லீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் ?
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகும் இதைத்தான் நாம் ஒரு வருடம் என்கிறோம் . ஆனால் ஒரு லீப் வருடத்திற்கு மட்டும் 366 நாட்கள் வரும் காரணம் என்னவென்று தெரியுமா ?
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகிறதல்லவா இதில் 6 மணி நேரத்தை ஒதுக்கிவிட்டு 365 நாட்களை ஒரு வருடம் என்கிறோம் இந்த விடுபட்ட 6 மணி நேரம் இரண்டாம் ஆண்டு 12 மணிநேரமாகிறது . மூன்றாம் ஆண்டு இன்னும் ஆறு மணிநேரம் சேர்ந்து 18 மணி நேரமாகிறது நான்காம் ஆண்டு 24 மணிநேரமாகிறது ஆகையால் இந்த நான்காம் ஆண்டு 365 நாட்களுடன் ஒரு நாள் சேர்ந்து 366 நாட்களுடன் லீப் வருடமாகிறது .
No comments:
Post a Comment