🍁🍁புதிய பார்வை🍁🍁
நமது வீட்டில் தினமும் அழுகும் காய்கறிகள்,கனிகள், பொருட்களை, போட்டு
வைக்க ஒரு குப்பை கூடையை பயன்படுத்தி வருகிறோம்.
அப்படியே
விட்டுவைத்தால், வீடு நாற்றமடித்து விடும் என்பதால், அதனை
அகற்றியும் விடுகிறோம்.
நம் எல்லோரிடமும்,
மனதில் அப்படியொரு
குப்பை கூடை இருக்கிறது.
அதனுள்
விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை...
என பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்,
நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சி தென்றலை, நுகர முடியாமல் இருக்கிறோம்.
நம்முடைய மனதில் யார் மீதோ இருக்கும் தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்று
கொண்டு, ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.
நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள், நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.
வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றி
குடித்தனம்
நடத்துபவர்களும்
இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்...
அவற்றின் அழுகல் நாற்றம்...
உதடுகளின் வழியே சொற்களாகவும்,
கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு...
நம் மன நிம்மதியை தொலைக்க, நாமே காரணமாக அமைந்து விடுகிறோம்.
வீட்டில் இருக்கும் குப்பைகளை தினசரி வெளியே கொட்டுவதை போல...
நம்
மன குப்பைகளை,
தினமும்
அகற்றும் போது...
நம் மனமும்
மணம் வீச
தொடங்கும்...
வாங்க...
முயற்சிகள்
செய்யலாம்...
அன்புடன்
காலை
வணக்கம்.
No comments:
Post a Comment