வணக்கம் நண்பர்களே..! வெள்ளிக்கிழமை26-03-2021 அன்று பேரிடர் காலம் சற்று குறைந்த பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ( ஒரு வருடம் கழித்து ) நங்கவள்ளி ஒன்றியத்தைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு( Effectieness of free open source software in Social science ) எபெக்டிவெனஸ் ஆஃ ஸ்ரீ ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என் சோசியல் சயின்ஸ் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 5 கருத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் நானும் ஒருவன் நான் எடுத்துக்கொண்ட தலைப்பு Learning app இல் Timeline ( காலக்கோடு) லேர்னிங் ஆப் என்ற பகுதியில் டைம்லைன் பற்றிய எனது வகுப்பு நேற்று சிறப்பாக அமைந்தது .ஆசிரிய பெருமக்களுக்கு லேர்னிங் ஆப் என்றால் என்ன அதில் உள்ள பிரிவுகள் என்னென்ன அதில் உள்ள 22 வகையான வினா அமைக்கும் முறையை விளக்கி கூறப்பட்டது. இந்த ஆன் லையின் செயலி மூலமாக பாடப்பொருள் உருவாக்கவும் மாணவர்களை மதிப்பீடும் செய்ய முடியும் என்பதை சிறப்பாக செய்துகாட்டப்பட்டது. அனைவரும் மகிழ்வோடு கற்றுக்கொண்டார்கள் . கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் பல வினாக்கள் எழுப்பி தங்களது ஐயங்களைப் போக்கிக் கொண்டார்கள். மேலும் காலக் கோடு வரைவது எப்படி காலக்கோட்டில் படங்கள் சேர்ப்பது, ஒலிக்கலவை செய்வது, காணொளிகளை இணைப்பது போன்ற பல தகவல்களை ஆசிரியர் பெருமக்களுக்கு எடுத்துக் கூறினோம். இந்த பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மடி கணினியின் மற்றும் செயல்திறன் கை பேசி மூலம் செய்து கற்றுக்கொண்டார்கள்... பயிற்சி அனைவருக்கும் பல புதிய யுத்திகளையும் தொழில்நுட்ப அறிவையும் பெற்றார்கள்..அனைவரும் சிறப்பாக கலந்துகொண்டு செய்து கற்றார்கள் ... தங்கள் கற்ற தொழில் நுட்ப அறிவை வகுப்பறையில் பயன்படுத்துவதாக ஆசிரியர் உறுதி கூறிய நிகழ்வு மறக்க முடியாத தருணம்..மேலும் ஆசிரிய பெருமக்கள் கேட்ட வினாக்கள் சிறப்பாக பதிலளித்து பயிற்சியை அருமையாகவும், எளிமையாகவும், அனைவரும் மகிழும் வண்ணம் முடித்தோம் என்பதில் எங்களுக்கும் மற்றற்ற மகிழ்ச்சி . வாய்ப்பு வழங்கிய சேலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உத்தமசோழபுரம் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் தனம்மாள் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
Wednesday, March 31, 2021
Tuesday, March 30, 2021
புதிய பார்வை..புதிய கோணம்...
Friday, March 26, 2021
ICTech ஆண்ராய்டு செயலி அறிமுகம்..
உறவுகளுக்கும் நட்புகளுக்கும் ஒரு மகிழ்வான செய்தி...
எனது நீண்ட நாள் கனவு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் தரும் செயலியை உருவாக்குவது... இன்று அது நடந்தேறியது... எனது ஆண்ராய்டு செயலியான ICTech யை
சேலம் உத்தமசோழபுரம் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர்.திரு.செல்வம் அவர்களின் திருக்கரங்களால்
அறிமுகம் செய்தார்கள்.. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்குறேன்..
எனது செயலி தற்போது Google playstore- ல் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர்கள் ,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதனை download செய்து Install செய்து பயன்படுத்த அன்போடு வேண்டுகிறேன்..
