Sunday, July 07, 2019

புதிய பார்வை....

🍁🍁புதிய பார்வை🍁🍁

பண்புகளே
நமது
ஆணிவேர்...

தம் வாழ்நாளில் புன்னகைக்க மறந்த,
அதி கோவக்கார
பணக்காரர் ஒருவர்...

தான் இறந்து
போவதாகவும்,
அதற்கு பிறகு
சொர்க்கத்திற்கு
செல்வதாகவும்,
கனவு கண்டார்...

அந்த கனவில்
ஓர் அழகான வீதியில்,
அவர் நடந்து போய்
கொண்டிருந்தார்..

அந்த வீதியில்
ஒவ்வொரு வீடும்
மாளிகையாக
இருந்தது.

குறிப்பாக
ஒருவீடு மிகவும்
அழகாகவும்,
நேர்த்தியாகவும்
இருந்தது...

அவர் "அந்த வீடு யாருடையது?"
என்று கேட்டார்...

அது அவருடைய வேலைக்காரர் ஒருவருடையது என்று பதில் தரப்பட்டது...

அவர் "என்னுடைய வேலைக்காரரின் வீடே இப்படி அற்புதமாக இருக்கும் போது
என்னுடைய வீடு
இதைவிட நன்றாக
இருக்கும்" என்னும் இறுமாப்புடன்
சென்றார்...

அடுத்ததாக
ஒரு சின்ன வீடு
வந்தது...

அதற்கடுத்து
இன்னமும்
சிறிய வீடு
வந்தது...

தொடர்ந்து வந்தவை
சின்ன சின்ன வீடுகளாகவே
இருந்தது...

"நீ இந்த சிறிய வீட்டில்
தான் வசிக்க போகிறாய்"
என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது...

மிகுந்த கோபம் அடைந்த அவர் "இந்த பொந்திலா
நான்  வசிக்க போகிறேன்?" என ஆத்திரப்பட்டார்...

" நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் பூமியில்
இருக்கும் போது
எப்படி இருந்தீர்களோ,
என்ன பொருட்களை அனுப்பினீர்களோ அவற்றை கொண்டுதான்,
தங்களுக்கு வீடு கட்டியுள்ளோம்"
என்று சொர்கத்தின்
நிர்வாகஸ்தர்கள்
அவரிடம் சொன்னார்கள்...

கனவில் இருந்து அவர், திடுக்கென்று விழித்து கொண்டார்...

அன்றில் இருந்து பணத்தை அவர் மதிக்கவில்லை...

மனிதர்களின் குணத்திற்கு மரியாதை செய்தார்...

அவரிடம் இருந்து புறப்பட்ட புன்னகை மற்றவர்களுக்கு
தொற்றி கொண்டது...

"அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..

வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு",..

வரிகளுக்கு ஏற்ப
வாழ்ந்து பார்க்கலாம்
வாங்க...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: