Wednesday, June 26, 2019

நிகழ்தகவு....ஒரு. பார்வை..

நிகழ்தகவு

என்று சொல்லப்படும் Probability ஐ குழந்தைகள் மனதில் ஏற்றுவதுதான் மிக எளிதானது.

ஆனால் நம்மூரில் அதைத்தான் கடினமான பாடமாக உருவகப்படுத்தி பயமுறுத்தி வைத்தாற்போல தோன்றும்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் ஒரு வகுப்பில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்களை பத்து பத்து பேராக பிரித்துக் கொள்ளுங்கள்.

பத்து பேர் கொண்ட மூன்று டீம்கள். சரியா.

டீம் ஏ,
டீம் பி,

டீம் சி.
ஒவ்வொரு அணிக்கும் இரண்டு Dice எனப்படும் பகடைகளை கொடுங்கள்.

ஒரு நோட்டில் இரண்டிலிருந்து பண்ணிரெண்டு வரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

டீமில் ஒரு மாணவரை அழைத்து பத்து முறை அந்த இரண்டு Dice களையும் உருட்ட சொல்லுங்கள்.

முதல் தடவை உருட்டும் போது முதல் பகடையில் ஒன்றும் இரண்டாம் பகடையில் ஐந்தும் விழுந்தால் 1 + 5 = 6 என்று கணக்கில் கொள்ளுங்கள்.

பத்து முறை உருட்டி இரண்டு பகடையில் வரும் கூட்டுத்தொகை எண்ணுக்கு நேரே எழுதி கொள்ள சொல்லுங்கள்.

முதல் மாணவன் பத்து முறை உருட்டியதில் 7 ஆம் எண் மூன்று முறை, எட்டாம் எண் 2 முறை இப்படி எழுதி கொள்ள சொல்லுங்கள்.

இப்படி பத்து மாணவர்களும் ஆளுக்கு பத்துமுறை உருட்ட வேண்டும்.

2 3 4 5 6 7 8 9 10 11 12 எண்ணுக்கு நேரே பத்து பேரும் உருட்டியதில் எந்த எண் கூட்டுத்தொகை  விழுந்தது என்பதை எழுதி கொள்ள சொல்லுங்கள்.

இப்படியே அடுத்த இரண்டு டீம்களும் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது மூன்று டீம்களின் கணக்கையும் சேர்க்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால்.

முன்னூறு முறை இரண்டு பகடைகளை உருட்டி  அதில் வரும் கூட்டுத்தொகை ஒவ்வொரு எண்ணுக்கும் எத்தனை முறை வருகிறது என்று கணக்கிட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு வரும் விடை தோராயமாக இதுவாகத்தான் இருக்கும்.

இரண்டு: 2.78 %
மூன்று: 3 %
நான்கு: 8.33 %
ஐந்து: 11.11  %
ஆறு: 13.89  %
ஏழு: 16.67  %
எட்டு: 13.89  %
ஒன்பது: 11.11  %
பத்து: 8.33  %
பதினொன்று: 5.56  %
பண்ணிரெண்டு: 2.78  %

இதை ஒரு கிராப் ஷீட்டில் வரைந்து கொள்ளுங்கள்.

படுத்திருக்கும் எக்ஸ் அச்சில் எண்களையும், நின்றிருக்கும் வொய் அச்சில்  எத்தனை சதவிகிதம் என்பதையும் மார்க் செய்து கொள்ளுங்கள்.

இப்போது மேலே கிடைத்த சதவிகித எண்களை கிராப்ட்  ஷீட்டில் பிளாட் செய்யுங்கள்.

செய்து அப்புள்ளிகளை இணைத்தால் ஒரு Bell curve கிடைக்கும்.

உலகில் உள்ள எந்த இரு பகடைகளை எத்தனை முறை உருட்டினாலும் இந்த Bell curve  தான் கிடைக்கும். அது மாறவே மாறாது.

இதை மாணவர்களுக்கு சொல்லுங்கள்.

1. ஏன் 2,12 எண்கள் கிடைக்கும் சதவிகிதம் குறைவாக இருக்கிறது.

2. ஏன் ஏழு கிடைக்கும் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

3. ஏன் ஒன்று என்ற எண் அங்கே இல்லை.

இப்படியாக நிறைய கேள்விகள் கேளுங்கள். எல்லாமே எளிய தர்க்க கேள்விகள்தாம்.

அதை அவர்கள் எளிதாக புரிந்து கொண்டு விடை அளிப்பார்கள்.

இப்போது அவர்கள் நிகழ்தகவில் முக்கியமான Normal Distribution என்றால் என்னவென்று உளப்பூர்வமாக புரிந்து கொண்டு விட்டனர்.

இந்த அடிப்படையை புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு Probability மீது ஆர்வம் வரும்.

மேலும் மேலும் அம்முறையில் அத்துறையில் யோசிக்கும் ஆர்வத்தையும் ஒவ்வொரு மாணவரும் பெறுவார்கள்.

இதை வீட்டிலும் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிறார்களை உற்சாகப்படுத்தி செய்ய வைக்கலாம்.

நன்றி...
Copied from mr vijay baskar vijay sir fb post

Thursday, June 20, 2019

ஆசிரியர்...மாணவன்...உறவு

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அதன் மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..

அன்புடன்
காலை
வணக்கம்.
🙏🙏🙏🙏💐💐💐💐

மௌனம்...புதிய பார்வை..

💢 *மௌனம்*
🌷🌺🌷🌺🌷🌺🌷

🌷மெளனம், ஒட்டு மொத்த உலகத்திற்கானப் பொது மொழி. ஓசை எழுப்பாத ஒரு மொழி. பேசாமல் அமைதி காப்பது மெளனத்தின் ஒரு வகை. பேசக்கூடாத இடத்திலும், பேசத் தேவையில்லாத இடத்திலும் இந்த *"மெளனம்"* நமக்கு மிகவும் அவசியம்.

🌷இரண்டாவது, *"பூரணமான மெளனம்"* என்பது வாயால் பேசாமலும், மனதால் எண்ணாமலும் இருப்பதே. இப்படிப்பட்ட மௌனம் ஆழமான ஒரு வகை தியானம். யோகா, மற்றும் தியான வகுப்புகளில், இது போன்ற மெளனம் கடைப்பிடிக்கப் படுகிறது.

🌷மூன்றாவது *"பரிபூரண மெளனம்"*. ஐம் புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாவதே பரிபூரண மெளனம். இது தவம் செய்பவர்கள் கடைப்பிடிக்கும் மெளனம்.

🌷நம் பேச்சால், ஒருவர் மனம் புண்படும் நிலை ஏற்படும் என்றால், அப்பொழுது மெளனமே சாலச் சிறந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் பொய்யுரைக்க வேண்டிய நிலை வந்தால் அதைத் தவிர்க்க மெளனத்தைக் கையில் எடுக்கலாம்.

🌷மெளனம் அமைதிக்கான ஆரம்பம்.

🌷இந்த வார்த்தைக்கு, பல அர்த்தங்கள் உள்ளன.

🌷கேள்வி கேட்கப்படும் நேரத்தில், 'மௌனம்' *"சம்மதம்"*.

🌷நாம் நேசித்த சில உறவுகளைப் பிரியும் போது, 'மௌனம்' *"துன்பம்"*.

🌷இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது 'மௌனம்' *"நம்பிக்கை"*.

🌷நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில், 'மௌனம்' *"சித்ரவதை"*.

🌷நாம், தோல்வி கண்டு, வெற்றிக்கு வழிதேடும் போது, 'மௌனம்' *"பொறுமை"*.

🌷நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் 'மௌனம்', *"அடக்கம்"*.

🌷திருமணக் கோலத்தில் உள்ள அமைதியின் போது, 'மௌனம்', *"வெட்கம்"*.

🌷தவறுதலாக, தவறு செய்த போது, 'மௌனம்', *"பயம்"*.

🌷ஆசைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் போது, 'மௌனம்', *"எதிர்பார்ப்பு"*.

