Thursday, June 20, 2019

மௌனம்...புதிய பார்வை..

💢 *மௌனம்*
🌷🌺🌷🌺🌷🌺🌷

🌷மெளனம், ஒட்டு மொத்த உலகத்திற்கானப் பொது மொழி. ஓசை எழுப்பாத ஒரு மொழி. பேசாமல் அமைதி காப்பது மெளனத்தின் ஒரு வகை. பேசக்கூடாத இடத்திலும், பேசத் தேவையில்லாத இடத்திலும் இந்த *"மெளனம்"* நமக்கு மிகவும் அவசியம்.

🌷இரண்டாவது, *"பூரணமான மெளனம்"* என்பது வாயால் பேசாமலும், மனதால் எண்ணாமலும் இருப்பதே. இப்படிப்பட்ட மௌனம் ஆழமான ஒரு வகை தியானம். யோகா, மற்றும் தியான வகுப்புகளில், இது போன்ற மெளனம் கடைப்பிடிக்கப் படுகிறது.

🌷மூன்றாவது *"பரிபூரண மெளனம்"*. ஐம் புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாவதே பரிபூரண மெளனம். இது தவம் செய்பவர்கள் கடைப்பிடிக்கும் மெளனம்.

🌷நம் பேச்சால், ஒருவர் மனம் புண்படும் நிலை ஏற்படும் என்றால், அப்பொழுது மெளனமே சாலச் சிறந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் பொய்யுரைக்க வேண்டிய நிலை வந்தால் அதைத் தவிர்க்க மெளனத்தைக் கையில் எடுக்கலாம்.

🌷மெளனம் அமைதிக்கான ஆரம்பம்.

🌷இந்த வார்த்தைக்கு, பல அர்த்தங்கள் உள்ளன.

🌷கேள்வி கேட்கப்படும் நேரத்தில், 'மௌனம்' *"சம்மதம்"*.

🌷நாம் நேசித்த சில உறவுகளைப் பிரியும் போது, 'மௌனம்' *"துன்பம்"*.

🌷இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது 'மௌனம்' *"நம்பிக்கை"*.

🌷நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில், 'மௌனம்' *"சித்ரவதை"*.

🌷நாம், தோல்வி கண்டு, வெற்றிக்கு வழிதேடும் போது, 'மௌனம்' *"பொறுமை"*.

🌷நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் 'மௌனம்', *"அடக்கம்"*.

🌷திருமணக் கோலத்தில் உள்ள அமைதியின் போது, 'மௌனம்', *"வெட்கம்"*.

🌷தவறுதலாக, தவறு செய்த போது, 'மௌனம்', *"பயம்"*.

🌷ஆசைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் போது, 'மௌனம்', *"எதிர்பார்ப்பு"*.

🌷கோபத்தைக் குறைக்காமல் அடக்கும் போது 'மௌனம்',  *"ரத்தக்கொதிப்பு"*.

🌷இலக்கை அடைய நினைத்து, ஒருமுகப்படுத்தும் போது, 'மௌனம்', *"சக்தி"*.

🌷தீவிரமாகப் போராடும் போது, 'மௌனம்', *"வலிமை"*.

🌷பிடிக்காத விஷயங்களை, ஒத்துக்கொள்ளாத போது, 'மௌனம்', *"எதிர்ப்பு"*.

🌷கல்யாண வீட்டில் கால் இடறி விழுந்த பின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது, 'மௌனம்', *"அவமானம்"*.

🌷நம்மை விட்டுப் பிரிந்தவர்களை, பாசத்தோடு நினைக்கும் போது, 'மௌனம்', *"துக்கம்...!"*

🌷நம் குடி கெடுத்தவர்களை, பழிவாங்க நினைக்கும் போது, 'மௌனம்', *"ஆத்திரம்."*

🌷கற்ற வித்தையைக் கையாளும் போது, 'மௌனம்', *"ஆனந்தம்."*

🌷அயர்ந்த வேளையில், அமைதியான அந்த 'மௌனம்', *"உறக்கம்."*

🌷உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க, உடலோ, அசையாமல் அயர்ந்திருக்க, அண்டை அயலார் சூழ்த்திருக்க, 'மௌனம்',  *"மரணம்...!"*

🌷வார்த்தைகள் இல்லாத புத்தகம் 'மௌனம்'. ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.

🌷 *"மௌனம் என்பது வெளிச்சம்".* நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது இருட்டு".* எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது மூடி"!* இதைத் தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது போதி மரம்".* இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும்.

🌷 *"மௌனம் என்பது தவம்".* இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

🌷 *“மௌனம் என்பது வரம்”* நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும்.

🌷 *"இதழ்களை இறுக மூடி, நாம் நமக்குள் இறங்குவோம்!”*

🌷ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் *"உங்கள் பேச்சு, மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது"*.🙏

*படித்ததில் பிடித்தது*

No comments: