தல் என்பது வகுப்பறையோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறோம். அது தவறு. கற்பித்தல் என்பது வகுப்பறையை தாண்டி அந்த மாணவனை பற்றி முழுமையாக கற்றுக்கொள்வதில் தொடங்குகின்றது. எத்தனை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் பெற்றோர்களுடன் உரையாடுகிறோம். மிக மிக குறைவே. 

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இந்த மூன்றும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் ஆசிரியர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. 

இதுபோல பிரச்சனைகளை நாம் அனைவரும் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அரசுப்பள்ளிகளையே நம்பி இருக்கும் பெற்றோர்களின் மனநிலையில் இருந்தும், எப்படியாவது தன்னிடம் படிக்கும் மாணவன் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட மாட்டானா என நினைக்கும் ஆசிரியர்கள் இடத்தில் இருந்தும் பார்த்தால் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

தயவு செய்து அரசும் சமூகமும் மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த செயல்களையும் ஆசிரியகள் மேல்மட்டும் சுமத்தி தற்காலிக தீர்வை தருவதை விட்டு இதற்கு நிரத்தர முற்றுப்புள்ளியை வைத்து மீண்டும் இதுபோல் எங்கும் நடக்காதவாறு மிகச்சிறந்த செயல்திட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

ஞா.செல்வகுமார் இ.நி.ஆசிரியர் 
அரசுப்பள்ளி மாணவன். அரசுப்பள்ளி ஆசிரியர்.
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.

நன்றி
பகிர்வு பதிவு

Wednesday, September 04, 2024

அன்புள்ள...அப்பா..

அப்பா...........

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன்

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

நண்பன்

காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

எப்பொழுதும் மாறாதவர்கள்

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

உன்னத உறவு

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது.           *ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்...

நன்றி
பகிர்வு பதிவு..

Tuesday, September 03, 2024

மனிதரில் மாணிக்கம்..

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை 
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்..
உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 
வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 
ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 

வணிகரும்.. ஆஹா.. 
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் 
கழட்டி வைத்து விட்டு தியானம் 
செய்து கொண்டிருக்க.. 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி 
மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 
கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் 
இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 

அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 

அப்படி நினைத்தவர் தான்
துறவி 'மகாவீரர்'..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே...
விட்டுவிடுவோம்...

நன்றி 
பகிர்வு பதிவு..

Friday, August 30, 2024

மனைவி என்றும் மந்திர சாவி

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி...
 
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.. அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக, மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது...

கொல்லப் பட்டறை தொழில் ஒரு சமயம் நலிவுற்றது. அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லன் சோகமே உருவாகி விட்டான். அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "எதுக்கு கலங்குறீங்க இந்த தொழில் இல்லைன்னா என்ன பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே.. அதை வெச்சு ராஜாவாட்டம் வாழலாமே" என்றாள்.

புது நம்பிக்கை, புது உற்சாகம்  கொல்லன் உள்ளத்தில்.  கொல்லன் இப்போது விறகுவெட்டி ஆனான். அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல்.. கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும் சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்...
ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள் "மாமோய் இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே".

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்... "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில், நம்ம வீட்டில் தினந்தினம்
நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும் இப்போ இப்படி வயிற்றைக்கட்டி வாழுறோமே அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு"..

"கண்ணு கலங்காதீங்க என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம் காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம் கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில் விறகு வெட்டியானவன் இப்போது விறகுக்கடை முதலாளியானான். வருமானம் பெருகியது. அப்புறமென்ன வீட்டில் கறிசோறு தான் ஆனால்...,

வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன? வந்தது கெட்ட நேரம் விறகு கடையில் தீ விபத்து.. அத்தனை மூலதனமும் கரிக் கட்டையாகி விட்டது தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து
எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும்" என்றார்கள்....

மனைவி வந்தாள் கண்ணீரை துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள். கண்ணீர் மல்க சொன்னாள் "இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு கரியாத்தானே ஆகியிருக்கு நாளைலயிருந்து கரி வியாபாரம் பண்ணுவோம்"..

தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.
'ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் அன்பு செலுத்தவும்' அன்பான மனைவி அமைந்தால் முடங்கி கிடக்கும் முடவனும் கூட  எவரஸ்ட் சிகரம் தொடுவான்..

நன்றி
பகிர்வு பதிவு...

Saturday, August 24, 2024

உன்னை இழந்து விடாதே..

உன்னை இழந்து விடாதே

ஒரு ஆசிரியர் 15 ஆண்டுகள் கழித்து தனது மாணவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார். அனைவரும் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் மிகவும் பிரபலமானவர்கள் அரசியல் போலீஸ் தொழிலதிபர் பேப்பர் கடை வைத்திருப்பவர்  துணிக்கடை வைத்திருப்பவர் அரசாங்க அதிகாரி அமைச்சர் என்று பல துறைகளில் பெரிய ஆட்கள்.

 அனைவருமே இது ஒரு அழகான வாய்ப்பாக கருதி ஒன்றாக வந்து சேர்ந்தார்கள் துணி வியாபாரி அமைச்சரிடம் சென்று எப்படிடா இருக்கிறாய் என்றும் பேப்பர் காரன் போலீஸ் அதிகாரியிடம் என்னடா இவ்வளவு குண்டு ஆயிட்ட என்றும் பேசினார்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களுக்கு பேச்சு வரவில்லை அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அதுவரை அந்த ஆசிரியர் அங்கு வரவே இல்லை.

 வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தார் சுட சுட தேநீரோடு சிலவகை கோப்பை எடுத்துக் கொண்டு வந்தார். அனைவரும் ஆசிரியர் வந்ததும் எழுந்து நின்று தேநீர் வாங்க அங்கே இருந்த கோப்பைகளை எடுக்க செய்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான கோப்புகளை தேர்வு செய்தார்கள்.

 ஒருவர் சில்வர் மண் பீங்கான் வெள்ளி கண்ணாடி போன்ற பல வகைகளை தேர்வு செய்தார்கள் ஆசிரியர் அமைதியாக பார்த்தார். எல்லோரும் இப்பொழுது கேட்கப் போகும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்லுங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரும் ஒரே மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று கேட்டார் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது இல்லை சார்.

 பள்ளியில் படிக்கும் போது இருந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் இப்போது ஏதோ ஒன்று தடுக்கிறது அது என்ன என்று எங்களால் கூற முடியவில்லை இதோ என் அருகில் இருப்பவனிடம் நான் பயங்கரமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் இன்று ஏதோ ஒன்று அவனை நெருங்க முடியாமல் தடுக்கிறது என்று கூறினார். இந்தப் பாடத்தை புரிய வைக்கவே தான் நான் உங்களை அழைத்தேன். 

நீங்கள் அனைவரும் வெவ்வேறு துறையில் ஒவ்வொரு பதவியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரும் வாழ வேண்டியது உங்களது வாழ்க்கை தான் ஆனால் நீங்கள் எல்லோரும் உங்கள் துறையை தான் நம்பி மதிப்பதால் மற்றவர்களிடம் நெருங்க முடியவில்லை உங்கள் தகுதி துறை என்பது வேறு

 காபி கோப்பைகள் போல உங்களது பதவிகள் அலங்காரமாக  வேறுவேறு ஆக இருந்தாலும் நமக்கு தேவை அதில் உள்ளே இருக்கும் காபி தான் அதுபோல் நாம் பதவிகளில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த மகிழ்ச்சி நாம் அனைவருக்கும் உள்ளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 உங்கள் பதவிகளை தகுதிகளை இல்லத்தில் நுழையும்போதே கழட்டி வைத்து விடுங்கள் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லத்தில் ஒருவனாகவும் வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நிறைய பெரிய இடங்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை ஆனால் சிறிய  குடிசையில் சந்தோஷத்தோடு சிரிப்பொலிக்கு இருக்கும்.