🌷கோபத்தைக் குறைக்காமல் அடக்கும் போது 'மௌனம்',  *"ரத்தக்கொதிப்பு"*.

🌷இலக்கை அடைய நினைத்து, ஒருமுகப்படுத்தும் போது, 'மௌனம்', *"சக்தி"*.

🌷தீவிரமாகப் போராடும் போது, 'மௌனம்', *"வலிமை"*.

🌷பிடிக்காத விஷயங்களை, ஒத்துக்கொள்ளாத போது, 'மௌனம்', *"எதிர்ப்பு"*.

🌷கல்யாண வீட்டில் கால் இடறி விழுந்த பின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது, 'மௌனம்', *"அவமானம்"*.

🌷நம்மை விட்டுப் பிரிந்தவர்களை, பாசத்தோடு நினைக்கும் போது, 'மௌனம்', *"துக்கம்...!"*

🌷நம் குடி கெடுத்தவர்களை, பழிவாங்க நினைக்கும் போது, 'மௌனம்', *"ஆத்திரம்."*

🌷கற்ற வித்தையைக் கையாளும் போது, 'மௌனம்', *"ஆனந்தம்."*

🌷அயர்ந்த வேளையில், அமைதியான அந்த 'மௌனம்', *"உறக்கம்."*

🌷உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க, உடலோ, அசையாமல் அயர்ந்திருக்க, அண்டை அயலார் சூழ்த்திருக்க, 'மௌனம்',  *"மரணம்...!"*

🌷வார்த்தைகள் இல்லாத புத்தகம் 'மௌனம்'. ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.

🌷 *"மௌனம் என்பது வெளிச்சம்".* நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது இருட்டு".* எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது மூடி"!* இதைத் தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம்.

🌷 *"மௌனம் என்பது போதி மரம்".* இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும்.

🌷 *"மௌனம் என்பது தவம்".* இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

🌷 *“மௌனம் என்பது வரம்”* நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும்.

🌷 *"இதழ்களை இறுக மூடி, நாம் நமக்குள் இறங்குவோம்!”*

🌷ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் *"உங்கள் பேச்சு, மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது"*.🙏

*படித்ததில் பிடித்தது*

Wednesday, June 12, 2019

புதிய பார்வை...

விடா
முயற்சிக்கும்,
வயதிற்கும்,
தொடர்பே
இல்லை,
என
பலர்
நிரூபித்து
உள்ளனர்...

100
வயதான
கேர்மன்
ஹெரேரா,
தன்
முதல்
ஓவியத்தை,
தன்
89 வது
வயதில்
வரைந்து
விற்றுள்ளார்.

அதன்
பின்
அவர்,
ஓவியத்திற்கு
அதிக
தேவை
ஏற்பட,
தொடர்ந்து
வரைய
ஆரம்பித்தார்.

அவரை
ஊக்குவிக்கும்
சக்தி,
உந்து
சக்தி,
எது
என்ன
கேட்ட
போது,
அவர்
சொன்னது...

"எப்போதுமே
அடுத்தது
என்ன,
அடுத்தது
என்ன,
என
ஆர்வத்துடன்
எதிர்
கொள்வேன்.
அதுவே
என்
வெற்றியின்,
மகிழ்ச்சியின்
ரகசியம்,"
என்று
கூறினார்...

வாங்க...

அடித்த
நொடி,
எப்படி
வேண்டும்
என்றாலும்
இருக்கட்டும்...

நாம்
அதனை,
ஆர்வத்துடன்
எதிர்
கொள்வோம்...

வெற்றியாய்,
மகிழ்ச்சியாய்
மாற்றியும்
அமைப்போம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Tuesday, June 11, 2019

புத்தகம் என்ன செய்யும்...

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.

2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.

4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம்  அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.

7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்

8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.

9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது
காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.

13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்.

14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.

16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.

17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.

19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்!
*
ஆனால் இன்றய சுழலில் நம்முடைய நேரந்தை சமூக ஊடகங்களில் அதிகமாக செலவு செய்கிறோம். இந்நிலை மாறவேண்டும்.

புதிய பார்வை...

🍁🍁புதிய பார்வை🍁🍁

தனி தன்மை என்பது நம் அனைவருக்கும் உண்டு...

அதை கண்டு, உணர்ந்து, வெற்றியாய் மாற்றி கொள்வதில் நம் சிறப்பு அடங்கியுள்ளது...

தனி தன்மை என்பது, இவர்களை வேறுபட்டவர்களாக காட்டுபவை மட்டும் அல்ல...

விரும்ப தக்கவர்களாக காட்டுவது...

இவர்கள் தன் வாழ்க்கை முழுவதும், புதிது புதிதாக, எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்...

இவர்கள் அதை பற்றி அதிகம் பேசுவது இல்லை...

ஆனால் இவரை சுற்றி இருப்பவர்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள்...

சிலர் தாமாகவே வந்து உதவுவார்கள்...

அந்த உதவியின் தாக்கமும்,அது ஏற்படுத்தும் நன்றி உணர்வும் அளவிட முடியாததாக இருக்கும்...

இவர்கள் எப்போதும் மதிக்க படுவார்கள்...

இவர்கள் இருக்கும் இடம், எப்போதும் கலகலப்பாக இருக்கும்...

இவர்கள் உற்சாகமான உரையாடல் தரும் உந்து சக்திக்காகவே, இவர்களை சுற்றி இருப்பார்கள்...

இவர்கள் செய்யும் செயல்கள் எப்போதும் நேர்த்தியாகவே இருக்கும்.

நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் செய்வதில்லை...

இவர்கள் செய்வதே நேர்த்தியாகத்தான் இருக்கும்...

தமது தோல்விகளை,
அவமானங்களை பற்றி சற்றும் இவர்கள் கவலை படுவதே இல்லை...

மாறாக அவைகளையே உரமாக்கி வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற, தெரிந்து வைத்திருப்பார்கள்...

எந்த நேரத்திலும் காலத்திலும் இவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்...

வாங்க...

நமக்கும்
தனி தன்மைகள்
உண்டு...

அதனை தரமாய் மாற்றி வெற்றிகளை குவிக்க முயற்சிகள் செய்வோம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

Monday, June 10, 2019

புதிய பார்வை....

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா?

இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை.

ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம்.

ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு.

குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை.

பிழைகள்

வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார்.

தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்.

எண்ண ஓட்டம்

வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக்கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர்.

தோல்வியாளர்: எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு வலம் வருபவர் இவர். எந்தப் பிரச்னையையும் எதிர்மறைச் சிந்தனைகளுடனேயே அணுகுவார்.

பேச்சு

வெற்றியாளர்: அடிமட்ட அளவுக்கு இறங்கி, பிறரை இழிவாகப் பேச மாட்டார். புதுப்புது விஷங்களை, சமூகப் பார்வைகளை, அவர்களது கருத்துக்களை திட்டமிட்டு விவாதிப்பார்; கலந்துரையாடுவார்.

தோல்வியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அல்லது ஏதாவது நிகழ்வுகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசுபவராக இருப்பார். புரளி பேசுவதையே பொழுதுபோக்காகக்கொண்டு செயல்படுவார்.

கருத்துகள்

வெற்றியாளர்: தன்னுடைய கருத்துகளை, வெற்றிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வார். பிறர் கூறும் அறிவுரைகளை நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்வார்.

தோல்வியாளர்: தன்னுடைய வெற்றிகளைக்கூடப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார். பிறரின் அறிவுரைகளை விரும்பவே மாட்டார்.

குணம்

வெற்றியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நல்ல செயல்களை மதிப்பார்; மனதாரப் பாராட்டுவார். அனைத்துத் தரப்பினரையும் உயர்வாக மதிக்கும் குணம்கொண்டவராக இருப்பார்.

தோல்வியாளர்: வெகு எளிதாக அனைவரையும் குறை கூறிவிடுவார்; அவர்களது வெற்றிகளையும் குறைகளாகவே சித்தரிப்பார்; எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்.