Ictech app link
shorturl.at/mswMO
என்றும் கல்விப் பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.
Wednesday, March 24, 2021
பாடப்பொருள் செறியூட்டல் பயிற்சி..
Friday, March 12, 2021
புதிய பார்வை...புதிய கோணம்...
Monday, March 08, 2021
தனித்துவ ஆர்வக் குறிப்பொலி மற்றும் தந்திரோபாய மின் உள்ளடக்க வடிவமைப்புக்கான திட்டப் பயிற்சி
தனித்துவ ஆர்வக் குறிப்பொலி மற்றும் தந்திரோபாய மின் உள்ளடக்க வடிவமைப்புக்கான திட்டப் பயிற்சி
நாள் 04.03.2021
இடம் மாவட்ட ஆசிரியர்க் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தமசோழபுரம்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக திட்டமிடல் என்பது மிகவும் அவசியம்.
முதல்வர் ஐயா அவர்கள் பயிற்சிக்கான திட்டமிடலை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.
நாள் முழுவதும் பயிற்சியை முதல்வர் அவர்களே முன்னின்று நடத்தி இடையிடையே பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அனைவரையும் ஈடுபடுத்தி இப்பயிற்சிக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும், உத்திகளையும் அளித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
பயிற்சி கட்டகம் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் போல் சுருக்கமாக, விளக்கமாக, தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக மிக குறைந்த பக்கங்களிலேயே ரத்தினச் சுருக்கமாக இருப்பது மிகவும் சிறப்பு.
எங்களைப் போன்ற கணினி தொழில்நுட்பத்தில் குறைந்த அளவு அனுபவம் கொண்ட ஆசிரியர்களையும் தொழில்நுட்பத்திற்கு உள்ளாக ஈர்க்கும் இச்செயல் ஆராய்ச்சி இந்தத் தொழில்நுட்ப காலத்தில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
பயிற்சி தலைப்பிலேயே ஒரு தந்திரத்தை ஏற்படுத்தி உள்ளார்ந்த ஆர்வத்தை கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் வழிகாட்டி ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றும் இந்த ப் பரிமாற்ற பயிற்சி எங்களைப்போன்ற ஆசிரியர்களுக்கு மேலும் தொழில்நுட்பத்தை கற்க உதவியாக அமையும் என்பது திண்ணம்.
பயிற்சி கட்டகத்தில் உள்ள தந்திரங்களை போன்று வழிகாட்டி ஆசிரியர்களும் அவர்கள் தொழில்நுட்ப தந்திரங்களை எங்களைப் போன்ற ஆசிரியருக்கு கற்றுத் தருவதன் மூலம் முதல்வர் அவர்களின் கனவு இந்தப் பயிற்சியின் நோக்கம் சிறப்பாக நிறைவேறும்.
மாணவர்கள் பாட கருத்துக்களை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும், ஆசிரியர்கள் சிரமமின்றி மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணமும் செயல் ஆராய்ச்சியின் முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது.
கற்பிப்போர்க்கும் கற்போருக்கு மிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலை இச்செயல் ஆராய்ச்சியின் முடிவு ஏற்படுத்தும் என்பது உறுதி.
Tuesday, March 02, 2021
நுண் காணொளி தயாரிப்புக்கு பாராட்டு..
நேற்று (02-03-2021 .செவ்வாய்)
சேலம் உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு வருகை புரிந்த SCERT இணை இயக்குனர் மேடம் ( J.D) அவர்கள் நாங்கள் தயாரித்த நுண்கணொளிகளை (Micro Video) பார்வையிட்டு பல நல்ல கருத்துகளை தெரிவித்தும் எங்கள் காணொளிகளை பாராட்டியது மிக்க மகிழ்ச்சி அளித்தது. அவர்களுடன் சேலம் மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உடன் இருந்தனர்...
மிக்க மகிழ்வுடன்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.