Siva03. /29.3.16
" மணி போல"!.
ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் பல மாணவர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.
சில மாதங்கள் கழித்து, ஒரு மூதாட்டி அவருடைய ஆசிரமத்துக்குள் கோபமாக நுழைந்தார். ‘யோவ் வாத்யாரே, நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா?’ என்று கூச்சல் போட ஆரம்பித்தாள்.
‘அம்மா, கோபப்படாதீங்க, என்ன விஷயம்? நிதானமாச் சொல்லுங்க!’ என்றார் ஜென் மாஸ்டர்.
’என் மகனும், அவனோட சிநேகிதனும் ஒரே நாள்லதான் உங்க ஆசிரமத்துல சிஷ்யர்களாச் சேர்ந்தாங்க’ என்றார் அந்த மூதாட்டி. ‘ஆறு மாசமா ரெண்டு பேரும் ஒரேமாதிரிதான் படிக்கறாங்க. ஆனா இன்னிக்கு, என் மகனைவிட அவனோட சிநேகிதன் அதிக புத்திசாலியா இருக்கான், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கான், இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’
‘என்ன அர்த்தம்? நீங்களே சொல்லுங்களேன்!’
’நீங்க உங்க மாணவர்கள் மத்தியில பாரபட்சம் காட்டறீங்க, ஒரு பையனுக்கு நல்லாச் சொல்லிக்கொடுத்துட்டு இன்னொரு பையனை ஒதுக்கறீங்க!’
ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அம்மா, கோயில்ல ஒரு மணியைக் கட்டியிருக்கோம், அதை நீங்க மெதுவா அடிச்சா கொஞ்சமா சத்தம் கேட்கும், பலமா அடிச்சா ரொம்ப தூரத்துக்குக் கேட்கும். இல்லையா?’
‘ஆமா, அதுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்?’
‘குரு-ங்கறவர் அந்த மணியைப்போலதான், மாணவன் எந்த அளவு சிரத்தை எடுத்துகிட்டுப் படிக்கறானோ, அந்த அளவு அவனால அந்த குருவைப் பயன்படுத்திக்கமுடியும், அவர்கிட்டேயிருந்து விஷயங்களைக் கிரகிச்சுக்கமுடியும், இதையெல்லாம் செய்யாம சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியும். புரியுதா?’....
No comments:
Post a Comment