படித்ததில் பிடித்தது
ஒரு பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஓய்வறையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்.
01 உங்களுக்கு இப்போது ஓய்வுப் பாடவேளை தான்.
02 ஆனால் பாடசாலையில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வகுப்பிற்கு ஆசிரியரின்றி மாணவர்கள் இருக்கலாம்.
03 அந்த வகுப்பு உங்களுக்கு உங்கள் பாடத்திற்கு தொடர்பில்லாத வகுப்பாய் இருக்கலாம்.
04 அவர்கள் தற்போது ஒழுக்க, நடத்தை, கட்டுப்பாடு ரீதியாக மேற்பார்வையின்றி செயற்படலாம்.
05 அவர்களது கட்டுமீறிய விளையாட்டுக்கள் அவர்களது பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்தலாம்.
06 இவையெல்லாம் உங்களது பொறுப்பு கடமை இல்லாதிருக்கலாம்.
07 ஆனால் சில வேளைகளில் அந்த வகுப்பு மாணவர்கள் உங்கள் இன்றைய நாளை அழகாக்கக் கூடிய வாய்ப்பிருக்கலாம்.
08 உங்கள் சந்ததியின் ஏதோவொரு தலைமுறைக்கு உங்களால் புண்ணியம் தேடித் தரக்கூடியவர்களாக இருக்கலாம்.
09 அவர்கள் வாழ்வில் உங்களை மறக்க முடியாத ஆசிரியர்களாக ஆக்கக் கூடிய வாய்ப்பிருக்கலாம்.
10 எங்கோ ஒரு பள்ளியில் உங்கள் பிள்ளை கூட இது போன்று கவனிப்பின்றி இருக்கலாம்.
11 இன்றைய நாளின் இந்த நேரத்தினை செலவின்றி தேடும் புண்ணிய காரியத்திற்காக செலவிடுவதாக எண்ணி அந்த வகுப்பிற்கு செல்லுங்கள்.
12 கற்பிக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடன் அன்புடன் நட்புடன் உரையாடுங்கள்.
13 அவர்களுடன் விளையாடுங்கள்
14 அவர்களதும் உங்களதும் நேரத்தினை அழகாக்குங்கள்.
15 பாடசாலைக்கு தரமான மாணவர்களை உருவாக்க சம்பளத்தை தாண்டி உழைக்க கிடைக்கும் வாய்ப்பினை தவற விடாதீர்கள்.
16 அந்த ஆத்ம திருப்தியினை அனுபவித்துப்பாருங்கள்.
17 புறம் பேசி,நேரத்தினை வீணடித்து தேடும் பாவங்கள் தொலைந்து உங்கள் தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் புண்ணியம் கிடைக்கும்.
18 உங்களைத் தேடி ஓடிவரும் ஒரு மாணவர் கூட்டத்தை பெறுவீர்கள்.
19 வாழ்க்கையின் அர்த்தம் அழகாகும்.
20 வரங்கள் நீங்கள் வேண்டாமலேயே கிடைக்கும்.
21 பாடசாலையின் பெறுமதி மிக்க ஆசிரியர் இனி நீங்கள் மட்டுமே.
நன்றி
பகிர்வு பதிவு..
1 comment:
அருமை...
Post a Comment