 அவர்கள் சிரிப்பதற்கு எந்த பதவியும் பணமும் தடுக்கவில்லை வசதியானவர்கள் தங்கள் பதவிகளை நினைத்து தங்கள் திறமைகளை நினைத்து இல்லத்தில் இன்பமாக இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.. நீ வெளியில் பெரிய அதிகாரியாக இருக்கலாம் வீட்டுக்குள் உன் குழந்தைக்கு தந்தையாக உன் மனைவிக்கு கணவனாக உன் அப்பா அம்மாவுக்கு குழந்தையாக மாறி நடந்து பார் உன்னுடைய வாழ்வு இனிக்கும்.

 உன் பதவி அதிகாரத்தை உன் இல்லத்துக்குள் நுழைக்காதே உன் இன்பமான வாழ்க்கை எனும் தேநீர் உனக்கு கிடைக்காமல் போய்விடும்  

எழுத்தாளர் சாந்தி வெற்றிவேல்...

நன்றி
பகிர்வு பதிவு

Sunday, August 18, 2024

வாழ்க்கை தத்துவம்...

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. 

அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.

அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’

இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.

மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.

அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.
அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன். 

அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.

நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!

எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்........

நன்றி...
பகிர்வு பதிவு

Sunday, August 11, 2024

புண்ணிய கணக்கு...!

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...

300-ரூபாய்....
200-ரூபாய்க்கு வருமா? 
சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது....

அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?
ரோட்டுக்கடைதான் சார்... 
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்....  

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது....
ஒரு நடுத்தரவயது அம்மா,
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது.... 

வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
இட்லி, தோசை என சாப்பிட்டோம்.

எவ்ளோம்மா?
60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்...
மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ண... 

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...
இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்
என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கணம் மூச்சு நின்றது.....

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.
உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து  விடுங்கள்...
புண்ணியம் நம்மை தேடி வரும்.
நன்றி..

பகிர்வு பதிவு

Thursday, August 01, 2024

நான்..யார்...?

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்க்கு அவர் சொன்ன விடை -

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நமக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

நன்றி

பகிர்வு பதிவு

Sunday, July 28, 2024

கழுத போன போக்கில்...

முன்பொரு காலத்தில், ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தாராம்

எப்பொழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன

ஒரு நாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது

சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதை யை தன் போக்குவரத்திற்கு உபயோக படுத்திக்கொண்டார்

இது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது

சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்

சில நாட்கள் மேற்கு

சில நாட்கள் வடக்கு

இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்

வழக்கத்துக்கு மாறாகவும் இருந்ததாம்

இதை பார்த்துவந்த பொது மக்கள் சிலர், ஒரு நாள் வணிகரை நிப்பாட்டி

"ஏம்ப்பா,  கொஞ்ச நில்லு, என்னாதுப்பா இது, ஒரு நாள் கிழக்கா போற, ஒரு நாள் மேற்கா, ஒரு நாள் உடனே திரும்புற,  ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல, ஒரு நாள் வேகமா போற, ஒரு நாள் மெதுவா, ஒன்னும் விளங்கலயே! என்னாச்சு?"

"முன்ன மாதிரி இல்லங்க, இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிறது - கட்டாயத்துல இருக்கேன்.

நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்

நான் சொல்ற மாதிரி போக சொன்னேன்

 ஆனா இது கேட்கல "

"அப்ப என்ன பண்ண? "

"அதுக்காக விட்டுட முடியாதுங்களே,
நமக்கு வேலையாகணும் - அதே சமயத்துல கழுதை கூட லாம் மல்லுக்கட்ட முடியாது, ஏன்னா அது கழுதை..
அதுக்கு சொன்னாலும் வெளங்காது

அதனால நான் கொஞ்சம் மாறிகிட்டேன்

அது கிழக்கே போனா, நான் அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்

மேற்கே போனா அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்

அது வேகமா போனாலும் பழகி கிட்டேன்

கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல, நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல, வாழ்க்கை நிம்மதியா போகுது"

அன்பு நண்பர்களே.

இதே போல நம் வாழ்க்கை யும் நிம்மதியாக போக வேண்டுமானால் சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்

வாழ்க்கையில், அலுவலகத்தில் இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாட பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது
அவங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரியவைப்பதும் கஷ்டம்.
.
அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால், நம்ப வேலையும் நடக்கும்..

வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்..!!!

நன்றி
பகிர்வு பதிவு

Monday, May 20, 2024

காலம் மாறும்....காட்சியும்...மாறும்..

*அப்பா* ..!

அப்பா, சுவற்றைப் பிடித்துக் கொண்டு வீட்டின் ஹாலில் நடந்து கொண்டிருந்தார். அவர், வயதானவராகவும் பலவீனமாகவும் இருந்ததால் அவருக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. அப்படி சுவற்றில் கை வைத்து நடக்கும் போது, கையின் அச்சு சுவற்றில் பட்டு அதன் நிறம்  மங்கத் தொடங்கியது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அப்பாவின் கால்களும் பலவீனமாக இருந்ததால் ஒரு நாள், கால்களுக்கு எண்ணெய்  மசாஜ் செய்துவிட்டு அதே கைகளுடன் சுவற்றைப் பிடித்துக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். எண்ணெயுடன் கூடிய கைகளால் சுவற்றைப் பிடித்து நடந்ததில் சுவர் மிகவும் மோசமாக தெரிந்தது.  இதைக் கண்ட என் மனைவி மிகவும் கோபமடைந்து என்னிடம் அதை வெளிப்படுத்தினாள். 
நான் உடனே என் தந்தையின் அறைக்குச் சென்று வழக்கத்திற்கு மாறான தொனியில், “அப்பா உங்களால் சுவற்றைத் தொடாமல் நடக்க முடியாதா?” என்று கேட்டேன்.  நான் பேசிய தொனி அவருக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது.  *இத்தனைக்கும் இது அவர் சுயமாக சம்பாதித்து கட்டிய வீடு* எண்பது வயது முதியவர், குழந்தை போன்ற முகத்துடன் வெட்கித் தலை குனிந்தார். 

அந்த நிமிடமே நான், அவரிடம் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று உணர்ந்தேன்.  ஆனால், அதை அவரிடம் வெளிப்படுத்தவில்லை. பின்னர், அப்பா சுவற்றைப் பிடிக்காமல் நடந்தார்.  ஒரு நாள் அப்படி நடக்கும் போது உடல் சமநிலையை இழந்து கீழே விழுந்து, படுத்த படுக்கையாகிவிட்டார்.  ஒரு சில நாட்களில் அவர் இறந்தும் போனார்.  சுவற்றில் அவருடைய கைகளின் பதிவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் ஒரு வித வலியை உணர்ந்தது. 

நாட்கள் கடந்து விட்டன. ஒரு நாள் என் மனைவி வீட்டிற்கு வர்ணம் பூசப்பட வேண்டும் என்று வற்புறுத்தினாள்.  வர்ணம் பூசுவதற்கு பெயிண்டர்களும் வந்துவிட்டனர்.  என் ஐந்து  வயது மகன், தன் தாத்தாவை மிகவும் நேசித்தவன்.  என் தந்தையின் கைரேகைகளை    அழிக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.  பெயிண்டர் ஒரு யோசனை சொன்னார். “ சார் நான் கைரேகைகளை அழிக்காமல், அதைச் சுற்றி அழகாக வண்ணம் தீட்டி தனித்துவமாக வடிவமைத்துக் காட்டுகிறேன்.. உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.” 
 என் மனைவியும் அதற்கு சம்மதித்தாள். 

அவர் உறுதியளித்தபடி பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் , அப்பாவின் கை முத்திரையை அழிக்காமல் தனித்துவமாக வடிவமைப்புகளை உருவாக்கினார்.  எப்போதெல்லாம் வர்ணம் தீட்ட வேண்டுமோ அப்போதெல்லாம் கைரேகையை சுற்றி, அதே வடிவமைப்பை அழகாக உருவாக்கினோம். 

ஆண்டுகள் ஓடின. என் மகனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.  எனக்கும் எழுபது வயது ஆகிவிட்டது.  நான் இப்போது என் தந்தையின் இடத்தில் இருக்கிறேன்.  நானும் பிறர் உதவி இன்றி நடப்பது மிகவும் கடினம்.  நான், என் தந்தையை எப்படி காயப்படுத்தினேன் என்பதை நினைவில் வைத்து அமைதியாக இருந்தேன். 

ஒரு நாள்.. நான், என் அறையை விட்டு வெளியில் வரும் பொழுது என் உடல் சமநிலையை இழந்து கீழே விழுவது போல உணர்ந்தேன்.  உடனே என் மகன் என்னைப் பின்னால் இருந்து பிடித்துக் கொண்டு அன்புடன் சொன்னான், “ அப்பா.. ஏன் நீங்கள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு அதன் ஆதரவில் நடக்கக்கூடாது? கவனமாக நடந்து செல்லுங்கள் அப்பா..”  

என் மகன் சுவற்றைப் பற்றி கவலைப்படவில்லை.  ஆனால், நான் எனக்கு அருகில் இருந்த சுவற்றில் இருக்கும் என் தந்தையின் கைரேகையைப்  பார்த்தேன்.  அவருடைய முகம் என் முன்னால் வந்தது.  அந்த நொடியே என் மனம் நினைத்தது, நான் அப்பாவிடம் என் மனக்கசப்பைக்  காட்டாமல் நிதானமாக பேசியிருந்தால் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் என்று உணர்ந்தேன்.  என் கண்களில் நீர் வழிந்தது. 

நான் இதைப் பற்றி எண்ணியபடியே நடந்து சென்றதால் தடுமாறினேன்.  கீழே விழ இருந்த என்னை,  என் பேத்தி தன் தோள்களால் தாங்கிப்  பிடித்து சோபாவில் உட்கார வைத்தாள்.  பிறகு, அவள் தன் பையைத்  திறந்து ஒரு ஓவியப் புத்தகத்தை எடுத்து வந்து, “ தாத்தா..  நான் இன்று ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.”  என்று சொன்னாள் .  ஓ அப்படியா..  போட்டிக்காக நீ வரைந்ததைக் காட்டு..  பார்க்கலாம்.  என்றேன். சுவற்றில் இருந்த என் அப்பாவின் கை பதிவை,  ஓவியமாகத்  தீட்டியதைக் காட்டினாள்.  மேலும்.. “எங்கள் ஆசிரியர் இந்த ஓவியத்தைப்  பற்றி விளக்கம் அளிக்கும்படி  சொன்னார்.” 

அதற்கு நான், “ இது ஒரு தனித்துவமான வடிவமைப்பால் சுவற்றில் பதிக்கப்பட்ட என் பெரிய தாத்தாவின் கைரேகை” என்று ஆசிரியரிடம்  சொன்னேன்.  ஆசிரியர் என்னைப் பாராட்டியதோடு, 
சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் வண்ணக் குறிகள், கை அடையாளங்கள், கீறல்கள், கால் தடயங்கள் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை குழந்தைகள் கிறுக்குவார்கள்.  இதைக் கண்ட பெற்றோர்கள் பாராட்டுகிறார்கள். குழந்தைகள் செய்ததைப் பற்றி பேசி பெருமைப்படுகிறார்கள். அதேபோல, வயதானவர்களை நேசிப்பது மற்றும் ஆதரவளிப்பது பற்றியும் ஆசிரியர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.” என்று சொன்னாள் பேத்தி. 

என் மகன் மற்றும் பேத்திக்கு முன்னால் நான் மிகவும் சிறியவனாக  உணர்ந்தேன்.  நான், என் அறைக்குள் வந்து கதவை மெதுவாக மூடிக்கொண்டு, என் இதயம் லேசாகும் வரை அழுதேன்.                                                
                                                          படித்ததில் பிடித்தது..

நன்றி
பகிர்வு பதிவு...

Monday, April 29, 2024

மரம் வளர்ப்போம்....உயிர் பெறுவோம்...!

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் வணக்கம்..!

இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம்,
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.

நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம்.

*மரம் நடுவோம் இயற்கையை காப்போம்......

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்பொழுது தாம் வசிக்கும் பகுதிகளில் மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்!. நான் வசிக்கும் சிதம்பரம் தண்டேஷ்வர நல்லூர், குறுக்கு ரோடு பகுதியில் 100 மரக்கன்றுகள் (பூ பூக்கும்  மரக்கன்றுகள் ) இந்த ஆண்டு நகர் வாசிகளின் ஒத்துழைப்புடன் நட்டோம்,  நன்றாக வளர்ந்துள்ளது. இதுபோல் முயற்ச்சித்தால் ஓர் வனத்தையே நாம் உருவாக்கலாம்.....

இன்னும் சொல்லபோனால்  மரக்கன்றுகளை நட உற்பத்தியாளர்கள், 
வனத் துறையினர், 
பள்ளித் தாளாளர்கள், 
உயர் பதவிகளில் இருப்போர், 
பிரபலங்கள்,  வியாபாரிகள், 
ஆன்மீக தலைவர்கள், 
அனைத்து மதங்களின் குருமார்கள், 
கிராமத் தலைவர்கள், 
ஊர் தலைவர்கள், 
அனைத்துக் கட்சி தலைவர்கள் என இவர்களின் ஆதரவுகளையும் பெற்று பெரிய அளவில் செய்யலாம், பண ஆதரவும் Donation மூலமாகவும் பெற்று இதற்குரிய செலவினங்களை, கன்றுகளை பராமரிக்க பயன்படுத்தலாம்... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,

மரக்கன்றுகள் நடுவதற்க்கு உங்களுக்கான ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும்......, குழுவிற்கு தலைமையேற்ப்பவர் தன்னலமற்ற தேசிய சேவை செய்து,  பணி ஓய்வு பெற்ற பிறகும் தாய் நாட்டிற்காக ஏதேனும் தாம் நல்லதை மக்களுக்காக செய்யவேண்டும் என தியாக உள்ளத்துடன் வாழும் முன்னாள் இராணுவ வீரர்கள் தலைமையை ஏற்ப்பது சிறந்ததாக இருக்கும்,

 குழு அமைத்து செயல்பட முடியவில்லை எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள்
 அவர்கள் வீட்டு வாசலில் தெரு ஓரம், தோட்டத்தில் பழம், பூ, விலை உயர்ந்த மரங்கள் என நடவேண்டும், அப்படி செய்தாலே நாம் வசிக்கும் பகுதி பசுமை வாய்ந்த அழகிய வனமாக மாரும்,  

நண்பர்களே, அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள். 
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள். 

மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது  நட உதவுங்கள்.

மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும். சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மரக்கன்றுகளை தானமாகவும் தருகிறார்கள், சிலர் மரக்கன்றுகளை விலங்குகள் தின்னா வன்னம் கூண்டு தானமாக தருகிறார்கள்,  அதன் விபரங்களை பிறகு தருகிறேன்....

_பொது இடங்களில்_ :-
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம் 

இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் _புங்கன்_ மரத்தை ஆடு மாடுகள் மேயாது. 

_நீர் வழித் தடங்கள்_ அருகில்:-
1. பூவரசு மரம்
2. பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம். 
1. கறுவேப்பிலை
2. லட்சக் கொட்டைக் கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி 
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு 
போன்ற மரங்கள் நடலாம்

*வழிபாட்டுத் தலங்கள்*-
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4. பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்

நாம் இயற்க்கையை காப்பாற்றி பேணி காக்க வேண்டுமென்றால், மழை பெய்து வளம் பெருக, வெய்யில் கொடூறத்திலிருந்த நம்மை, உயிரணங்களை காப்பாற்ற வேண்டுமென்றால் மரங்கள் நிறைந்த வனமாக மாற்றுவோம்,  

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். 
மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். 

வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!

நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!!

நன்றி!
பகிர்வு

Friday, April 12, 2024

இதற்குத்தானா இந்த ஓட்டம்...!

*தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்*
அண்ணன்,தம்பி,

அக்கா,தங்கை,

சின்ன அண்ணன்,

பெரிய அண்ணன்,

சின்ன அக்கா,

பெரிய அக்கா,

சித்தப்பா, பெரியப்பா,

அத்தை, மாமா,

மச்சான்,மச்சினி,

அண்ணி, கொழுந்தனார்,

நாத்தனார், தாய்மாமன்,

சித்தப்பா பையன்,

சித்தப்பா பொண்ணு,

பெரியப்பா பையன்,

பெரியப்பா பொண்ணு,

அத்தை பையன்,

அத்தை பொண்ணு,

மாமன் பொண்ணு,

மாமன் பையன்...

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !

அகராதியில் இருந்தே கூட

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்.

காரணம் என்ன !

#ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் !

அப்படி இருக்கும் போது

இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும்

சீர் வரிசை செய்யவோ,

பந்தல் போடவோ,

முதல் புடவை எடுத்துத் தரவோ

எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை !

திருமணத்தின் போது

அரசாணைக்கால் நட

எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை !

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட

எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை,

குழந்தைக்கு மொட்டை போட

யார் மடியில் உட்கார வைப்பார்கள் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு

எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

இனி யார் போவார் ?

ஒவ்வொரு பெண்ணும்,

சொந்தபந்தம் ஏதுமின்றி

ஆறுதலுக்கு ஆள் இன்றி

தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்

தன் கஷ்டநஷ்டங்களில்

பங்கு கொள்ள அண்ணன், தம்பி

யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர

எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்

வெளியூருக்கோ,

இல்லை

தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள்

எல்லாம் வயதான காலத்தில்,

ஏன் என்று கேட்க நாதி அற்று

முதியோர் இல்லத்திலோ,

இல்லை அந்த ஒரு குழந்தைக்காக

கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் !

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு

ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு

எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்

இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல்

ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால்

ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்

எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே

வயதான காலத்தில்

அப்பா, அம்மாவுக்கு

எதாவது ஒன்று என்றால்

நான் நீ என்று ஓடி வருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்குஒன்று என்றால் அத்தனையும் மறந்து விட்டு

முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்!

பணமில்லாத ஒருவனை

அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால்,

உறவுகள் இல்லாத ஒருவன்

எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை

மறந்துவிடக் கூடாது!

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன்

ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற

ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ? ? ?

தனி மனித மாற்றமே ...

நம் சமுதாயத்தின் மாற்றம்..

நன்றி...
பகிர்வு பதிவு...

Thursday, March 07, 2024

நோய் இன்றி வாழ வழிகள்...

📗❤‍🔥 *_மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்_* 

📗❤‍🔥
1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.

📗❤‍🔥
2. இரவில் கண் விழித்திருத்தல்.

📗❤‍🔥
3. காலை உணவை தவிர்த்தல்.

📗❤‍🔥
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

📗❤‍🔥
5. பணத்தை நோக்கிய ஓட்டம்.

📗❤‍🔥
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.

📗❤‍🔥
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

📗❤‍🔥
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்.

📗❤‍🔥
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

📗❤‍🔥
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

📗❤‍🔥
போதியளவு நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
இளநீர் போன்றவை மிக நல்லது.

📗❤‍🔥
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

📗❤‍🔥
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

📗❤‍🔥
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

📗❤‍🔥
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

📗❤‍🔥
உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

📗❤‍🔥
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

📗❤‍🔥
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

📗❤‍🔥
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

📗❤‍🔥
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.

📗❤‍🔥
ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ...

நன்றி..
பகிர்வு பதிவு

Monday, January 22, 2024

கணிதம் இனிக்கும்...பகா எண்கள்.

