Wednesday, June 01, 2022

அன்பெனும் நீர்....

 புதிய பார்வை   கோணம்..

ஒரு
வரலாற்று
நிகழ்வு ::

அசோகர்
காலத்தில் 
அவருடைய
தலைநகரான
பாடலிபுத்திரத்தில்
ஒரு சிறைச்சாலை
இருந்தது

அதன் பெயர்
'அசோகர் நரகம்'

அந்த 
சிறைச்சாலையில்
உள்ளே சென்றவர்
யாரும் உயிருடன்
வெளியே 
வந்ததில்லை

புத்த துறவி
ஒருவர் செய்யாத 
குற்றத்திற்காக
உள்ளே அடைக்க
பட்டார்

அங்கே 
மிக கொடூர
தண்டனைகள் 
அவருக்கு 
விதிக்க பட்டன

ஆனால் எந்த 
தண்டனையும்
அவருக்கு 
எந்த
பாதிப்பையும்
ஏற்படுத்தவில்லை

சிறை 
அதிகாரிகள்
ஆச்சரியப்பட்டு
அவரை 
கொதிக்கும்
கலனில் 
போட்டனர்

அவர் சர்வ 
சாதாரணமாக
எழுந்து 
வெளியில்
வந்தார்

இதை 
பார்த்த 
அதிகாரிகள்
பயந்து போய்
அசோகரிடம்
முறையிட்டனர்

அசோகர் 
வந்தார்

அவரை கண்டு 
அதிசயப்பட்டு
அமைதியாக 
வெளியே 
செல்ல
எத்தனித்தார்

மூத்த 
சிறை
அதிகாரி 
அசோகரிடம்

  புத்த 
  துறவியை 
  என்ன செய்வது ?

என்றதுடன்...

  உள்ளே 
  வந்தவர்கள் 
  வெளியே 
  செல்ல 
  கூடாது

  அரசர்
  உள்பட

என்று 
கூறினார்

இதை கேட்டு 
ஆத்திரப்பட்ட 
அசோகர்

புத்த
துறவியை
விடுதலை
செய்ததோடு

தன்னை
வெளியே விட
மறுத்த 

அந்த மூத்த 
அதிகாரியை 
தூக்கி
கொதிக்கும் 
கலனில் போட 
உத்தரவு 
பிறப்பித்தார்

அடுத்த
சில நொடிகளில்

தவறு 
செய்யாத 
துறவிக்கு 
தண்டனை 
தந்ததை 
எண்ணி 
எண்ணி 
மனம் 
நொந்தார்

எதிர்த்து
பேசிய
மூத்த சிறை
அதிகாரியை
கொதிக்கும்
கலனில் 
போட 
உத்தரவு
பிறப்பிக்க
பட்டதற்கு
மனம்
வெந்தார்

சிறைக்கு
வெளியே 
வந்த 
அசோகர் 

அடுத்த சில
நாட்களில் 
அந்த சிறை
சாலையையே 
இடித்து 
தரைமட்டமாக்க 
உத்தரவு 
பிறப்பித்தார்

இடிந்தது 
சிறைச்சாலை 
மட்டுமல்ல

அவரின் 
செருக்கு 
வெறுப்பு
ஆணவம் 
அதிகாரம் 
அத்தனையும் 
தான்

அன்றில்
இருந்து
அசோகர் 
மனதளவில்
மாறிபோனார்

அதன்  
தொடர்ச்சியாக
நடைபெற்ற
கலிங்க போர்
அவரை 
முற்றிலுமாக
புரட்டி போட்டது

  வன்முறையை
  வேருடன் அழிக்க
  ஒரே வழி

  'அ ன் பு '

என்பதை 
நிரூபிக்க,
புத்த மதத்தை
தழுவினார்

இது 
கதையல்ல
நிஜம்

  வாங்க ::

  நெருப்பை
  நெருப்பால்
  அணைக்க
  முடியாது

  அது
  நீரினால் தான்
  அணையும்

  வெறுப்பை
  வெறுப்பால்
  அழிக்க 
  முடியாது

  அது
  அன்பினால் 
  தான் அழியும்

  உலகில்
  மென்மையானது
  அன்பு

  உலகில்
  வலிமையானது
  அன்பு

  ஆதலினால்
  அன்பு 
  செய்வோம்

  அகிலத்தை
  வெல்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

 நன்றி..
முனைவர்.சுந்நரமூர்த்தி

பகிர்வு பதிவு

No comments: