Monday, April 29, 2024

மரம் வளர்ப்போம்....உயிர் பெறுவோம்...!

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் வணக்கம்..!

இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம்,
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.

நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம்.

*மரம் நடுவோம் இயற்கையை காப்போம்......

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்பொழுது தாம் வசிக்கும் பகுதிகளில் மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்!. நான் வசிக்கும் சிதம்பரம் தண்டேஷ்வர நல்லூர், குறுக்கு ரோடு பகுதியில் 100 மரக்கன்றுகள் (பூ பூக்கும்  மரக்கன்றுகள் ) இந்த ஆண்டு நகர் வாசிகளின் ஒத்துழைப்புடன் நட்டோம்,  நன்றாக வளர்ந்துள்ளது. இதுபோல் முயற்ச்சித்தால் ஓர் வனத்தையே நாம் உருவாக்கலாம்.....

இன்னும் சொல்லபோனால்  மரக்கன்றுகளை நட உற்பத்தியாளர்கள், 
வனத் துறையினர், 
பள்ளித் தாளாளர்கள், 
உயர் பதவிகளில் இருப்போர், 
பிரபலங்கள்,  வியாபாரிகள், 
ஆன்மீக தலைவர்கள், 
அனைத்து மதங்களின் குருமார்கள், 
கிராமத் தலைவர்கள், 
ஊர் தலைவர்கள், 
அனைத்துக் கட்சி தலைவர்கள் என இவர்களின் ஆதரவுகளையும் பெற்று பெரிய அளவில் செய்யலாம், பண ஆதரவும் Donation மூலமாகவும் பெற்று இதற்குரிய செலவினங்களை, கன்றுகளை பராமரிக்க பயன்படுத்தலாம்... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,

மரக்கன்றுகள் நடுவதற்க்கு உங்களுக்கான ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும்......, குழுவிற்கு தலைமையேற்ப்பவர் தன்னலமற்ற தேசிய சேவை செய்து,  பணி ஓய்வு பெற்ற பிறகும் தாய் நாட்டிற்காக ஏதேனும் தாம் நல்லதை மக்களுக்காக செய்யவேண்டும் என தியாக உள்ளத்துடன் வாழும் முன்னாள் இராணுவ வீரர்கள் தலைமையை ஏற்ப்பது சிறந்ததாக இருக்கும்,

 குழு அமைத்து செயல்பட முடியவில்லை எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள்
 அவர்கள் வீட்டு வாசலில் தெரு ஓரம், தோட்டத்தில் பழம், பூ, விலை உயர்ந்த மரங்கள் என நடவேண்டும், அப்படி செய்தாலே நாம் வசிக்கும் பகுதி பசுமை வாய்ந்த அழகிய வனமாக மாரும்,  

நண்பர்களே, அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள். 
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள். 

மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது  நட உதவுங்கள்.

மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும். சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மரக்கன்றுகளை தானமாகவும் தருகிறார்கள், சிலர் மரக்கன்றுகளை விலங்குகள் தின்னா வன்னம் கூண்டு தானமாக தருகிறார்கள்,  அதன் விபரங்களை பிறகு தருகிறேன்....

_பொது இடங்களில்_ :-
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம் 

இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் _புங்கன்_ மரத்தை ஆடு மாடுகள் மேயாது. 

_நீர் வழித் தடங்கள்_ அருகில்:-
1. பூவரசு மரம்
2. பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம். 
1. கறுவேப்பிலை
2. லட்சக் கொட்டைக் கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி 
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு 
போன்ற மரங்கள் நடலாம்

*வழிபாட்டுத் தலங்கள்*-
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4. பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்

நாம் இயற்க்கையை காப்பாற்றி பேணி காக்க வேண்டுமென்றால், மழை பெய்து வளம் பெருக, வெய்யில் கொடூறத்திலிருந்த நம்மை, உயிரணங்களை காப்பாற்ற வேண்டுமென்றால் மரங்கள் நிறைந்த வனமாக மாற்றுவோம்,  

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். 
மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். 

வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!

நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!!

நன்றி!
பகிர்வு

1 comment:

Anonymous said...

தங்கள் ஆலோசனை சிறப்பு... அதேசமயம் ஊர் ஊருக்கு மரங்களை வெட்டி செங்கல் சூலைக்கு மரங்களை கொண்டு செல்வோரே அதிகம்.. அதைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லையே.. நம்மில் எத்தனை பேர் வீட்டருகே மரம் 🌲 வளர்க்கிறோம்.. பக்கத்து வீட்டு மரம் இலை தழைகள் என் வீட்டில் குப்பை யாக விழுகிறது என சண்டையிடும் முட்டாள்கள் இருக்கிறார்களே என்ன செய்ய..??..