*முக நூல் பதிவொன்றிலிருந்து*

*Truncatable primes என்றால் என்ன?*

Truncatable பகா எண்கள் பற்றி காண்பதற்கு முன்பு பகா எண்கள் என்றால் என்னவென்று பார்த்து விடலாம் ‌.

1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் இல்லாத, பெரிய இயல் எண்களே ( 1 அல்லாத )பகா எண்கள் ஆகும்.

2,3, 5,7,11…………, போன்ற எண்களுக்கு 1 மற்றும் அதே எண்களே நேர் வகுத்திகள்.

மற்ற அனைத்து இயல் எண்களும் பகு எண்கள்.

பகா எண்கள் சரி! அது என்ன truncatable பகா எண்கள்?

Truncatable பகாஎண்களுக்குச் சரியான மொழியாக்கம் தெரியவில்லை. ஆதலால் நான் சிதைவுறும் பகா எண்கள் என எடுத்துக் கொள்கிறேன்.

இந்தச் சிதைவுறும் பகா எண்கள்

இடச்சிதைவு பகா எண்
வலச்சிதைவு பகா எண்
என இருவகைப்படும்.

1.இடச்சிதைவு பகா எண்கள்[Left truncatable primes]

இடச்சிதைவு பகா எண்கள் என்பது ஒரு பகா எண்ணின் இடப்புற எண்களை நீக்கி விட்டே வந்தாலும் கிடைக்கும் எண்கள் பகா எண்களாகவே இருக்கும்.

அதாவது 997 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இடப்புற 9-ஐ நீக்கிவிட்டால் 97 என்ற பகா எண் கிடைக்கும். மீண்டும் இடப்புற 9-ஐ நீக்கிவிட்டால் 7 என்ற பகா எண் கிடைக்கும். இதனைத் தான் Left truncatable primes என்பர்.

2,3,5,7,13,17,23,37,43,47,53,67,73,83,

97,113,137,167,173,197,223,283,313,

317,337,347,353,367,373,383,397,443,

467,523,.…..………………………,,,

இவ்வாறாக மொத்தம் 4260 எண்கள் உள்ளன.

மிகப்பெரிய இடப்புறச்சிதைவு பகா எண் மொத்தம் 24 இலக்கங்களைக் கொண்டது.

357686312646216567629137

மேற்கூறிய எண்ணில் மொத்தம் 24 இலக்கங்கள் உள்ளதா என எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுதான் மிகப்பெரிய Left truncatable Prime number ஆகும் ‌.

2.வலச்சிதைவு பகா எண்கள் [Right truncatable primes]

வலப்புறத்தில் உள்ள இலக்கங்களை நீக்கிக்கொண்டே வரும்போதும் மீண்டும் பகா எண்கள் கிடைக்கும் வகையில் அமைந்த எண்கள் Right truncatable primes ஆகும்.

மொத்தம் 83 Right truncatable primes எண்கள் உள்ளன. அவை,

2,3,5,7,13,17,23,37,43,47,53,59,71,73……….

…………….2339,2393,2399,……………7333,…….

37339,37397,……….…..………………………….….….

…………………………73939133

வலப்புறச்சிதைவு பகா எண்களில் மிக அதிக இலக்கம் கொண்ட எண் 73939133 ஆகும்.

இதனை வலப்புறத்திலிருந்து இலக்கங்களை ஒவ்வொன்றாக நீக்கி விட்டே வந்தால் கிடைக்கும் ஒவ்வொரு எண்ணும் பகா எண்ணாகவே இருக்கும்.

இதனைத் தான் Right truncatable primes என்பர்.

இதுபோக இருபுற பகா எண்கள் [ Two sided Primes] என்றும் ஒன்று உண்டு. அதாவது இடம், வலம் என எந்தப் புறம் இலக்கங்களை நீக்கிக் கொண்டே வந்தாலும் பகா எண்களே கிடைக்கும்.

2,3,5,7,23,37,53,73,313,373,

797,3137,3797, 739397

இதுதான் Truncatable Primes மற்றும் அதன் வகைகள் ஆகும்.

கணிதம் கற்போம்...!

நன்றி

பகிர்வு பதிவு