மன்னிக்கும் மனப்பான்மை

வெற்றியாளர்: தன்னைக் காயப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார். எதிரியையும் நண்பனைப்போல நேசிக்கும் பக்குவம்கொண்டவர்.

தோல்வியாளர்: தன் மனதை காயப்படுத்தியவர்களை வெறுத்து ஒதுக்குவார். அவர்களை தனது வாழ்கையில் இருந்தே முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளைச் செய்வார்.

பொது நலமும் சுயநலமும்

வெற்றியாளர்: `எல்லாரும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும்; முன்னேற வேண்டும்’ என்கிற பொதுச் சிந்தனையோடு செயல்படுவார். எப்போதும் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் துடிப்பார் அதற்காகவே செயல்படுவார்.

தோல்வியாளர்: தனக்கு உதவியவர்கள்கூட வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்கிற சுயநல எண்ணத்தோடு இருப்பார். `நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கு எப்போதும் தலைதூக்கி இருக்கும்.

பொது நலமும் சுயநலமும்

புகழ்

வெற்றியாளர்: அடுத்தவர் புகழையும் தன்னுடையதாக நினைத்துக் கொண்டாடுபவர். மற்றவர்களுக்குப் பேரும் புகழும் சென்றடைய வேண்டும் என எண்ணுபவர்.

தோல்வியாளர்: `புகழ் எனக்கு மட்டுமே உரித்தான ஒன்று. அதை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்கிற சுயநலத்தோடு பயணிப்பவர். 

ஆபத்தை எதிர்கொள்ளும் விதம்

வெற்றியாளர்: எந்தப் புது முயற்சியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர். ஆபத்தைக்கூட ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்.

தோல்வியாளர்: புது முயற்சிகளைக் கையாள்வதற்கு அஞ்சுவார். முயற்சி செய்வதற்கு முன்னரே அதில் ஆபத்து வரும் என்று முடிவு செய்து, அதை மேற்கொள்ளாமலேயே கைவிட்டுவிடுவார்.

பகிர்தல்

வெற்றியாளர்: தனக்குத் தோன்றும் கருத்துகளைப் பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையவர். மனதுக்குள் எதையும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாகப் பேசுபவர்.

தோல்வியாளர்: உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர். எந்த விஷயத்தையும் பிறரிடம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட மாட்டார்.

கற்றுக்கொள்ளல்

வெற்றியாளர்: புதுப்புது விஷயங்களையும், தனக்குத் தெரியாதவற்றையும் கற்றுக்கொண்டே இருப்பார். அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே (Update) இருப்பார். சிறியவர், பெரியவர் என்கிற பேதமின்றி அனைவரிடமும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கற்றுக்கொள்வார்.

தோல்வியாளர்: `எல்லாம் எனக்குத் தெரியும்’ என்கிற மன நிலையோடு இருப்பார். எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்.

வாழ்க்கைப் பாடங்கள் 

வெற்றியாளர்: அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் கண்டறிந்து, அவற்றை எளிதாகக் கடந்து செல்பவராக இருப்பார். கடந்தபோன நாட்களை அதிகம் யோசிக்க மாட்டார். இன்றைய தினத்தை எப்படி, நல்லபடியாகக் கழிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்திப்பார்.

தோல்வியாளர்: கடந்தகால பிரச்னைகளை நினைத்து நினைத்தே இன்றையப் பொழுதையும் பிரச்னைகளுடனேயே கழிப்பார். அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறிய முன்வர மாட்டார்.

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? சுயபரிசோதனைக்கு உதவும் இந்த 12 வழிமுறைகளையும் எல்லோருமே அசைபோட்டுப் பார்க்கலாம். இந்த வழிமுறைகள் பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். இவற்றை சுயபரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் போதும்... நிச்சயம்! நீங்களும் சாதனையாளராக வலம் வர முடியும்...

அன்புடன்
காலை
வணக்கம்.